உள்ளடக்கத்துக்குச் செல்

உருசியப் புரட்சி, 1917

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உருசியப் புரட்சி (1917)
நாள் மார்ச் – 8 நொவெம்பர் 1917
இடம் உருசியா
  • இரண்டாம் நிக்காலஸ் மன்னன் பதவியிறக்கப்படல்
  • உருசியப் பேரரசு வீழ்ச்சியுறல்
  • அதிகாரத்தை போல்ஷ்விக்குகள் கைப்பற்றுதல்
  • உருசிய உள்நாட்டு யுத்தம் ஆரம்பமாதல்.
பிரிவினர்
 உருசியா உருசிய இடைக்கால அரசு Petrograd Soviet
சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சி
தளபதிகள், தலைவர்கள்
உருசியா இரண்டாம் நிக்காலஸ் மன்னன் உருசியா அலெக்ஸான்டர் கெரென்ஸ்கி விலாடிமிர் லெனின்

உருசியப் புரட்சி 1917 என்பது, உருசியாவில் 1917 ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக நடைபெற்ற இரண்டு மக்கள் புரட்சிகளையும், அது தொடர்பான நிகழ்வுகளையும் குறிக்கும். இப்புரட்சிகள் உருசியப் பேரரசு சமூக இயல்புகளை மாற்றியதுடன் ரஷ்ய அரசையும் மாற்றியமைத்தன. சாரிய சர்வாதிகாரம் அகற்றப்பட்டு சோவியத் ஒன்றியம் அமைக்கப்பட்டது. இது பெட்ரோகிராட் நகரை மையமாகக் கொண்டு நிகழ்ந்தது. தற்போது இந்நகரம் லெனின்கிராட் என்று அழைக்கப்படுகிறது.[1]

பின்னணி

[தொகு]

உருசியப் புரட்சி, 1905தான் பெப்ரவரிப் புரட்சி, 1917ஆம் ஆண்டில் நடைபெறுவதற்குக் காரணியாக அமைந்தது. செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சோவியத் என்று அழைக்கப்படும் தொழிலாளர் குழு, இந்தக் குழப்பத்தை உருவாக்கியது. மேலும் கம்யூனிஸ்ட்களின் அரசுக்கு எதிராகப் போராடத் தொடங்கியது.[2]

சமூக மற்றும் பொருளாதார மாற்றங்கள்

[தொகு]

உழவர்களின் அடிப்படைக் கோட்பாடாக நம்பப்பட்டது , உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்பதாகும். அதே சமயத்தில் உழவர்களின் வாழ்க்கை முறையானது தொடர்ந்து மாற்றம் பெற்றுக் கொண்டே இருக்கிறது. இந்த வகையான மாற்றங்கள் ஏற்படுவதற்கு விவசாயிகள் பலர் கிராமங்களிலிருந்து புலம்பெயர்ந்து வருவதும் முக்கியக் காரணமாக அமைகின்றது. மேலும் நகர்ப்புறங்களில் உள்ள கலாச்சாரங்கள் கிராமங்களுக்கு ஊடகம், பொருட்கள் வாயிலாகச் சென்று சேர்ந்ததும் இதன் முக்கியக் காரணமாக அமைந்தது.

மேலும் தொழிலாளர்களின் இந்த அதிருப்திக்குப் பல நியாயமான காரணங்களும் இருந்தன.

வருடங்கள் சராசரி வேலை நிறுத்தம் (ஆண்டு)
1862- 1869 6
1870-1874 20
1885-1894 33
1895-1905 176

வரலாறு

[தொகு]

1917 ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் முதலாளித்து‍வப் புரட்சி நடைபெற்றது‍. இதன் இறுதியில் டூமாவின் உறுப்பினர்கள் நாட்டின் கட்டுப்பாட்டைப் பொறுப்பேற்றுக் கொண்டு ரஷ்ய இடைக்கால அரசொன்றை அமைத்தனர். சாரின் படைத் தலைவர்கள் புரட்சியை அடக்குவதற்கான வழிகள் எதுவும் இல்லையென உணர்ந்து கொண்டனர். கடைசி சார் மன்னரான இரண்டாம் நிக்கலாஸ் தனது பதவியைத் துறந்தார். சோவியத்துக்கள் எனப்பட்ட தொழிலாளர் சபைகள், தீவிர சமூகவுடமைப் பிரிவினரால் வழிநடத்தப்பட்டது. இவர்கள் தொடக்கத்தில் புதிய அரசை ஏற்றுக்கொண்ட போதும், அரசில் செல்வாக்குச் செலுத்துவதற்கான சிறப்புரிமைகளைக் கோரி வந்தனர். இது இரட்டை அதிகார நிலையை உருவாக்கியது. இடைக்கால அரசு அரச அதிகாரத்தைக் கொண்டிருக்க, தேசிய அளவில் பெரிய வலையமைப்பைக் கொண்டிருந்த சோவியத்துக்கள் பொருளாதார நிலையில் தாழ்ந்த வகுப்பினரதும் இடதுசாரிகளினதும் ஆதரவைப் பெற்று வலுவுடன் இருந்தது.

