உள்ளடக்கத்துக்குச் செல்

உத்கீர் கோட்டை

ஆள்கூறுகள்: 18°24′10″N 77°07′04″E / 18.4028°N 77.1178°E / 18.4028; 77.1178
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உத்கீர் கோட்டை
பகுதி: உத்கீர் , லாத்தூர் மாவட்டம், மகாராட்டிரம்
உத்கீர் , லாத்தூர் மாவட்டம், மகாராட்டிரம்
உத்கீர் கோட்டை is located in மகாராட்டிரம்
உத்கீர் கோட்டை
உத்கீர் கோட்டை
ஆள்கூறுகள் 18°24′10″N 77°07′04″E / 18.4028°N 77.1178°E / 18.4028; 77.1178
வகை கோட்டை
இடத் தகவல்
உரிமையாளர் மகாராட்டிர அரசு
கட்டுப்படுத்துவது மகாராட்டிர அரசு
மக்கள்
அனுமதி
ஆம்
நிலைமை அழிவில்
இட வரலாறு
கட்டிய காலம் 12வது நூற்றாண்டு
கட்டியவர் பாமினி
உயரம் 2,100 மீட்டர்கள் (6,900 அடி)
சண்டைகள்/போர்கள் உத்கீர் போர் (1760)
காவற்படைத் தகவல்
தற்போதைய
தளபதி
சதாசிவராவ் பாவ்

உத்கீர் கோட்டை (Udgir Fort) என்பது இந்தியாவின் மகாராட்டிராவின் லாத்தூர் மாவட்டத்தில் உள்ள உத்கீர் நகரில் உள்ள ஒரு கோட்டை ஆகும். இக்கோட்டை பகமானிக்கு முந்தைய காலத்தில் கட்டப்பட்டது. சதாசிவ்ராவ் பாவ் தலைமையிலான மராத்தியர்கள் நிஜாமைத் தோற்கடித்த 1760ஆம் ஆண்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க உத்கீர் போரின் மூலம் இது பிரபலமானது. இதன் பிறகு உத்கீர் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தக் கோட்டைக்கு இந்து துறவி உதயகிரி ரிஷி நினைவாகப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.[1]

சுற்றியுள்ள மலைகள் முழுவதும் சிதறிக்கிடக்கும் வகையில், அசாதாரணமான வெள்ளை களிமண்ணால் கட்டப்பட்ட பல பழைய தரைப்படை கண்காணிப்பு இடங்கள் மற்றும் ஓய்வு இல்லங்கள் உள்ளன. இருப்பினும், அனைத்தும் நீண்ட காலமாகப் பழுதடைந்துவிட்டன. உத்கீர் கோட்டையில் பால்கி மற்றும் பீதர் கோட்டைகளுடன் இணைக்கும் ஆழமான சுரங்கப்பாதையும் இருக்கலாம்.[2]

இந்தக் கோட்டை 40 அடி ஆழம் (12 மீ) உள்ள அகழியால் சூழப்பட்டுள்ளது. மேலும் பல அரண்மனைகளும் இங்குக் காணப்படுகின்றது. தரை மட்டத்திற்குக் கீழே 60 அடி (18 மீ) ஆழத்தில் உதய்கீர் மகாராஜின் சமாதியும் உள்ளது. பல நூற்றாண்டுகளாக உள்ளூர் முஸ்லீம் ஆட்சியாளர்களால் அறிவு மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்தியதற்குச் சான்றளிக்கும் அரபு மற்றும் பாரசீக மொழியில் எழுதப்பட்ட சில அரிய கல்வெட்டுகள் இதில் உள்ளன.[2]

நிஜாம் மீதுள்ள அழுத்தத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் வகையில் இந்தக் கோட்டை மராத்தியர்களின் தரைப்படைத் தளமாகச் செயல்பட்டது. இந்தக் கோட்டை 1818 வரை மராத்தியர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது, பின்னர் இது ஆங்கிலேயர்களிடமிருந்து நிஜாமிடம் மாறியது.

2022ஆம் ஆண்டில், கோட்டையின் வளாகத்தைத் தன்னார்வலர்களால் சுத்தம் செய்யும் போது, 5 பீரங்கிகள் மற்றும் பயன்படுத்தப்படாத ஏராளமான பீரங்கி குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவை 14 அல்லது 15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று மதிப்பிடப்பட்டுள்ளது.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Udgir Fort". Government of Maharashtra.
  2. 2.0 2.1 "About Udgir Fort". Maharashtra Tourism.
  3. "-ऐतिहासिक खजिना! उदगीरच्या किल्ल्यात दोन ट्रक तोफगोळयासह पाच तोफाही सापडल्या" (in Marathi). Lokmat. 3 May 2022.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=உத்கீர்_கோட்டை&oldid=4082396" இலிருந்து மீள்விக்கப்பட்டது