உலுச்சேசைட்டு
உலுச்சேசைட்டு Lucchesiite | |
---|---|
![]() | |
பொதுவானாவை | |
வகை | வளைய சிலிக்கேட்டுகள் தூர்மலைன் குழு |
வேதி வாய்பாடு | CaFe3Al6(Si6O18)(BO3)3(OH)3O |
இனங்காணல் | |
நிறம் | கருப்பு |
படிக இயல்பு | மெல்லிய தகடுகள் |
படிக அமைப்பு | முக்கோணம் |
முறிவு | சங்குருவம் |
விகுவுத் தன்மை | நொறுங்கும் |
மோவின் அளவுகோல் வலிமை | 7 |
மிளிர்வு | பளபளப்பு |
கீற்றுவண்ணம் | சாம்பல் |
அடர்த்தி | 3.21 (கணக்கிடப்பட்டது.), 3.24 (அளக்கப்பட்டது.) (தோராயம்) |
ஒளியியல் பண்புகள் | ஒற்றை அச்சு (-) |
பலதிசை வண்ணப்படிகமை | அடர் பழுப்பு முதல் இளம் பழுப்பு வரை |
மேற்கோள்கள் | [1][2][3] |
உலுச்சேசைட்டு (Lucchesiite) என்பது CaFe3Al6(Si6O18)(BO3)3(OH)3O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். தூர்மலைன் என்ற சிலிக்கேட்டு கனிமக் குழுவில் இது புதிய உறுப்பினராகும்.[3] சுகார்லின் கனிமத்தின் கால்சியம் மற்றும் ஆக்சிசன் - ஒப்புமையாக உலூச்சேசைட்டு கனிமம் கருதப்படுகிறது.[3] இரண்டு இணை வகை பகுதிகளில் இக்கனிமம் காணப்படுகிறது. ஒன்று செக் குடியரசில் மற்றொன்று இலங்கை என்பன இவ்விரண்டு நாடுகளாகும். தூர்மலைன் குழுவின் மற்ற உறுப்பினர்களாக, இதுவும் முக்கோணமானது.[2][1]
சோடியம், மக்னீசியம், அலுமினியம், தைட்டானியம், மூவிணைதிறன் இரும்பு மற்றும் வனேடியம், பொட்டாசியம், மாங்கனீசு மற்றும் துத்தநாகம் ஆகியவை உலுச்சேசைட்டு கனிமத்தில் கலந்துள்ள அசுத்தங்கள் ஆகும்.
பன்னாட்டு கனிமவியல் சங்கம் உலுச்சேசைட்டு கனிமத்தை Lcc[4] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Bosi, F., Skogby, H., Ciriotti, M.E., Gadas, P., Novák, M., Cempírek, J., Všianský, D., and Filip, J., 2016. Lucchesiite, CaFe2+3Al6(Si6O18)(BO3)3(OH)3O, a new mineral species of the tourmaline supergroup. Mineralogical Magazine 80(1)
- ↑ 2.0 2.1 Bosi, F., Skogby, H., Ciriotti, M.E., Gadas, P., Novák, M., Cempírek, J., Všianský, D., and Filip, J., 2015. Lucchesiite, IMA2015-043. CNMNC Newsletter No. 27, October 2015, page ; Mineralogical Magazine 79, 1229–1236
- ↑ 3.0 3.1 3.2 "Lucchesiite: Lucchesiite mineral information and data". Mindat.org. Retrieved 2016-03-04.
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.