உஷா கல்யாணம் (1936 திரைப்படம்)
Appearance
உஷா கல்யாணம் | |
---|---|
உஷா கல்யாணம் திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | கே. சுப்பிரமணியம் |
தயாரிப்பு | முருகன் டாக்கீ பிலிம் கம்பெனி |
நடிப்பு | சி. வி. வி. பந்துலு, எஸ். டி. சுப்புலட்சுமி, எம். வி. கிருஷ்ணப்பா, எம். எஸ். பட்டம்மாள், ஜி. பட்டு ஐயர். |
வெளியீடு | 1936 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
உஷா கல்யாணம் உடன் கிழட்டு மாப்பிள்ளை என (இருபட இணைப்பு) 1936 ஆம் ஆண்டு வெளிவந்த புராண தமிழ்த் திரைப்படமாகும். முருகன் டாக்கீ பிலிம் கம்பெனி பட நிறுவனம் தயாரித்து, கே. சுப்பிரமணியம் இயக்கிய இத்திரைப்படத்தில், பாஸ்கரதாஸ், சதாசிவதாஸ் போன்றோர் பாடல்கள் படைத்து, சி. வி. வி. பந்துலு, எஸ். டி. சுப்புலட்சுமி, எம். வி. கிருஷ்ணப்பா, எம். எஸ். பட்டம்மாள் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.[1]
உப தகவல்
[தொகு]உஷா கல்யாணம் திரைப்படத்துடன், கிழட்டு மாப்பிள்ளை எனும் படமும் திரையிடப்பட்டது. இப்படத்தில், என். எஸ். கிருஷ்ணனும், டி. ஏ. மதுரமும் முதன்மை வேடமேற்று நடித்திருந்தனர்.[1]
சான்றாதாரங்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "1936 இல் வெளியான படப்பட்டியல்". lakshmansruthi.com (தமிழ்). 2007. Archived from the original on 2016-10-28. பார்க்கப்பட்ட நாள் 2016-10-26.