உரோகிணி
உரோகிணி | |
---|---|
![]() சந்திரன் & உரோகிணி | |
அதிபதி | நட்சத்திரக் கடவுள் ஆல்டெபரனின் ஆளுமை |
வகை | தேவி |
இடம் | சந்திரலோகம் |
துணை | சந்திரன் |
குழந்தைகள் | வருசா |
உரோகிணி (Rohini; रोहिणी) இந்து மதத்தில் நட்சத்திரங்களின் தெய்வமும்[1] சந்திரக் கடவுளான சந்திரனின் விருப்பமான மனைவியும் ஆவார். பிரஜாபதி தக்கனுக்கும் அவரது மனைவி அசிக்னிக்கும் பிறந்த 27 மகள்களில் இவரும் ஒருவர். இவர் "சிவப்பு தெய்வம்" (உரோகிணி தேவி) என்றும் அழைக்கப்படுகிறார். இவர் இடபம் ராசியில் பிரகாசமான நட்சத்திரமான ஆரஞ்சு-சிவப்பு நட்சத்திரமான ரோகிணி உருவகம் ஆவார். [2]
இந்து மதத்தில்
[தொகு]இந்து மதத்தில், தக்கன் மற்றும் அசிக்னியின் 27 மகள்கள் சந்திரனுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டனர்.
சந்திரன் தனது பெரும்பாலான நேரத்தை ரோகிணியுடன் கழித்தார். இது அவரது மற்ற மனைவிகளைக் கோபப்படுத்தியது. பின்னர் அவர்கள் இதைப் பற்றி தங்கள் தந்தையிடம் புகார் செய்தனர். தன்னுடைய மகள்கள் மகிழ்ச்சியற்றவர்களாக இருப்பதைக் கண்ட தக்கன், சந்திரனை தொழுநோயால் சபித்து, சந்திரன் ஒவ்வொரு மாதமும் வளர்வதும் தேய்வதும் ஆகட்டும் என்று அறிவித்தார்.[3]
உரோகிணி, அவளுடைய சகோதரிகளான கிருத்திகா மற்றும் ரேவதி ஆகியோருடன் தெய்வீகப்படுத்தப்பட்ட மனிதர்கள் என்றும் "தாய்மார்கள்" என்றும் விவரிக்கப்படுகிறார்கள்.[4]
இந்திய வானியலில்
[தொகு]இந்திய வானியலில், 27 சந்திர நட்சத்திரங்கள் தக்கன் மற்றும் அசிக்னியின் மகள்களின் பெயரால் பெயரிடப்பட்டுள்ளன. சந்திர நிலை ரோகிணி விருஷப ராசியில் (இடபம் -ரிஷபம்) 10° 0' முதல் 23° 20' வரை பரவியுள்ளது.
இந்து சோதிடத்தில்
[தொகு]இந்து சோதிடத்தில், உரோகிணி நட்சத்திரம் ஜோதிசா என்று அழைக்கப்படுகிறது. உரோகிணி என்பது சந்திரனால் ஆளப்படும் ராசி மண்டலத்தின் நான்காவது சந்திர நிலை அல்லது நட்சத்திரமாகும் . கிருட்டிண்ரின் பிறந்த நட்சத்திரம் உரோகிணி. இந்த நட்சத்திரத்தின் செல்வாக்கின் கீழ் பிறப்பதில் முக்கியத்துவம் இருப்பதாக நம்பப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Agrawala, Prithvi Kumar (1983). Goddesses in Ancient India (in ஆங்கிலம்). Abhinav Publications. ISBN 978-81-7017-184-3. Archived from the original on 2023-02-02. Retrieved 2020-10-03.
- ↑ Shah, Saket (2019-10-19). Understanding The Nakshatras: Soul of Astrology is Nakshatras (in ஆங்கிலம்). Saket Shah. Archived from the original on 2023-02-02. Retrieved 2020-10-08.
- ↑ Coulter, Charles Russell; Turner, Patricia (2021-12-06). Encyclopedia of Ancient Deities (in ஆங்கிலம்). McFarland. p. 437. ISBN 978-0-7864-9179-7.
- ↑ Jessalyn, Blossom Meghan (2012). Rohini (Nakshatra) (in ஆங்கிலம்). Sess Press. ISBN 978-613-8-62464-6. Archived from the original on 2023-02-02. Retrieved 2020-10-03.