உருப்படி
Appearance
(உருப்படிகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இசைக்கப்படுவதற்கான வடிவங்கள் உருப்படிகள் என அழைக்கப்படுகின்றன. இவை இரு வகைப்படும்.
- அப்பியாசகான உருப்படிகள்
- சபாகான உருப்படிகள்
அப்பியாசகான உருப்படிகள்
[தொகு]இசைப்பயிற்சிக்கான வடிவங்களை அப்பியாசகான உருப்படிகள் என்று முன்னர் அழைப்பதுண்டு. இவை
- சுராவளி என்றழைக்கப்படும் சரளி வரிசைகள் (கோவை வரிசைகள்)
- ஜண்டைசுர வரிசைகள் (இரட்டைக்கோவை வரிசைகள்)
- மேல்ஸ்தாயி வரிசைகள் (வலிவு மண்டில வரிசைகள்)
- கீழ்ஸ்தாயி வரிசைகள் (மெலிவு மண்டல வரிசைகள்)
- தாட்டுவரிசைகள் (தாண்டு வரிசைகள்)
- 7 அலங்காரங்கள்
- கீதம்
- ஸ்வரஜதி
- ஜதீஸ்வரம்
- வர்ணம்
ஆகியவைகளாகும். வர்ணம் என்ற இசை வடிவம் மட்டுமே இசைப்பயிற்சி, அரங்கிசை ஆகிய இரண்டிற்கும் பயன்படுத்தப்படுகின்றது.
சபாகான உருப்படிகள்
[தொகு]அரங்கிசை வடிவங்கள் என்றாலும் சபாகான உருப்படிகள் என்றாலும் ஒன்றே ஆகும். ஓர் இசைவாணர் தனது இசைப் புலமையினை காட்டி அவையில் உள்ளவர்களை மகிழ்விக்கக் கையாளும் இசை வடிவங்கள் இவை ஆகும்.
- வர்ணம்
- கிருதி
- கீர்த்தனை
- இராகமாலிகை
- தேவாரம்
- திருப்புகழ்
- திருவருட்பா
- திவ்வியப் பிரபந்தம்
- பட்டினத்தார் பாடல்
- தாயுமானவர் பாடல்
- பதம்
- ஜாவளி
- தில்லானா
- தரு
- தரங்கம்
- அஷ்டபதி
- காவடிச்சிந்து
- இராகம்-தானம்-பல்லவி
முதலியன அரங்கிசை உருப்படிகள் ஆகும். இதன் மறு பெயர்:-வைதீக கானம்