உள்ளடக்கத்துக்குச் செல்

உலூயிசா மரியா இலாரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உலூயிசா மரியா இலாரா
Luisa María Lara
பிறப்புஉலூயிசா மரியா உலோபேழ்சு
9 சூன் 1966 (1966-06-09) (அகவை 58)
அல்கலா லாஇரியல், எசுப்பெய்ன்
படித்த கல்வி நிறுவனங்கள்கிரேனடா பல்கலைக்கழகம்
பணிவானியற்பியலாளர்
பணியகம்ஆந்தலூசியா வானியற்பியல் நிறுவனம்

உலூயிசா மரியா இலாரா உலோபேழ்சு (Luisa María Lara López) (பிறப்பு: 9 ஜூன் 1966) ஓர் எசுப்பானிய வானியற்பியலாளர் ஆவார். இவர் 2010 இல் இருந்து ஆந்தலூசியா வானியற்பியல் நிறுவனத்தின் சூரியக் குடும்பத் துறையிலெஉப்பானியத் தேசிய ஆராய்ச்சி மன்ற ஆராய்ச்சியாளராக இருந்துவருகிறார்.

இவர் கோள்கள், புறவெளிக்கோள்கள், வால்வெள்ளிகள் ஆகிய வான்பொருட்களின் வளிமண்dடலங்களின் இயற்பியல், வேதியியல் ப்டிமங்களை உருவாக்கி ஆய்வு மேற்கொள்கிறார். இதற்காக சூரியக் குடும்பத்தில் உள்ள வான்பொருட்களின் தேட்டத்தில் தொலைவில் உணர்தல் நுட்பத்தையும் கள நோக்கீட்டு முறையையும் பயன்படுத்துகிறார். இவர் ஐரோப்பிய விண்வெளி முகமையின் உரோசெட்டா விண்கலத் திட்டத்தில் பங்கேற்று பெயர்பெற்றவர் ஆவார்.

வாழ்க்கை

[தொகு]

இளமையும் கல்வியும்

[தொகு]
உரோசெட்டா விண்கலம்

இவர் இரியலில் உள்ள அல்கலாவில் பிறந்தார், இவர் வானத்தைக் கண்டு மகிழ்ந்து காதலிக்கும் பண்பைத் தன் தாயிடம் இருந்து பெற்றதாகக் கூறுகிறார். இவரது தாயார் கிரேனடாவில் அமைந்த சிற்றூரான பியூயர்ட்டோ உலோப்பில் பொது விளக்கு அமைப்பு இல்லாமையைப் பயன்படுத்தித் தான் இந்த மாபெரும் காண்திறத்துக்கு வந்தமையை விளக்குகிறார். மூன்று அகவையிலேயே வான்வெளியால் கவரப்பட்ட இவர் தன் ஏழு வயதி அறிவியலும் விண்மீன் பற்றியும் படிக்கும் தெளிவைப் பெற்றுவிட்டார். தனது வீட்டு மேல்மாடியில் இருந்து கண்ணுற்ற வெள்ளியின் கட்டங்களை தன் குறிப்பேட்டில் வரையத் தொடங்கியுள்ளார்.[1]

இவர் தன் பள்ளிப் படிப்பைப் பினோசு பூயெந்தேவில் முடித்துவிட்டு எசுப்பானிய மொழி இளம்பட்டப் படிப்பை இல்லோரவில் தொடர்ந்துள்ளார். பல்கலைக்கழகப் புகுமுக வகுப்பைக் கனடாவில் மேற்கொண்டுள்ளார். பிறகு இவர் இயற்பியல்சார் அறிவியல் புலங்களில் கிரேனடா பல்கலைக்கழகத்தில் 1989 இல் இளவல் பட்டத்தைப் பெற்றார். இவர் 1993 இல் தன் முனைவ ப்ட்ட்த்தை முடித்துள்ளார்.[2]

வாழ்க்கைப்பணி

[தொகு]

இவர் 2010 இல் இருந்து அந்தாலூசியா வானியற்பியல் நிறுவனத்தில் சூரியக் குடும்பத் துறையில் அறிவியல் ஆராய்ச்சியாளராக இருந்து வருகிறார்.[3] இவர் மியூதோனில் உள்ள பாரிசு நோக்கீட்டகம், பிளாங்கு சூரியக் குடும்ப ஆராய்ச்சி நிறுவனம், ஐரோப்பிய விண்வெளி மையம், டோக்கியோவில் உள்ள யப்பான் தேசிய வானியல் நோக்கீட்டகம் போன்ற பல பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளார்.[1]

