உள்ளடக்கத்துக்குச் செல்

உவர்க்கண்ணூர்ப் புல்லங்கீரனார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உவர்க்கண்ணூர்ப் புல்லங்கண்ணனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர்.[1] அகநானூறு பாடல் எண் 146 ஒன்று மட்டும் இவர் பாடியதாகச் சங்கநூல் தொகுப்பில் உள்ளது. இது முல்லைத் திணைப் பாடல்.

புல்லம் என்பது இந்தப் புலவர் கண்ணனாரின் ஊர். இந்த ஊரில் கிணறு தோண்டும்போது உப்புதண்ணீர் கண்ணீர் போலச் சொட்டுச் சொட்டாக ஊறியதால் இந்த ஊருக்கு இப் பெயரைடை தரப்பட்டுள்ளது.

பாடல் தரும் செய்தி

[தொகு]

பரத்தையிடம் இருந்துவிட்டு மீண்ட தலைமகனைத் தலைவி வாயில் மறுத்த (வீட்டு வாயிலில் நுழையாதே எனத் தடுத்த) பாடல் இது.

தலைவி பரத்தையைத் 'தாய் ஓம்பு ஆய்நலம் வேண்டாதோள்' என்று குறிப்பிடுவது மிகச் சிறந்த விளக்கத்தொடர்.

சேற்றில் கிடக்கும் பெண் எருமையை ஆண் எருமை சேற்றில் பாய்ந்து தழுவிக்கொண்டு வரும் ஊரன் என்று தலைவி தலைவனைக் குறிப்பிடுவது பொருத்தமான உள்ளுறை உவமம்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. கா., கோவிந்தன் (1964). சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை - கo. மாநகர்ப் புலவர்கள் -க. (மறுபதிப்பு) (PDF). திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட். p. 60.