உஸ்ரி அருவி
உஸ்ரி அருவி | |
---|---|
உஸ்ரி அருவி | |
![]() | |
அமைவிடம் | கிரீடீஹ் மாவட்டம், சார்க்கண்டு, இந்தியா |
ஆள்கூறு | 24°5′47″N 86°22′14″E / 24.09639°N 86.37056°E |
ஏற்றம் | 288 மீட்டர்கள் (945 அடி) |
மொத்த உயரம் | 12 மீட்டர்கள் (39 அடி) |
வீழ்ச்சி எண்ணிக்கை | 3 |
நீர்வழி | உஸ்ரி ஆறு |
உஸ்ரி அருவி(Usri falls), இந்தியாவின் சார்க்கண்டு மாநிலத்தில் கிரீடீஹ் மாவட்டத்தில் அமைந்துள்ள அருவியாகும். இது மிகவும் பிரபலமான சுற்றுலாத்தளமாகும்.[1][2][3] உஸ்ரி என்பதற்கு "அழகின் பிறப்பிடம்" என்று பொருள்.
அமைவிடம்
[தொகு]உஸ்ரி அருவியானது கிரீடீஹ் நகரத்தின் கிழக்குப்பகுதியிலிருந்து 13 கிலோமீட்டர் (8.1 மைல்) தொலைவில், துண்டிக்கு செல்லும் சாலையில் உள்ளது.[3] வாடகையூர்திகள், குதிரை வண்டிகள், ஆட்டோ ரிக்சாக்கள் (தானி) இந்தப்பகுதியில் உள்ளன.[1][4][5]
அமைப்பு
[தொகு]உஸ்ரி ஆறு பராக்கர் ஆற்றின் துணையாறு ஆகும், மிகவும் செங்குத்தான சரிவான பக்கங்களையுடைய ஆழமான பள்ளத்தாக்கில் பாய்கிறது. உஸ்ரி அருவி 12 மீட்டர் (39 அடி) உயரத்தில் 3 சிறு அருவிகளாகப் பிரிந்து விழுகிறது. இது அடர்ந்த காடுகளால் சூழப்பட்டுள்ளது.[4]
இந்தப்பகுதி கடினமான பாறைகளைக் கொண்ட சிக்கலான அமைப்பினைக் கொண்டிருக்கிறது. சில பாறைகள் பெரும் வடிவம் கொண்ட பகுதிகளாகப் பிளக்கப்பட்டு, அவை பளபளப்பாக மெருகிடப்பட்டு, பல வண்ணங்கள் பூசப்பட்டுள்ளது. அருவியைத் தாண்டிய பிறகு ஆற்றுப்படுக்கையின் தன்மை மாறிவிடுகிறது. கீழ்ப்பகுதி தட்டையான அதிக பரப்புடையது, இது ஆற்றுப் பள்ளத்தாக்காக வடிவம் பெறுகிறது .[6] இந்த இடத்துடன் கண்டோலி அணைக்கட்டு மற்றும் பரஸ்நாத் மலையுடன் இணைத்து, ஒரு முக்கியமான சுற்றுலாத்தளமாக மாற்றுவதற்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் அரசாங்கம் மேற்கொண்டு இருக்கிறது .[7][8]
இதையும் காண்க
[தொகு]- இந்திய அருவிகளின் பட்டியல்
விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Giridih
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Giridih Tourism". Official Website of Giridih. Retrieved 7 March 2012.
- ↑ "Jharkhand Fast Facts". Jharkhand. Envis Centre on Ecotourism, Govt of India. Archived from the original on 7 பெப்பிரவரி 2012. Retrieved 7 மார்ச்சு 2012.
- ↑ 3.0 3.1 Dr. B.R. Kishore, Dr. Shiv Sharma (2008). India - A Travel Guide. Diamond Pocket Books (P) Ltd. p. 302. ISBN 9788128400674.
- ↑ 4.0 4.1 "Giridih attractions". sulekha.com. Retrieved 2010-04-17.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Usri Falls". india9.com. Retrieved 2010-04-20.
- ↑ Sharma, Hari Shanker. Perspectives in geomorphology, Volume 1 By Hari Shanker Sharma. Retrieved 2010-04-17.
- ↑ "Ire over park entry fee". The Telegraph (Calcutta). January 10, 2008. http://www.telegraphindia.com/1080110/jsp/jharkhand/story_8764248.jsp.
- ↑ Prasad, Basudeo (1 January 2009). "Sustainable eco-tourism development: A case study of Jharkhand state". Spectrum 1 (1): 62. http://www.environmentportal.in/feature-article/sustainable-eco-tourism-development-case-study-jharkhand-state. பார்த்த நாள்: 6 April 2012.