உயிரி அறவியல்
Appearance
உயிரியல், குறிப்பாக மரபியல் மனித அறிவை ஆற்றலை பல வழிகளில் பெருக்கி வருகிறது. இது மனித வாழ்வை பல வழிகளில் மேம்படுத்தினாலும், இவ்வறிவு சில தீய வழிகளில் பயன்பட வாய்ப்பு உண்டு. உயிரி அறவியல் உயிரியல் அறிவை அறவழி்யில் பயன்படுத்த ஏற்ற விழிப்புணர்வையும் வழிகாட்டல்களையும் தர முனைகிறது.
சிக்கலான கேள்விகள்
[தொகு]- மரபியல் அறிவு மரபணு கோப்பை மாற்றி புதிய உயிரினங்களை உருவாக்க ஏதுவாகிறது? இவ்வாறு இயற்கையை மாற்றியமைப்பது ஏற்புடையதா?
- மரபியல் அறிவு ஒரு மனிதருடைய உயிரியல் பண்புகளை எடுத்துக்கூறவல்லது. இந்தத் தகவல்களைப் பயன்படுத்தி மனிதருக்குக் காப்புறுதி, வேலைவாய்ப்பு, மருத்துவம் போன்றவற்றில் வேறுபாடு காண்பிப்பது ஏற்புடையதா?
- எதிர்காலத்தில் மரபியல் ஒரு குழந்தையை விரும்பிய மரபணு பண்புகளுடன் படைக்க ஏதுவாக்க கூடும். இதன் மூலம் பணம் படைத்தவர்கள் உயர் ஆற்றல்கள் கொண்ட குழந்தைகளை வடிவமைத்து கொள்ளக்கூடும். இந்த நிலை மனித இனத்தை உயிரியல் நோக்கில் பெரிய வேறுபாடு உள்ள உயிரினங்களாக ஆக்கிவிடும். இது இன்றைய மனித ஏற்றத்தாழ்வை மேலும் கூரியப்படுத்தி பல பிரச்சினைகளுக்கு இட்டுச்செல்லுமா?
- படியெடுப்பு மற்றும் இனப்பெருக்க தொழில்நுட்பங்கள் ஆண்கள் பங்களிக்காமலே பெண் குழந்தையைப் பெற ஏதுவாக்கிறது. எதிர்காலத்தில் பிற உயிரங்கிகள் கூட மனித குழந்தைகளைப் பிறப்பிக்கலாம்? இது மனித உறவுகளைச் சிதைக்காதா?
- குருத்துத் திசுள்களை சினை முட்டையிலிருந்து எடுக்கும் போது சினைமுட்டை அழிக்கப்படும். அப்படி அழியும் போது அது ஒரு உயிரையே அழிப்பதற்குச் சமம் என்பது சிலரின் வாதம். அதேவேளை குருத் திசுக்களைப் பயன்படுத்திய ஆய்வின் மூலம் பல நோய்களுக்குத் தீர்வு காணும் வாய்ப்புள்ளது. எனவே குருத்துத் திசுக்களை ஆய்வுக்கு பயன்படுத்த அனுமதிக்கலாமா?