உள்ளடக்கத்துக்குச் செல்

உருத்ர மகாலய கோயில்

ஆள்கூறுகள்: 23°55′09″N 72°22′45″E / 23.91917°N 72.37917°E / 23.91917; 72.37917
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உருத்ர மகாலய கோயில்
பிரதான கோயிலின் இடிபாடுகள், உருத்ர மகாலயாவின் தோரணம், 1874
உருத்ர மகாலய கோயில் is located in குசராத்து
உருத்ர மகாலய கோயில்
உருத்ர மகாலய கோயில்
குசராத்தில் கோயிலின் அமைவிடம்
மாற்றுப் பெயர்கள்உருத்ர மாலா
பொதுவான தகவல்கள்
நிலைமைஅழிந்துபோனது
கட்டிடக்கலை பாணிமாரு-குர்ஜரா கட்டிடக்கலை
இடம்சித்தபூர், பதான் மாவட்டம், குசராத்து
நாடுஇந்தியா
ஆள்கூற்று23°55′09″N 72°22′45″E / 23.91917°N 72.37917°E / 23.91917; 72.37917
கட்டுமான ஆரம்பம்பொ.ஊ. 943
திறக்கப்பட்டதுபொ.ஊ. 1140
அழிக்கப்பட்டதுபொ.ஊ. 1296 முதல் பொ.ஊ. 1414 வரை
தொழில்நுட்ப விபரங்கள்
மூலப்பொருள்மணல்கற்கள்
தள எண்ணிக்கை2
பதவிகள்இந்தியத் தொல்லியல் ஆய்வகம் தேசிய முக்கிய நினைவுச்சின்னம் (எண் 164 கோயில் வளாகம்/163 பள்ளிவாசல்)
உருத்ர மகாலய கோயில்
சுற்றியுள்ள கட்டமைப்புகளில் நான்கில் ஒரு பகுதியை மீட்டெடுக்கும் உருத்ரா மகாலய கோயிலின் திட்டம். எஞ்சியிருக்கும் கட்டமைப்புகள் சிவப்பு நிறத்தில் குறிக்கப்பட்டுள்ளன.
கோயில் தகவல்கள்
வரலாறு
அமைத்தவர்:சோலங்கி வம்சத்தினரான மூலராஜா, செயசிம்ம சித்தராசன்

உருத்ர மகாலய கோயில் (Rudra Mahalaya Temple) இந்திய மாநிலமான குசராத்தின் பதான் மாவட்டத்தில் உள்ள சித்தபூரில் அழிக்கப்பட்ட / இடிந்துபோன கோயில் வளாகமாகும். இதன் கட்டுமானம் பொ.ஊ. 943 இல் மூலராஜாவால் தொடங்கப்பட்டு பொ.ஊ. 1140 இல் சோலாங்கி வம்சத்தின் ஆட்சியாளரான செயசிம்ம சித்தராசனால் முடிக்கப்பட்டது. இது மேலும் உருத்ர மாலா எனவும் அழைக்கப்படுகிறது.

தில்லி சுல்தான் அலாவுதீன் கில்சி, பின்னர் குசராத் சுல்தான் முகலாம் அகமது ஷா (1410–1444) ஆகியோரால் இந்த இந்துக் கோவில் அழிக்கப்பட்டது. மேலும், கணிசமாக பகுதிகள் இடிபாடுகளாயின. மேலும் அதன் ஒரு பகுதியை நகரத்தின் பள்ளிவாசலாக மாற்றப்பட்டது. சபை மசூதியாகப் பயன்படுத்தப்படும் வளாகத்தின் மேற்குப் பகுதியில் இரண்டு தாழ்வாரங்களும் முன்னர் மத்திய கட்டமைப்பைத் தாங்கி நின்ற நான்கு தூண்களும் இன்னும் நிற்கின்றன.

வரலாறு[தொகு]

