உவாங்கு ஓ
உவாங்கு ஓ (கொரிய மொழி: 허황옥)[1][2] என்பவர் கிபி3 ஆம் நூற்றாண்டை சேர்ந்த 'செம்பவளம்' என்ற கொரிய நாட்டு வரலாற்று நூலில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு இளவரசி ஆவார். சம் யுக் யூசாவின் கூற்றுப்படி இவர் தனது 16 வயதில் கியூம்க்வான் கயா இராச்சியத்தின் மன்னர் சூரோவை திருமணம் செய்து கொண்டார் எனவும் இவர் தொலைதூர இராச்சியமான "ஆயநாடு" விலிருந்து கப்பலில் வந்தார் எனவும், இவரே கியும்க்வான் கயா இராச்சியத்தின் முதல் ராணியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெயர்
[தொகு]இவர் பெயர் கொரிய மொழியில் ஹியோ ஹ்வாங்-ஓகே எனப்படுகிறது. இதன் பொருள் மஞ்சள் கல் என்பதாகும்.[3] இந்திய பண்பாட்டு தொடர்புகளுக்கான மன்றம் இந்த பெயர் சூரிரத்னா (ஸ்ரீரத்னா) என்ற பெயரின் கொரிய வடிவம் என கருதுகிறது.[4] தமிழ் ஆய்வாளர்கள் இந்த பெயர் செம்பவளம்[5] என்ற பெயரின் கொரிய வடிவம் என்றும் பொற்கலை[6] என்ற பெயரின் கொரிய வடிவம் என்றும் கருதுகின்றனர்.
இன அடையாளப்படுத்தல்
[தொகு]இவர் வட இந்தியாவில் அயோத்தியை சேர்ந்தவர் என இந்திய ஆராய்ச்சியாளர்கள் சிலர் கருதினர். அதற்கு ஆதாரமாக உத்திர பிரதேச மாநிலத்தின் சின்னம் மீனாக இருப்பதையும் இந்த இளவரசியின் கல்லறையில் அதே மீன் சின்னம் இருப்பதையும் காட்டினர். மேலும் இந்த இளவர்சியின் சொந்த நாடாக குறிப்பிடப்பட்ட ஆயுத்த என்ற நாட்டின் பெயர் அயோத்தியாவோடு ஒன்றி வருவதையும் காட்டி அந்த முடிவுக்கு வந்தனர். அதன் நினைவாக தென் கொரியா நாட்டுடன் இணைந்து இவருக்கு 2018 ஆம் ஆண்டில் ஒரு நினைவு தூபி காட்டியுள்ளனர்.[7][8]
இவரது தமிழகத் தொடர்பு பற்றி உலகத்தமிழாராய்ச்சி நிறுவனமும் தமிழ் மரபு அறக்கட்டளையும் நடத்திய கருத்தரங்கில் இந்த இளவரசியின் ஆயுத்த நாடு சங்க கால தமிழ்நாட்டின் ஆய் நாடு என கூறினர்.[5][9] மேலும் உத்திரபிரதேச மாநிலத்தின் சின்னமாக மீன் வழக்கத்தில் வந்தது சுல்தான்களின் காலத்தில் தான் என்பதை வைத்து அயோத்தியா தான் இந்த இளவரசியின் ஊர் என்பதை மறுத்தனர்.[10][11] இவர் அக்கால ஆய் நாடு[12] தற்பொழுது கன்னியாகுமரியை பூர்விகமாக சேர்ந்தவர் எனவும் கூறுகின்றனர்.