1918-1920 வரை நடைபெற்ற உள்நாட்டுப் போர்

[தொகு]

இடைக்கால அரசு போரைத் தொடர விரும்பியது. போல்செவிக்குகளும், இடதுசாரியினரும் போரைக் கைவிட விரும்பினர். போல்செவிக்குகள் தொழிலாளர் படையைச் செங்காவலராக மாற்றி அமைத்தனர். 1922 இல் சோவியத் ஒன்றியம் உருவானது. இது அக்டோபர் புரட்சி அல்லது 25 ஆம் நாள் எழுச்சி என்று குறிப்பிடப்பட்டது. இது நவம்பர் புரட்சி என்றும் அழைக்கப்படுகிறது.[3]

பெப்ரவரிப் புரட்சி

[தொகு]

பெப்ரவரி மாத தொடக்கத்தில் , பெட்ரோகிராட் தொழிலாளர்கள் வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் போன்றவற்றில் ஈடுபட்டனர். மார்ச் 7 அன்று பெட்ரோகோவின் மிகப்பெரிய தொழிற்சாலையான புட்டில்லோவில் உள்ள தொழிலாளர்கள் ஒரு வேலைநிறுத்தத்தை அறிவித்தனர்.[4] அதற்கு அடுத்த நாள் பல்வேறு கூட்டங்கள் மற்றும் பேரணிகள் ஆகியவை அனைத்துலகப் பெண்கள் நாளுக்காகக் கூடினர். ஆனால் இது படிப்படியாக அரசியல் கூட்டமாக மாறியது . இந்த வேலை நிறுத்தத்தில் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் ஈடுபட்டனர்.[5] பெட்ரோகிராடில் உள்ள பெரும்பாலான நிறுவனங்கள் செயல்படாமல் இருந்தது.

பெப்ரவரி புரட்சி Feb 1917

காலவரிசை

[தொகு]

புரட்சிக்கு வித்திட்ட நிகழ்வுகளின் காலவரிசை

[தொகு]

கீழே கொடுக்கப்பட்டுள்ள திகதிகள் யூலியன் நாட்காட்டி படி கொடுக்கப்பட்டுள்ளன, இஃது உருசியாவில் 1918 ஆம் ஆண்டு வரை பயன்படுத்தப்பட்டது. இது கிரெகொரியின் நாட்காட்டியில் இருந்து 12 நாட்கள் பின்தங்கியிருந்தது (19-ஆம் நூற்றாண்டு), 20-ஆம் நூற்றாண்டில் 13 நாட்கள் பின்தங்கியிருந்தது.

நாள் | நாட்கள் நிகழ்வுகள்
1874–81 அரசுக்கு எதிரான போக்குகளும் அதற்கு அரசின் நடவடிக்கைகளும் .
1881 இரண்டாம் இரண்டாம் அலெக்சாண்டர் புரட்சியாளர்களால் படுகொலை செய்யப்பட்டார்.

