உயிர்க்கூள வாயுவாக்கம்
Appearance
உயிர்க்கூள வாயுவாக்கம்(Biomass Gasification) என்பது புதுப்பிக்கத்தக்க வளங்களை பயன்படுத்தி எரிசக்தியை உருவாக்கும் முறைகளில் ஒன்று. இந்தியா விவசாய நாடாக இருப்பதால் கிராமப்புற தரிசு நிலங்களில் உற்பத்தி செய்யப்படும் தேங்காய்மூடி,தாவர,மர இலைகள் , வேர்கள், வேர்கடலைத்தோல், உமி போன்ற உயிர்கூளங்களை கொண்டு எரிவாயு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த முறையில் உற்பத்தி செய்யப்படும் எரிவாயு கொண்டு ஊரக மற்றும் கிராம புறங்களில் மின்வசதியை பயன்படுத்தபடுகிறது.இந்தியாவில் இதுவரை 2000 திற்கும் மேற்பட்ட உயிர்க்கூள வாயு உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.