உலகப் பெற்றோர் நாள்
உலகப் பெற்றோர் நாள் | |
---|---|
நாள் | மே 8, fourth Sunday in July, first Monday in December |
நிகழ்வு | வருடம் ஒரு முறை |
உலகப் பெற்றோர் நாள் (Parents' Day) என்பது ஐக்கிய நாடுகள் சபையால் சூன் 1 ஆம் நாள் அன்று பெற்றோரின் அர்ப்பணிப்புக்கான ஒரு அடையாளமாக உலகளாவிய பெற்றோர் நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது முதலில் அன்னையர் நாளாக மட்டுமே வடிவமைக்கப்பட்டது. பின்னர் இது தந்தையர் நாளாக தனியாகக் கொண்டாடப்படுவது மற்றும் விடுமுறை நாட்களைக் கணக்கில் கொண்டு பெற்றோர் இருவரையும் சேர்த்து கொண்டாட முடிவு செய்யப்பட்டது.
சர்வதேச அளவில்
[தொகு]உலகெங்கிலும் அனைத்து பெற்றோர்களின் தன்னலமற்ற அர்ப்பணிப்பு மற்றும் குழந்தைகளுக்காக வாழ்க்கையைத் தியாகம் செய்தல் ஆகியவற்றிற்காக உலகின் அனைத்து பெற்றோர்களையும் பாராட்ட வேண்டும் எனக் கருதி சூன் 1 ஆம் நாளை உலகப் பெற்றோர் நாள் என ஐக்கிய நாடுகள் சபையினர் அறிவித்தனர்.[1] இதுவும் பன்னாட்டுக் குழந்தைகள் நாளும் ஒரே நாளில் கொண்டாடப்படுகிறது.
அமெரிக்காவில்
[தொகு]அமெரிக்காவில் பெற்றோர் நாள் சூலை மாதம் நான்காம் ஞாயிற்றுக்கிழமை கடைபிடிக்கப்படுகிறது. இது குழந்தைகள் வளர்ப்பதில் பெற்றோரின் பங்கை அங்கீகரிப்பதற்காக 1994 ஆம் ஆண்டில் குடியரசுத்தலைவர் பில் கிளிண்டன் அவர்களால் கொண்டுவரப்பட்டது.[2] இது அமெரிக்கா முழுவதும் கொண்டாடப்படுகிறது.[3]
தென் கொரியாவில்
[தொகு]தென் கொரியாவில் பெற்றோர் நாள் மே 8 ஆம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது.[4] பெற்றோர் தினத்தை கொரிய அரசும் பொதுமக்களும் கொண்டாடுகின்றனர். பெற்றோரை கௌரவிக்கும் நிகழ்வாக இது அமைகிறது.இரட்டடுக்கான இதழ்களையுடைய மஷ்ர்ச் செடிவகைகளை தங்களது பெற்றோருக்கு வழங்குவர். மேற்கத்தியக் கலாச்சாரம் மற்றும் கன்பூசியசின் ஆதரவாளர்கள் இணைந்து கொண்டாடும் இந்நாள் விடுமுறை ஆகும்.[5] பொது நிகழ்வுகளை தென்கொரியாவின் உடல்நம மற்றும் பராமரிப்புத்துறை விருதுகள் வழங்கி கொண்டாடுகிறது.[6]
சான்றுகள்
[தொகு]- ↑ "Global Day of Parents". United Nations. Retrieved June 6, 2014.
- ↑ Eloise Anderson (July 22, 2018). "Helping parents work, so children can succeed". Dunn County News (விஸ்கொன்சின்). https://chippewa.com/dunnconnect/opinion/eloise-anderson-helping-parents-work-so-children-can-succeed/article_c8c77e34-12de-587e-b36d-9c488332a251.html.
- ↑ "National Parents Day -- Celebrating Parent Power". HuffPost (in ஆங்கிலம்). 2013-07-25. Retrieved 2023-04-18.
- ↑ "Parents' day by Korean Nation Culture Encyclopedia". Korean Nation Culture Encyclopedia(http://encykorea.aks.ac.kr).
- ↑ "어버이날". terms.naver.com (in கொரியன்). Retrieved 2021-04-24.
- ↑ 어버이날 [Parents' Day]. 한국세시풍속사전 (in கொரியன்). National Folk Museum of Korea. Retrieved May 5, 2014.