உரூமா மெக்ரா
உரூமா மெக்ரா | |
---|---|
![]() | |
பிறப்பு | 24 சனவரி 1967 |
தேசியம் | இந்தியர் |
பணி | கவிஞர், ஓவியர், சிற்பி, செய்தித்தாள் எழுத்தாளர் |
அறியப்படுவது | கவிஞர் |
உரூமா மெக்ரா (Rooma Mehra)(பிறப்பு: சனவரி 24, 1967) என்பவர் இந்தியக் கவிஞரும், ஓவியரும், சிற்பியும், செய்தித்தாள் எழுத்தாளரும்[1] இந்தியன் எக்சுபிரசு பத்திரிகையின் கட்டுரையாளரும் ஆவார்.
தொழில்
[தொகு]மெக்ரா சமூக மனசாட்சியுடன் சுயமாகக் கற்றுக் கொண்ட ஒரு கலைஞர். இவர் தன்னுடைய ஓவியங்கள், புடைப்புச் சிற்பங்களைக் கோண்டு 11 தனி நிகழ்ச்சிகளை[2] நடத்தியுள்ளார். இவருடைய கலைப்படைப்புகள் புது தில்லி தேசிய நவீனக் கலைக்கூடம்,[3] லலித் கலா அகாதமி[4] புது தில்லி, ஆர்டே ஆன்டிகா மாடம்,[5] கனடா, சுவிட்சர்லாந்து, அமெரிக்கா, டென்மார்க், ஆத்திரேலியா, இங்கிலாந்து, எசுப்பானியா, ஐக்கிய அரபு அமீரகம், சப்பான் ஆகிய நாடுகளில் உள்ள தனிப்பட்ட சேகரிப்புகள் உள்ளிட்ட தனியார் மற்றும் நிரந்தர சேகரிப்புகளில் காணப்படுகின்றன. மெக்ராவின் கலை ஒரு புதிய கலை என்று குறிப்பிடப்படுகிறது.
மெக்ரா தனது கலைப் படைப்புகளிலும் எழுத்திலும் மனிதாபிமானத்தை வெளிப்படுத்துகிறார்.[6][7][8] பார்வையற்றோர் நிவாரணச் சங்கம்[9] இந்திய எசு ஓ எசு குழந்தைகள் கிராமங்கள் (கிறிஸ்தவக் குழந்தைகள் நிதியம்) ஆகியவற்றில் பார்வையற்றோருக்கான தன்னார்வ கற்பித்தல் பணியை மெக்ரா மேற்கொண்டுள்ளார்.
இவரது செய்தித்தாள் பயணக் கட்டுரைகளின் தொகுப்பு மெக்ராவால் செருமன் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு 2008ஆம் ஆண்டில் தாஸ் ஆஸ்லாண்டிஷே ஸ்டக் டெஸ் கிரேசஸ் என்ற தலைப்பில் எண்ணிம முறையில் வெளியிடப்பட்டது.
மெக்ரா தற்போது கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸில் வசித்து வருகிறார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட வெளியீடுகள்
[தொகு]இவர் மூன்று கவிதைப் புத்தகங்களை எழுதியுள்ளார்:
- சன்சேடோ, எழுத்தாளர்கள் பட்டறை, 1981
- 'ரீச்சிங் அவுட்' (1985), சாகர் பிரிண்டர்ஸ் அண்ட் பப்ளிஷர்ஸ், புது தில்லி 2 3 4
- 'பார் யூ (உங்களுக்காக) (1986) செலக்ட்புக் சர்வீஸ் சிண்டிகேட், 1986 – 30 பக்கங்கள்
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Who's who of Indian Writers. Sahitya Akademi]: Sahitya Akademi. 1999. p. 829. ISBN 978-81-260-0873-5.
- ↑ "Rooma Mehra's Show". http://www.tribuneindia.com/2008/20080310/delhi.htm#4.
- ↑ "Collection NGMA – National Gallery of Modern Art, New Delhi". National Gallery of Modern Art. Retrieved 31 August 2011.
- ↑ Akademi, Lalit Kala (1993). Electoral roll, Artists constituency, 1993: Delhi-New Delhi. https://books.google.com/books?id=n4-fAAAAMAAJ&q=Rooma+Mehra+.
- ↑ "Rooma Mehra". Indianartcollectors.com. Archived from the original on 28 December 2007. Retrieved 7 May 2011.
- ↑ "The Sunday Tribune – Spectrum – Article". The Tribune. India. 11 November 2001. Retrieved 7 May 2011.
- ↑ "Green Dove's Poetry of Peace Gallery – Biography of Mehra Rooma". Greendove.net. Archived from the original on 23 July 2011. Retrieved 7 May 2011.
- ↑ "The Gentle Warrior". The Times of India. 5 March 2007. Retrieved 7 May 2011.
- ↑ "An interior world".