பாழடைந்த உருத்ர மகாலய கோயிலின் நான்கு தூண்கள்

சித்தபூர், வரலாற்று ரீதியாக சிறீஸ்தல் என்று அழைக்கப்படுகிறது. அதாவது "ஒரு பக்தியுள்ள இடம்" என்பதாகும்.[1] சோலாங்கி வம்சத்தின் ஆட்சியாளர்களின் கீழ் இருந்த சித்தபூர் 10 ஆம் நூற்றாண்டில் ஒரு முக்கிய நகரமாக இருந்தது. பத்தாம் நூற்றாண்டில் (பொ.ஊ. 943) குசராத்தின் சோலாங்கி வம்சத்தின் நிறுவனரான மூலராஜா, உருத்ரா மகாலயக் கோயிலின் கட்டுமானத்தைத் தொடங்கினார். இளமை பருவத்தில், மன்னர் தனது தாய்மாமனைக் கொன்று, அவரது சிம்மாசனத்தைக் கைப்பற்றினார். மேலும் தனது தாயின் குடும்பத்தினர் அனைவரையும் கொலை செய்தார். வயதான காலத்தில் அவரது குற்றங்கள் அவரது மனதில் பெரும் பாரமாகத் தொங்கின. இதற்காக யாத்திரை மேற்கொண்டார். தொலைதூரத்திலிருந்து பிராமணர்களுக்கு ஆதரவாக இருந்தார். அவர்களில் ஒரு குழுவினருக்கு இவர் சிறீஸ்தலைக் கொடுத்தார். மேலும் தனது மகன் சாமுண்டராஜாவிடம் இராச்சியத்தை அளித்துவிட்டு (பொ.ஊ. 996) ஓய்வு பெற்றார். ஆனால் கோயில் வளாகம் பொ.ஊ. 1140 வரை முடிக்கப்படவில்லை.[2][3] மூலராஜா தனது முந்தைய பாவங்களுக்குப் பரிகாரம் செய்வதற்காக அங்கு ஒரு சன்னதியைக் கட்ட உத்தரவிட்டதாக காலனித்துவ ஆதாரங்கள் கூறுகின்றன.[1] ஆனால் அவரது ஆட்சிக்கு முன்பே அந்த இடத்தில் கோயில் இருந்திருக்கலாம். பன்னிரண்டாம் நூற்றாண்டில் ஏற்கனவே இருந்த கட்டிடம் அகற்றப்பட்டு, தற்போதுள்ள அடித்தளத்தின் மேல் புதிய வளாகம் கட்டப்பட்டதாக தொல்லியல் சான்றுகள் தெரிவிக்கின்றன.[4] 12 ஆம் நூற்றாண்டில், பொ.ஊ. 1140 இல், செயசிம்ம சித்தராசன் (1094–1144) கோயில் வளாகத்தை முழுமைப்படுத்தினார். பின்னர், இது சித்தபூரின் பிரதான கோயில் வளாகமாக மாறியது.[1][a][b]

பொ.ஊ. 1296 இல் (சம்வத் 1353) அலாவுதீன் கில்சி ஆலய வளாகத்தை அகற்ற உலுக் கான் மற்றும் நுஸ்ரத் கான் ஆகியோரின் கீழ் ஒரு இராணுவத்தை அனுப்பினார். இந்த கோயில் மேலும் அழிக்கப்பட்டு, அதன் மேற்கு பகுதி 1414 அல்லது 1415 இல் முசாபரித் வம்சத்தைச் சேர்ந்த முஸ்லிம் ஆட்சியாளர் முதலாம் முகமது ஷா (1410–44) என்பவரால் அரச சபை பள்ளிவாசலாக மாற்றப்பட்டது.[5][6]

கட்டிடக்கலை[தொகு]

நூலியல்[தொகு]

  • Sastri, Kallidaikurichi Aiyah Nilakanta; Congress, Indian History (1907). A Comprehensive History of India. Orient Longmans. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7304-561-5.

This article incorporates text from a publication now in the பொது உரிமைப் பரப்பு: Burgess; Murray (1874). "The Rudra Mala at Siddhpur". Photographs of Architecture and Scenery in Gujarat and Rajputana. Bourne and Shepherd. p. 19. பார்க்கப்பட்ட நாள் 23 July 2016.

குறிப்புகள்[தொகு]

  1. According to one legend, two Parmars from Malwa, named Govinddas and Madhavdas, took up their haunt among the rush grass that covered the neighbourhood of the Rudra Mahalaya, and lived by plunder. There they found the foundations of a temple and Shiva linga, and said that in the night they had seen heavenly beings. This was told to Siddharaj and led to the erection or completion of the temple.[1]
  2. In Mirat-i-Ahmadi, Ali Muhammad Khan writes, "The king on signifying his intention of building the temple, requested the astrologers, it is said, to appoint a fortunate hour; and they at this time predicted the destruction of the building." Then Siddha Raja caused images of "horse lords" and other great kings to be placed in the temple, and "near them a representation of himself in the attitude of supplication, with an inscription praying that, even if the land was laid waste, this temple might not be destroyed."[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Burgess; Murray (1874). "The Rudra Mala at Siddhpur". Photographs of Architecture and Scenery in Gujarat and Rajputana. Bourne and Shepherd. p. 19. பார்க்கப்பட்ட நாள் 23 July 2016. இந்தக் கட்டுரை பொது உரிமையில் உள்ள மூலத்திலிருந்து உரையைக் கொண்டுள்ளது.
  2. "Sidhpur". Official website of Gujarat Tourism. Archived from the original on 8 ஏப்ரல் 2016. பார்க்கப்பட்ட நாள் 8 April 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Rudra Mahalaya Temple Sidhpur Patan District Gujarat". Official website of Gujarat Tourism. Archived from the original on 20 ஏப்ரல் 2016. பார்க்கப்பட்ட நாள் 8 April 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. Patel, Alka (2004). "Architectural Histories Entwined: The Rudra-Mahalaya/Congregational Mosque of Siddhpur, Gujarat". Journal of the Society of Architectural Historians 63 (2): 144–163. doi:10.2307/4127950. 
  5. "Sidhpur". Official website of Gujarat Tourism. Archived from the original on 8 ஏப்ரல் 2016. பார்க்கப்பட்ட நாள் 8 April 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)"Sidhpur" பரணிடப்பட்டது 2016-04-08 at the வந்தவழி இயந்திரம். Official website of Gujarat Tourism. Retrieved 8 April 2016.
  6. Patel, Alka (2004). "Architectural Histories Entwined: The Rudra-Mahalaya/Congregational Mosque of Siddhpur, Gujarat". Journal of the Society of Architectural Historians 63 (2): 144–163. doi:10.2307/4127950. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=உருத்ர_மகாலய_கோயில்&oldid=3956685" இலிருந்து மீள்விக்கப்பட்டது