உமா சங்கர்
உமா சங்கர் (Uma Sankar) இந்தியாவைச் சேர்ந்த ஒரு தொழில்முறை கால்பந்தாட்ட வீரராவார். சென்னை நகரத்தின் ஐ-கூட்டிணைவு சங்க அணியில் நடுக்கள வீரராக இவர் விளையாடினார். 2000 ஆமாவது ஆண்டில் சூலை மாதம் 31 ஆம் தேதியன்று உமா சங்கர் பிறந்தார்.
தொடக்க காலம்
[தொகு]தமிழ்நாட்டில் பிறந்த உமாசங்கர் தொடக்க காலத்தில் இந்தியாவின் கருநாடக மாநிலத்தின் தலைநகரமான பெங்களுரை மையமாகக் கொண்டு ஓசோன் கால்பந்தாட்ட சங்க அணிக்காக விளையாடத் தொடங்கினார்.
சென்னை
[தொகு]2021 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் உமா சங்கர் சென்னையில் ஐ-கூட்டிணைவு சங்க அணியில் சேர்ந்தார். 2021 ஆம் ஆண்டு சனவரி மாதம் இந்தியன் ஆரோசு அணிக்கு எதிரான போட்டியில் ஐ-கூட்டிணைவு சங்க அணியில் இவர் அறிமுகமானார். அப்போட்டியில் இவர் 91 ஆவது நிமிடத்தில் மாற்றுவீரராக களம் இறங்கினார். இவர் இடம்பெற்றிருந்த அணி 1-0 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது.[1]
போட்டிகள் புள்ளிவிவரம்
[தொகு]2021 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 6 ஆம் தேதி நிலவரப் படியான தரவுகள்[2]
சங்கம் | பருவம் | கூட்டிணைவு | கோப்பை | கண்டம் | மொத்தம் | |||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
பிரிவு | போட்டி | கோல்கள் | போட்டி | கோல்கள் | போட்டி | கோல்கள் | போட்டி | கோல்கள் | ||
சென்னை நகர கால்பந்து சங்கம் | 2020–21 | ஐ-கூட்டிணைவு | 3 | 0 | — | — | — | — | 3 | 0 |
மொத்த கோல்கள் | 3 | 0 | 0 | 0 | 0 | 0 | 3 | 0 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Chennai City 1–0 Indian Arrows". Soccerway.
- ↑ உமா சங்கர் at Soccerway