இந்த இளவரசியின் ஆயுத்த நாடு இன்றைய தாய்லாந்து நாட்டில் இருந்த ஆயுத்த முடியரசாங்கம் என்ற கருத்தையும் சில ஆய்வாளர் கொண்டுள்ளனர்.[13] ஆனாலும் ஆயுத்த முடியரசாங்க நகரம் கி.பி. பதினான்காம் நூற்றாண்டிலேயே தோற்றம் பெற்றதால் ஒன்றாம் நூற்றாண்டு இளவரசியோடு அதை தொடர்புப்படுத்துவது தவறு என மறுப்புகளும் உள்ளன.[14]
குடும்பமும் வாரிசுகளும்
[தொகு]இன்றைய தென் கொரியா மற்றும் வட கொரியா நாடுகளில் ஆறு மில்லியனுக்கும் அதிகமான கொரியர்கள், குறிப்பாக கிம்ஹே கிம், ஹியோ மற்றும் லீ (யி) குலங்களைச் சேர்ந்தவர்கள் இந்த இளவரசி மற்றும் அரசர் கிம் சூரோவின் 12 குழந்தைகளின் நேரடி சந்ததியினர்களின் பரம்பரை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவரது பூர்வீக இராச்சியம் ஆயி இராச்சியத்தில் அமைந்திருப்பதாக நம்பப்படுகிறது. கொரியாவில் இந்த இளவரசிக்கு ஒரு கல்லறை உள்ளது.[15]
இந்த இளவரசியின் மகன்களான எய்சின், கக்குசோ, சிகம், தியோன் கியோன், துமு, சியோங்கு இயோங்கு, கைசாங்கு போன்றோர் தாய்மாமாவான போ-ஓக்கு வழியை பின்பற்றி பௌத்த ஓகக்கலைகளை கற்றனர் என்றும் நம்பப்படுகிறது.[16] இந்த இளவரசியின் மகள்களில் ஒருவர் தல்கேயின் மகனையும் இன்னொருவர் சில்லாவின் அரசகுடும்பத்தை சேர்ந்த ஒருவரையும் மணந்தனர். முன்னால் தென்கொரிய அதிபர் இலீயின் துணைவியான கிம் இயூன்-ஆக்கு இந்த இளவரசியின் வழிவந்தவராக கூறப்படுகிறார்..[17][18]
வரலாற்றுத்தன்மை
[தொகு]இவரின் இன அடையாளம் பற்றி பல்வேறு கருத்துகள் இருந்தாலும் இவர் உண்மையாக வாழ்ந்ததற்கான வரலாற்று சான்றுகளே இல்லை என மறுக்கும் தரப்பும் உள்ளது. இந்த இளவரசி பற்றி முதலில் எழுதப்பட்ட சம்யுக் யுசா நூல் ஆசிரியர் கிம் சுரோவின் தென்கொரிய அரசாங்கத்தை புனிதப்படுத்துவதற்காக அவர் மணந்தது புத்தர் பிறந்த அயோத்தியா நாட்டின் இளவரசி என கூறினார் என்கின்றனர்.[19] இந்தியாவில் இருந்து கொரியா வரை பயணம் செய்யுமளசு தொழில்நுட்பங்கள் வளராத காலத்தில் இந்த பயணத்தின் சாத்தியக்கூறுகளும் கேள்விக்கு உட்படுத்தப்படுகிறது.[19]
அக்கால கொரிய இலக்கிய மரபுப்படி இந்தியாவில் இருந்து வந்தவை எல்லாம் புனிதத்தன்மையோடு அடையாளப்படுத்தும் வழக்கம் இருந்ததையும் சுட்டிக்காட்டுகின்றனர்.[20] மேலும் இந்தியாவில் இருந்து கொரியா வந்ததற்கான கொரிய சீன இலக்கியங்களில் கிடைத்த அளவு இந்திய இலக்கியங்களில் கிடைக்கவில்லை என்பதையும் மறுப்பதற்கான காரணமாய் முன் வைக்கின்றனர்.[19][20]
சம்யுக் யுசா நூல் எழுதப்பட்ட அதே காலத்தில் கரக்குக்கி நூலும் எழுதப்பட்டது. அதில் இந்த கிம் சுரோ அரசரின் அரசாங்க தோற்றுவாய் பற்றி மாறுபட்ட கூற்றுகள் உள்ளன.[21][21] சம்யுக் யுசா, கரக்குக்கி போன்ற நூல்கள் இரண்டாம் நிலை நூல்கள் என்பதாலும் ஒவ்வொரு நூலிலும் இந்த அரசாங்க தோற்றுவாய் பற்றி மாறுபட்ட கருத்துகள் இருப்பதும் இந்த இளவரசியின் வரலாற்றுத்தன்மையை கேள்விக்கு உள்ளாக்குகின்றன.[22] இதே நூல்களில் அரசர் கிம் 157 ஆண்டுகள் வாழ்ந்ததாகவும் எதிரிகளிடம் இருந்து மக்களை காப்பாற்ற கழுகாகவும் பருந்தாகவும் மாறினார் போன்ற கதைகளை கொண்டுள்ளதால் இவற்றை வரலாற்று சான்றாக கொள்ள மறுக்கின்றனர்.[22] ஆனால் கொரியாவில் அதிக ஆண்டுகள் வாழ்ந்த அரசரின் வயது 97 மட்டுமே ஆகும்.[23][24] இது போன்ற புனிதப்படுத்தல் காரணமாகவே அரசர் கிம் சுரோ மற்றும் உவாங்கு ஓவின் வரலாற்றுத்தன்மை கேள்விக்கு உட்படுத்தப்படுகின்றன.
இவரின் தோற்றுவாய் குறித்து மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும் இவரின் இந்திய அடையாளம் இந்திய கொரிய அரசியல் நல்லுறவை வளர்க்க நல்வாய்ப்பாக பயன்படுவதை ஏற்கின்றனர்.[25]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The Indian princess who became a South Korean queen" (in en-GB). BBC News. 2018-11-04. https://www.bbc.com/news/world-asia-india-46055285.
