உயிர்க்கோளம்

உயிர்க்கோளம் (Biosphere) என்பது உலகளாவிய அனைத்து சூழல் மண்டலங்களின் ஒட்டுமொத்த தொகுப்பாகும். இதை புவியில் உள்ள உயிர் மண்டலம் என்றும் அழைக்கலாம். உயிர்க்கோளம் (தொழில்நுட்ப ரீதியாக கோள வடிவ ஒரு ஓடு ) என்பது பொருள் சார்ந்து கிட்டத்தட்ட ஒரு மூடிய அமைப்பாகும். இது குறைந்த அளவிலான உள்ளீடுகளையும், வெளியீடுகளையும் கொண்டுள்ளதாக உள்ளது. ஆற்றலைப் பொறுத்தவரை, இது ஒரு திறந்த அமைப்பாக உள்ளது. ஒளிச்சேர்க்கையால் சுமார் 100 வாட்டு விகிதத்தில் சூரிய ஆற்றலைப் பெறுகிறது. [1] பொதுவாக உயிரி அண்டக் கோட்பாடின் வரையறையின்படி, உயிர்க்கோளம் என்பது அனைத்து உயிரினங்களையும் அவற்றிற்கான தொடர்புகளையும் ஒருங்கிணைக்கும் உலகளாவிய சூழலியல் அமைப்பாகும். இதில் கற்கோளம், பனிமண்டலம், நீர்க்கோளம், வளிமண்டலம் ஆகிய கூறுகளுடனான தொடர்பும் அடங்கும். உயிர்க்கோளம் குறைந்தது 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உயிரிலிவழிப்பிறப்பு என்ற செயல்முறையுடன் தொடங்கி பரிணமித்ததாகக் கூறப்படுகிறது. [2] [3]
இந்தச் சொல்லின் தோற்றமும் பயன்பாடும்
[தொகு]
உயிர்க்கோளத்தைக் குறிக்கும் ஆங்கிலச் சொலான "biosphere" என்ற சொல்லானது 1875 ஆம் ஆண்டில் புவியியலாளர் எட்வார்ட் சூஸ் என்பவரால் உருவாக்கப்பட்டது. அவர் புவியின் மேற்பரப்பில் வாழும் உயிர்கள் வாழும் இடம் என்று வரையறுத்தார்.
குறுகிய வரையறை
[தொகு]புவி வேதியியலாளர்கள் உயிர்க்கோளத்தை உயிரினங்களின் மொத்தத் தொகை (உயிரியத்தொகுதி அல்லது "உயிரினத்தொகுப்பு" என்று உயிரியலாளர்களும் சூழலியலாளர்களும் குறிப்பிடுகின்றனர்) என்று வரையறுக்கின்றனர். இந்தப் பொருளில், உயிர்க்கோளம் புவி வேதியியல் மாதிரியின் நான்கு தனித்தனி கூறுகளில் ஒன்றாகும், மற்ற மூன்று பாறைக்கோளம், நீர்க்கோளம், வளிமண்டலம் ஆகியவை ஆகும். இந்த நான்கு கூறுகளும் ஒரு அமைப்பாக இணைக்கப்படும்போது, அது சுற்றுச்சூழல் கோளம் என்று அழைக்கப்படுகிறது. இந்த சொல் 1960 களில் உருவாக்கப்பட்டது, கிரகத்தின் உயிரியல், இயற்பியல் ஆகிய இரண்டையும் உள்ளடக்கியது. [4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Nealson, Kenneth H.; Zeki, S.; Conrad, Pamela G. (1999). "Life: past, present and future". Philosophical Transactions of the Royal Society of London. Series B: Biological Sciences 354 (1392): 1923–1939. doi:10.1098/rstb.1999.0532. பப்மெட்:10670014.
- ↑ Campbell, Neil A.; Brad Williamson; Robin J. Heyden (2006). Biology: Exploring Life. Boston, Massachusetts: Pearson Prentice Hall. ISBN 978-0-13-250882-7. Archived from the original on 2014-11-02. Retrieved 2008-09-14.
- ↑ Zimmer, Carl. "Earth's Oxygen: A Mystery Easy to Take for Granted" இம் மூலத்தில் இருந்து 3 October 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131003185748/http://www.nytimes.com/2013/10/03/science/earths-oxygen-a-mystery-easy-to-take-for-granted.html.
- ↑ Möller, Detlev (December 2010). Chemistry of the Climate System. De Gruyter. pp. 118–119. ISBN 978-3-11-022835-9.