உலகளாவிய காலநிலை நடவடிக்கை நாள்
உலகளாவிய காலநிலை நடவடிக்கை நாள் (Global Day of Climate Action 2020) என்பது 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25 ஆம் தேதியன்று நடந்த உலகளாவிய நேரடி எதிர்ப்பு நடவடிக்கையாகும். வெள்ளிக்கிழமைகளுக்கான எதிர்காலம் அல்லது காலநிலைக்கான இளைஞர்கள் என்ற மாணவர்கள் அமைப்பு மற்றும் மற்றும் 350. ஆர்கு போன்ற பிற செயலில் உள்ள அமைப்புகளால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. காலநிலை மாற்றத்தின் தாக்கம் மற்றும் விரைவாக அதிகரிக்கும் உலகளாவிய உமிழ்வு குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட எதிர்கால நடவடிக்கைகளுக்கான ஒரு பகுதியாக இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. .

பருவநிலை நெருக்கடிக்கு எதிரான இப்போராட்டத்தில் உறுதியான நடவடிக்கைகளை வலியுறுத்தவும், இளைஞர்களின் எதிர்கால உரிமைக்காகவும் ஆயிரக்கணக்கான நகரங்கள் நிகழ்வுகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்தின.[1] நிகழ்வின் புள்ளிவிவரங்களின்படி, பங்கேற்பாளர்கள் பின்வருமாறு:[2] 154 நாடுகள், 2362 நகரங்கள் மற்றும் 3615 நிகழ்வுகள் அறியப்படுகின்றன.. இருப்பினும், கோவிட் விதிகள் காரணமாக பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.[3]