உலூசியான்னி வால்கோவிச்
உலூசியான்னி வால்கோவிச் Lucianne Walkowicz | |
---|---|
வாழிடம் | சிகாகோ |
குடியுரிமை | அமெரிக்கர் |
துறை | வானியல் |
பணியிடங்கள் | கலிபோர்னியா பல்கலைக்கழகம், பெர்க்கேலி பிரின்சுடன் பல்கலைக்கழகம் ஆடுலர் கோளரங்கம் |
கல்வி கற்ற இடங்கள் | ஜான் ஆப்கின்சு பல்கலைக்கழகம் வாழ்சிங்டன் பல்கலைக்கழகம் |
ஆய்வேடு | M குறுமீன்களுக்கான தற்பொருத்தப் பொந்திகைப் படிம வளிமண்டலங்கள் (2008) |
ஆய்வு நெறியாளர் | சுசான்னி எல். காவ்லி |
விருதுகள் |
|
உலூசியான்னி வால்கோவிச் (Lucianne Walkowicz) ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் ஆடுலர் கோளரங்கத்தில் பணிபுரிகிறார். இவர் உடுக்கணக் காந்தச் செயல்பாடு ஆய்வுக்கும் தன் புறக்கோள் உயிரினங்களின் வாழ்தகவின்பாலான தாக்க ஆய்வுக்கும் பெயர்பெற்றவர்.[1] இவர் 2008 இல் இருந்து பேரியல் வானளக்கைத் தொலைநோக்கி, மாறும் விண்மீன் கூட்டிணைவுக்குத் தலைமை ஏற்றுவருகிறார் இவர் பேரியல் வானளக்கைத் தொலைநோக்கித் தரவு அறிவியல் ஆய்வுநல்கைத் திட்டத்தின் நிறுவன உறுப்பினரும் ஆவார்.[2][3][4] இவர் இருண்ட வான இயக்கப் பரப்புரைக்காக பன்னாட்டளவில் பெயர்பெற்றவர். இவர் 2011 ஆம் ஆண்டின் காவ்லி ஆய்வுறுப்பினராகவும் 2012 ஆம் ஆண்டின் TED முதுநிலை ஆய்வுறுப்பினராகவும் தேசிய அறிவியல் கல்விக்கழகத்தால் அறிவிக்கப்பட்டார்.[3][5]
இவர் வெர்னர் கெர்சோகின் 2016 ஆம் ஆண்டு ஆவணமாகிய Lo and Behold இல் தோன்றியுள்ளார்.[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Burke, Cassie Walker (15 July 2015). "Meet Lucianne Walkowicz, an astronomer who's on the hunt for extraterrestrial life". Crain's Chicago Business. http://www.chicagobusiness.com/article/20150715/NEWS08/150719924/meet-lucianne-walkowicz-an-astronomer-whos-on-the-hunt-for-extraterrestrial-life. பார்த்த நாள்: 25 June 2017.
- ↑ Scoles, Sarah (23 March 2017). "Astronomers Don't Point This Telescope—The Telescope Points Them". Wired. https://www.wired.com/2017/03/astronomers-dont-point-telescope-telescope-points/. பார்த்த நாள்: 25 June 2017.
- ↑ 3.0 3.1 "Lucianne Walkowicz". The White House Frontiers Conference. Archived from the original on 18 அக்டோபர் 2016. பார்க்கப்பட்ட நாள் 25 June 2017.
- ↑ Kahn, Steven M. "The Large Synoptic Survey Telescope" (PDF). Future and Science of the Gemini Observatory Meeting. பார்க்கப்பட்ட நாள் 25 June 2017.
- ↑ "Lucianne Walkowicz". TED (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 25 June 2017.
- ↑ "Lucianne Walkowicz". IMDb. பார்க்கப்பட்ட நாள் 25 June 2017.