மூன்றாம் அலெக்சாண்டர் வெற்றி

1883 முதல் உருசியா மார்க்சியம் குழு உருவானது
1894 இரண்டாம் நிக்கோலஸ் ஆட்சி தொடக்கம்
1898 உருசியாவின் சுதந்திர சமூக தொழிலாளர் அமைப்பின் கூட்டமைப்பு (RSDLP).
1900 சோஷலிச புரட்சிக் கட்ட்சியின் அறக்கட்டளை (எஸ் ஆர்)
1903 உருசியாவின் சுதந்திர சமூக தொழிலாளர் அமிப்பின் இரண்டாவது கூட்டம்.
1904–5 உருசியா - யப்பான் நாடுகளுக்கிடையே போர்,உருசியா தோல்வியடைந்தது.
1905 உருசியப் புரட்சி, 1905
1905 சனவரி புனித பீட்டர்ஸ்பெர்க்கின் குருதி ஞாயிறு
1905 அக்டோபர் பொது வேலை நிறுத்தம் (புனித பீட்டர்பெர்க்ஸ்) அக்டோபர் அறிக்கை டுமா மாநிலத்தின் தேர்தல் உடன்படிக்கை
1906 டுமா முதல் மாநிலம் . பிரதமர் பீட்டர் ஸ்டோலிபின் . வேளாண்மை சீர்திருத்த நடவடிக்கைகள் தொடக்கம்.
1907 மூன்றாவது மாநிலம் , டுமா 1912 வரை
1911 ஸ்டோலிபின் படுகொலை
1912 நாண்காவது மாநிலம் டுமா, 1917 வரை
1914 உருசியா நாட்டின் மீது போர் தொடுப்பதாக ஜெர்மனி அறிவித்தது.
1914 சூலை 30 உருசியா சீம்ஸ்துவொ சங்கம் லிவோவினை ஜனாதிபதியாக தேர்வு செய்தனர்.
1914 ஆகஸ்டு- நவம்பர் உருசியா கடுமையான தோல்விகளை சந்தித்தது .மேலும் பல பற்றாக்குறைகளைச் சந்தித்தது, குறிப்பாக வெடிமருந்து. உணவு
1914 ஆகஸ்டு 3 ஜெர்மனி நாடு உருசியா நாட்டின் மீது போர் தொடுக்கப்போவதாக அறிவிக்கிறது. இந்த அறிவிப்பானது உருசியா நாட்டிற்கு எதிராக போராடுபவர்களின் தீவிரத் தன்மை குறைகிறது.
1914 ஆகத்து 18 செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் என்ற பெயரானது பெட்ரோகிராட் என்று மாறுகிறது.
1914 நவம்பர் 5 டுமாவின் போல்ஸ்விக்கின் உறுப்பினர்கள் கைது செய்யப்படுகின்றனர். பின்பு அவர்கள் சைபீரியாவிற்கு நாடு கடத்த முயற்சி செய்யப்பட்டனர்.
1915 கடுமையான தோல்விகள், இரண்டாம் நிக்கோலஸ் தன்னையே தலைமை நீதிபதியாக அறிவித்துக் கொண்டார்.
1915 பெப்ரவரி 19 பிரிட்டன் மற்றும் பிரான்சு நாடுகள் இசுதான்புல் மற்றும் துருக்கி நாடுகளுக்கு வாக்குறுதி அளிக்கிறது.
1915 சூன் 5 காஸ்ட்ரோமாவில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. பாதிப்புகள் நிகழ்ந்தன.
1915 சூலை 9 பெரிய பின்வாங்கல் நடைபெறுகிறது. உருசியா படைகள் கலிசியாவிலிருந்து பின்வாங்குகிறது.
1915 ஆகஸ்டு 9 டுமாவின் முதலாளித்துவ கட்சிகள் , முற்போக்கு முகாம் என்ற குழுவினை அமைக்கின்றது. அதன் மூலம் ஒரு சிறந்த அரசாங்கம் அமைவதற்கு அழுத்தம் கொடுக்கிறது.
1915 ஆகஸ்டு 10 வேலை நிறுத்தம் செய்தவர்கள் இவானோவா- வோச்னெஸ்க்கில் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். பலர் படுகாயமடைந்தனர்.
1915 ஆகஸ்டு 17 - 19 பெட்ரோகிராட் எனுமிடத்தில் போராட்டம் நடத்தியவர்கள் , இவானோவொ- வோஸ்னெஸ்க்கியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டிற்கு எதிராக போராட்டம் .
1915 ஆகஸ்டு 23 டூமாவிற்கு எதிராக போராடிவர்களுக்கும், போரில் தோற்றதற்கும் எதிரான விளைவுகளை செய்கிறது. மேலும் சார் தலைமை நீதிபதி பொறுப்பினை ஏற்கிறார். டூமா, மொகிலுவிலுள்ள ரானுவ தலைமையகத்திற்கு மாற்றம் செய்யப்படுவதை தள்ளிப்போட்டனர். மத்திய அரசு கையகப்படுத்தத்துவங்கியது.
1916 உணவு மற்றும் எரிபொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டது. அதன்விலைகளும் அதிகரிக்கப்பட்டன. முபோக்கு சங்கம் ஏற்படுத்தப்பட்டது.
1916 ஜனவரி- திசம்பர் புருசிலோவினுடைய தாக்குதலை வெற்றிகரமாக எதிர்கொண்டது, ஆனாலும் சரியான வழிநடத்தல் இன்மை, நோய்த்தொற்று,இறப்பு, பின்வாங்குதல் போன்ற காரணிகளால் பாதிப்படைந்தன. இந்தப் போரினால் கடுமையான பசி, பட்டினி, ஆகியவை ஏற்பட்டன. மக்களும், ரானுவ வீரர்களும் ஜார் ஆர்சினை குற்றம் சாட்டினர்.
1916 பெப்ரவரி 6 டூமா அரசு மீண்டும் அமைந்தது.
1916 பெப்ரவரி 29 ஒரு மாதத்திற்குப் பிறகு புட்லொவ் தொழிற்சாலையில் உள்ல தொழிலாளர்களை கட்டாயப்படுத்தி வேலையில் சேரச் செய்தனர். ஆனால் போராட்டங்களும் நடைபெற்றன. .
1916 சூன் 20 டுமா அரசு ஒத்திவைக்கபப்ட்டது.
1916 அக்டோபர் 181 வது படைவீரர்கள் போராட்டத்தில் ஏடுபடுபவர்களுக்கு உதவி செய்தது.
1916 நவம்பர் 1 மிலுகோவ் தன்னுடைய முதல் உரையில் ''இது முட்டாள்தனமா அல்லது தேசத்துரோகமா''? என்று கூறினார்.
1916 டிசம்பர் 29 ரஸ்புதின் இளவரசர் யுசுப்புவால் கொலை செய்யப்பட்டார்.
1916 டிசம்பர் 30 ஜார் தன்னுடைய படைகள் புரட்சிக்கு எதிராக செயல்படாது என்று அறிவித்தார்.
1917 கலவரங்கள்,கிளர்ச்சிகள் ஆகியவை சர்வாதிகார ஆட்சியை முடிவுக்கு கொண்டுசெல்கின்றன.
கிரெகொரியின் நாட்காட்டி நாள் நிகழ்வுகள்
சனவரி பெட்ரோகிராடில் போராட்டம்
பெப்ரவரி பெப்ரவரிப் புரட்சி
மார்ச் 8 பெப்ரவரி 23 அனைத்துலக பெண்கள் நாள்: பெட்ரோகிராட்டில் ஆர்ப்பாட்டம், சில நாட்களில் அதிகரிக்கத் தொடங்கியது.
மார்ச் 11 பெப்ரவரி 26 50 போராட்டக்காரர்கள் ஜூனெஸ்காசியா சதுக்கத்தில் கொல்லப்பட்டனர்.

