உரூபேசு குமார் சிங்
உரூபேசு குமார் சிங் Rupesh Kumar Singh | |
---|---|
இருப்பிடம் | இராம்கார், சார்க்கண்டு |
பணி | பத்திரிகையாளர் |
அமைப்பு(கள்) | தனிநபர் |
அறியப்படுவது | பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் துன்புறுத்தப்பட்ட அறிக்கை |
வாழ்க்கைத் துணை | இப்சா சட்டாக்சி |
உரூபேசு குமார் சிங் (Rupesh Kumar Singh) இந்தியாவின் சார்க்கண்டு மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பத்திரிக்கையாளர் ஆவார். மனித உரிமை மீறல் மற்றும் பழங்குடி மக்களை துன்புறுத்துதல் போன்ற செய்திகளால் நன்கு அறியப்படுகிறார். [1] [2] 2021 ஆம் ஆண்டு இந்தியாவில் பெகாசசு உளவு மென்பொருள் திட்டம் அறியப்பட்டபோது பெகாசசு திட்டம் மூலம் கண்காணிக்கப்பட்டவர்கள் பட்டியலில் இவரது தொலைபேசி எண் (அவரது இரண்டு குடும்ப உறுப்பினர்களின் [3] உட்பட) கண்டறியப்பட்டது. [4] பழங்குடியின மக்களுக்கு எதிரான பாதுகாப்புப் படையினரின் வன்முறை குறித்து அறிக்கை செய்ததற்காக இந்திய மத்திய அரசு தன்னை குறிவைத்ததாக உரூபேசு குமார் சிங் கூறினார். [3] இவ்வாறு குறிவைக்கப்பட்ட மற்ற நான்கு பத்திரிகையாளர்களுடன் சேர்ந்து இந்திய உச்ச நீதிமன்றத்தில் இவர் வழக்குத் தொடுத்தார். இதன் மூலம் நீதித்துறை மேற்பார்வை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தண்டனை வழங்குவதற்கான வழிமுறையைக் கோரினார்.. [5] [6]
உரூபேசு குமார் சிங் பழங்குடியினர் பிரச்சினைகளில் பணியாற்றும் சமூக ஆர்வலரான இப்சா சதாசியை மணந்தார். இவரது மனைவியும் பெகாசசு திட்டத்தின் மூலம் குறிவைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டார். [1][5]
2022 ஆம் ஆண்டு சூலை மாதத்தில் ராம்கர் மாவட்டத்தில் உள்ள இவரது வீட்டில் இருந்து சார்க்கண்டு காவல்துறையால் கைது செய்யப்பட்டார். [7] [8] தொழிற்சாலை மாசுபாடுகளால் கிராமங்களில் ஏற்படும் நோய் பாதிப்புகள் குறித்து சமீபத்தில் சிங் அறிக்கை வெளியிட்டதால் அவர் குறிவைக்கப்பட்டதாக உரூபேசின் மனைவி சதாசி கூறினார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Team, N. L. (18 July 2022). "Jharkhand reporter in Pegasus list arrested, family and journalists say targeted for his work". Newslaundry. https://www.newslaundry.com/2022/07/18/jharkhand-reporter-in-pegasus-list-arrested-family-and-journalists-say-targeted-for-his-work.
- ↑ Lalwani, Vijayta (20 July 2021). "‘Journalism is not a bed of roses’: Meet the Jharkhand reporter featured in leaked Pegasus database". Scroll.in. https://scroll.in/article/1000597/journalism-is-not-a-bed-of-roses-meet-the-jharkhand-reporter-featured-in-leaked-pegasus-database.
- ↑ 3.0 3.1 "Freelance journalist on potential snoop list to move Supreme Court". telegraphindia.com. https://www.telegraphindia.com/jharkhand/freelance-journalist-on-potential-snoop-list-to-move-supreme-court/cid/1823520.
- ↑ "‘Not Surprised But Offended at Invasion of Privacy’: Jharkhand Journalist on Pegasus List". The Wire. 26 July 2021. https://thewire.in/media/jharkhand-journalist-rupesh-kumar-singh-pegasus-project-snooping-list.
- ↑ 5.0 5.1 Roy, Debayan (2 Aug 2021). "Five journalists in Pegasus snooping list move Supreme Court; seek Judicial Oversight Mechanism to deal with complaints, punish govt officials". Bar and Bench - Indian Legal news. https://www.barandbench.com/news/litigation/five-journalists-in-pegasus-snooping-list-move-supreme-court-punish-govt-officials.
- ↑ "Pegasus: 29 Mobiles Under Technical Panel's Scanner, SC Asks for Report by June 20". The Wire. 20 May 2022. https://thewire.in/law/pegasus-29-mobiles-under-technical-panels-scanner-sc-asks-for-report-by-june-20.
- ↑ "Jharkhand Police Arrests Independent Journalist Under Same FIR as Top Maoist Leader". The Wire. 17 July 2022. https://thewire.in/media/independent-journalist-rupesh-kumar-singh-arrested.
- ↑ "Jharkhand cops arrest freelance journalist for Maoist links". The Indian Express. 18 July 2022. https://indianexpress.com/article/cities/city-others/jharkhand-cops-arrest-freelance-journalist-for-maoist-links-8035534/lite/.
புற இணைப்புகள்
[தொகு]- Rupesh Kumar Singh on Twitter