இவர் எசுப்பானியாவின் ANEP எனும் தேசிய மதிப்பீட்டு, முன்கணிப்பு முகமையின் விண்வெளிப் பகுதிக்கு இணை ஒருங்கிணைப்பாளராக இருந்துள்ளார். மேலும் இவர் ஐரோப்பிய விண்வெளி முகமையின் பணிக்குழு, பன்னாட்டு விண்வெளி அறிவியல் நிறுவனத்தின் அறிவியல் குழு போன்ற தன்னாட்டு, பன்னாட்டு விண்வெளி அறிவியல், தொழில்நுட்பக் குழுக்களின் மேலாண்மைப் பணிகளிலும் பங்கேற்றுள்ளார்.[4]

இவர் 2016 இல் அறிவியல், தொழில்நுட்ப ஆய்வாளராக பல்வேறு விண்வெளி ஆய்வு திட்டங்களில் பங்கேற்றுள்ளார். அவற்ரில், 67பி/சூர்யுமோவ்-கெராசிமென்கோ வால்வெள்ளிக்கு ஏவிய ஐரோப்பிய விண்வெளி முகமையின் உரோசெட்டா(விண்கலம்) ,[5] புதன் கோளின் தேட்டம் சார்ந்த, ஐரோப்பிய விண்வெளி முகமையும் ஜாக்சா எனும் யப்பானிய விண்வெளி ஆராய்ச்சி முகமையும் இணைந்து பணியாற்றிய பெப்பிகொலம்போ திட்டம்,[2][6] வியாழ்னையும் அதன் நிலாக்களான கலீலிய நிலாக்களை ஆய ஏவிய வியாழன் பனிக்கட்டி நிலா தேட்டக்கலம் ஆகியன அடங்கும்.[7] இதேபோல, காரிக்கோளுக்கான நாசா-ஈசா விண்வெளித் திட்டங்களின் அறிவியல், தொழில்நுட்ப வரையறைக் குழுக்களிலும்புவிக்கு சிறுகோள் பொருளைக் கொணரும் ஈசா திட்டமொன்றிலும் பஙுபற்றியுள்ளார்.[8]

இவர் ஆய்விதழ்களில் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் பன்னாட்டுக் கருத்தரங்குகளில் 250 மேற்பட்ட உரைகளையும் வெளியிட்டுள்ளார்.

நூல்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Sánchez, José Miguel (14 January 2015). "Una andaluza en la Misión Rosetta" [An Andalusian on the Rosetta Mission]. I-DESQBRE (in Spanish). பார்க்கப்பட்ட நாள் 3 June 2019.{{cite magazine}}: CS1 maint: unrecognized language (link)
  2. 2.0 2.1 Aller, M. M. (17 May 2007). "Una misión con participación española explorará Mercurio" (in Spanish). Diario de León (León). https://www.diariodeleon.es/noticias/sociedad/mision-participacion-espanola-explorara-mercurio_323011.html. 
  3. "Personal" (in Spanish). Institute of Astrophysics of Andalusia. பார்க்கப்பட்ட நாள் 3 June 2019.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  4. "Previous Visiting Scientists". International Space Science Institute. Archived from the original on 3 ஜூன் 2019. பார்க்கப்பட்ட நாள் 3 June 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. Parra, Andrea G. (14 November 2014). "Granada viaja en la misión Rosetta" (in Spanish). Ideal (Granada). https://www.ideal.es/granada/201411/14/granada-viaja-mision-rosetta-20141114100929.html. 
  6. "Proyectos tecnológicos" [Technological Projects]. Institute of Astrophysics of Andalusia. Archived from the original on 8 January 2018. பார்க்கப்பட்ட நாள் 3 June 2019.
  7. Della Corte, Vincenzo; Schmitz, Nicole; Zusi, Michele; Castro, José Maria; Leese, Mark; Debei, Stefano; Magrin, Demetrio; Michalik, Harald et al. (28 August 2014). "The JANUS camera onboard JUICE mission for Jupiter system optical imaging". Proceedings of SPIE 9143. doi:10.1117/12.2056353. https://www.spiedigitallibrary.org/conference-proceedings-of-spie/9143/91433I/The-JANUS-camera-onboard-JUICE-mission-for-Jupiter-system-optical/10.1117/12.2056353.short?SSO=1. பார்த்த நாள்: 3 June 2019. 
  8. "El Sol talló Steins, el asteroide con forma de diamante" [The Sun Carved Steins, the Diamond-Shaped Asteroid] (in Spanish). RTVE. 8 January 2010. பார்க்கப்பட்ட நாள் 3 June 2019.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=உலூயிசா_மரியா_இலாரா&oldid=3952050" இலிருந்து மீள்விக்கப்பட்டது