கலாச்சார சித்தரிப்பு

[தொகு]

திரைப்படங்கள்

[தொகு]

உருசியா புரட்சி பல திரைப்படங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளது.

  • அர்செனல் [1] எழுத்து மற்றும் இயக்கம் அலெக்ஸாண்ட் டோவ்ஜெங்கோ
  • செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கின் முடிவு [2]
  • லெனின் இன் 1918. இயக்கம் மைக்கேல் ரோம் மற்றும் ஈ. அரோன் (இணை இயக்குனர்) [3]
  • உலகை உலுக்கிய பத்து நாட்கள் , இயக்கம்: செர்ஜி ஐசென்ஸ்டீன் மற்றும் கிரிகோரி அலெக்ஸாண்ட்ரோவ். நேரம் : 95 நிமிடம் [4]
  • செயின்ட் பீட்டர்ஸ்பர்க் முடிவு, இயக்கம்: வெஸ்வொலோட் புடொவ்க் ஆண்டு: 1927
  • ரெட்ஸ் ,வாரன் பீட்டி, இயக்கியது (1981). இது இரண்டு நாட்கள் என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. [5]

ஆதாரங்கள்

[தொகு]
  1. சிந்தன், வி.பி (ஏப்ரல் 1985). ரஷ்யப் புரட்சியின் வரலாறு. சென்னை: தமிழ் புத்தகாலயம். p. 88. {{cite book}}: Check date values in: |date= (help)
  2. Wood, 1979. p. 18
  3. "நவம்பர் புரட்சி!". மாற்று. நவம்பர் 7, 2013. Archived from the original on 2013-11-12. பார்க்கப்பட்ட நாள் டிசம்பர் 12, 2013. {{cite web}}: |first= missing |last= (help); Check date values in: |accessdate= (help)CS1 maint: unfit URL (link)
  4. Service, 2005. p. 32.
  5. When women set Russia ablaze, Fifth International 11 July 2007.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உருசியப்_புரட்சி,_1917&oldid=3817446" இலிருந்து மீள்விக்கப்பட்டது