- ↑ "Princess Suriratna of India marries King Suro of the Gaya Kingdom nearly 2,000 years ago". The Korea Post (in கொரியன்). 2020-09-08. பார்க்கப்பட்ட நாள் 2021-01-21.
- ↑ Won Moo Hurh (2011). "I Will Shoot Them from My Loving Heart": Memoir of a South Korean Officer in the Korean War. McFarland. pp. 15–16. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7864-8798-1.
- ↑ "The Legend of Princess Sriratna | Official website of Indian Council for Cultural Relations, Government of India". www.iccr.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2022-01-29.
- ↑ 5.0 5.1 Historical, Archeological, Linguistic, Cultural and Biological links between Korea and India: Kaya and Pandiya
- ↑ . தென்காசி சுப்பிரமணியன் ஆய்வுக்கட்டுரைகள். Vol. 2. உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம். 2022.
{{cite book}}
:|journal=
ignored (help); Missing or empty|title=
(help); Unknown parameter|authormask=
ignored (help) - ↑ "Ayodhya has 'important relations' with South Korea — Envoy refers to Indian princess link". theprint.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-01-21.
- ↑ "The Indian princess who became a South Korean queen". www.tamil.koreatamilsangam.com.
- ↑ கொரியாவின் தமிழ் ராணி (ஆழி பதிப்பகம், சென்னை. 2021)
- ↑ Tamil–Korean relationship
- ↑ "தென்கொரியா இந்திய வரலாற்று காலநிலைகளில் தமிழியல்களின் பங்களிப்பு - இரா.சிவ.பாலசுப்பிரமணி ஆ நேர்". www.bbc.com (in ஆங்கிலம்).
- ↑ "The Indian woman who went to Korea and became the Queen – the Korea-Indian connection – Do the pro-Tamil groups want to communalize it? [3]". Indology (in ஆங்கிலம்). 2018-05-24. பார்க்கப்பட்ட நாள் 2021-07-16.
- ↑ Robert E. Buswell (1991). Tracing Back the Radiance: Chinul's Korean Way of Zen. University of Hawaii Press. p. 74. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8248-1427-4.
- ↑ Skand R. Tayal (2015). India and the Republic of Korea: Engaged Democracies. Taylor & Francis. p. 23. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-317-34156-7.
Historians, however, believe that the Princess of Ayodhya is only a myth.
- ↑ "செம்பவளம் பற்றிய ஆய்வு". simplicity.in. பார்க்கப்பட்ட நாள் 2021-07-16.
- ↑ Kim Choong Soon, 2011, Voices of Foreign Brides: The Roots and Development of Multiculturalism in Korea, AltairaPress, USA, Page 30-35.
- ↑ Lee, Tae-hoon (2010-01-25). "India Is First Lady Kims Ancestral Home". The Korea Times (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-30.
{{cite web}}
: CS1 maint: url-status (link) - ↑ "Lamp of the east". Deccan Herald (in ஆங்கிலம்). 2011-08-13. பார்க்கப்பட்ட நாள் 2021-07-30.
- ↑ 19.0 19.1 19.2 "'허왕후 설화'는 어떻게 실제 역사로 둔갑했나". 뉴스톱 (in கொரியன்). 2018-09-10. பார்க்கப்பட்ட நாள் 2020-05-18.
- ↑ 20.0 20.1 수정: 2019.12.19 09:23, 입력: 2019 12 17 06:00 (2019-12-17). "[이기환의 흔적의 역사] "한반도엔 없는 돌"…가락국 허황후 '파사석탑의 정체'". www.khan.co.kr (in கொரியன்). பார்க்கப்பட்ட நாள் 2021-02-09.
{{cite web}}
: CS1 maint: numeric names: authors list (link) - ↑ 21.0 21.1 Lee, Yang-jae (2022-08-09). "가야국의 실체와 『가락국기』" (in Korean). Tongilnews. https://www.tongilnews.com/news/articleView.html?idxno=205847.
- ↑ 22.0 22.1 임동근 (2017-08-11). "[연합이매진] 인도 공주 허황옥이 가야에 온 까닭은". 연합뉴스 (in கொரியன்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-19.
- ↑ Kim, Hung-gyu (March 2012). "Defenders and Conquerors: The Rhetoric of Royal Power in Korean Inscriptions from the Fifth to Seventh Centuries". Cross-Currents: 1. https://cross-currents.berkeley.edu/sites/default/files/e-journal/articles/final_kim.pdf.
- ↑ "Queen Heo Hwang-ok". Namu (in Korean).
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "[김성회의 재미있는 다문화이야기] 이주민 '허황옥'과 '처용설화'는 사실일까?". 에듀인뉴스(EduinNews) (in கொரியன்). 2019-05-05. பார்க்கப்பட்ட நாள் 2021-03-25.