உள்ளடக்கத்துக்குச் செல்

உத்தரப் பிரதேசக் காவல்துறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உத்தரப் பிரதேசக் காவல்துறை, இந்திய மாநிலமான சட்ட அமலாக்க முகமை ஆகும். இதன் தலைமையகம் அலகாபாத்தில் உள்ளது. இதன் தலைவராக காவல்துறையின் தலைமை இயக்குனர் இருப்பார். உலக அளவில் அதிக காவலர்களை கொண்ட காவல்துறை இதுவே.[1]

பிரிவுகள்/படைகள்

[தொகு]

இந்த காவல்துறையின் கீழ் கீழ்க்காணும் பிரிவுகளும் படைகளும் இயங்குகின்றன.

  1. பயிற்சி இயக்குனரம்
  2. குற்றப் புலனாய்வுத் துறை
  3. சிறப்பு விசாரணை
  4. ஊழல் தடுப்புத் துறை
  5. மனித உரிமைக் காப்புப் பிரிவு
  6. தீவிரவாத தடுப்புப் படை
  7. புலனாய்வுத் துறை
  8. பொருளாதாரக் குற்றத் தடுப்புப் படை
  9. குற்றத்தடுப்புப் படை
  10. தொழில்நுட்பப் பிரிவு
  11. ரயில்வே காவல்துறை
  12. சிறப்புச் செயலாக்கப் படை
  13. தீயணைப்புத் துறை
  14. போக்குவரத்துக் காவல்


கோட்டங்கள்

[தொகு]

மாநிலத்தில் சட்ட ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு வசதியாக, எட்டு காவல் கோட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கோட்டத்துக்கும் ஒரு தலைவர் இருப்பார். இவர் இந்தியக் காவல் பணியின் இன்ஸ்பெக்டர் ஜெனரலுக்கு இணையான தரநிலையில் இருப்பார். ஒவ்வொரு காவல் கோட்டத்திலும் சில காவல் சரகங்கள் உள்ளன.

ஆயுதங்களும் கருவிகளும்

[தொகு]

காவல் துறையில் பணியாற்றும் அலுவலர்களுக்கு அவரவர் நிலைக்கு ஏற்ப ஆயுதங்கள் வழங்கப்படுகின்றன. அவற்றில் சிலவற்றை கீழே காணலாம்.

சான்றுகள்

[தொகு]
  1. "POLICE HEADQUARTERS ALLAHABAD". www.uppolice.gov.in. பார்க்கப்பட்ட நாள் 27 June 2016.

வெளி இணைப்புகள்

[தொகு]