உள்ளடக்கத்துக்குச் செல்

உடையும் இந்தியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உடையும் இந்தியா?: ஆரிய திராவிடப் புரட்டும் அந்நியத் தலையீடுகளும்
நூலாசிரியர்ராஜிவ் மல்ஹோத்ரா, அரவிந்தன் நீலகண்டன்
உண்மையான தலைப்புBreaking India: Western Interventions in Dravidian and Dalit Faultlines
மொழிபெயர்ப்பாளர்அரவிந்தன் நீலகண்டன்
நாடுIndia
மொழிTamil
வெளியீட்டாளர்கிழக்குப் பதிப்பகம்
வெளியிடப்பட்ட நாள்
1 December 2011
ஆங்கில வெளியீடு
12 April 2011
பக்கங்கள்768
ISBN978-8184933109

உடையும் இந்தியா?: ஆரிய திராவிடப் புரட்டும் அந்நியத் தலையீடுகளும் (Breaking India: Western Interventions in Dravidian and Dalit Faultlines) என்பது ராஜீவ் மல்கோத்ரா, அரவிந்தன் நீலகண்டன் ஆகியோரால் எழுதப்பட்ட ஒரு நூல் ஆகும். இந்நூல், மேற்கத்திய நிறுவனங்கள் திராவிடர் இயக்கம் மற்றும் தலித் அடையாளம் ஆகியவற்றுக்கு ஆதரவு அளிப்பதன் வாயிலாக இந்தியாவின் ஒருமைப்பாட்டைக் குலைத்து வருகின்றன என்று வாதிடுகின்றது. இந்நூல் முதலில் ஆங்கிலத்தில் அமரிலிஸ் பதிப்பகத்தால் 2011 இல் பதிப்பிக்கப்பட்டது. 2011இல் இது இந்தியாவில் முதன்மையாக விற்கப்பட்ட 10 நூல்களில் ஒன்றாக இருந்தது.[1]

சுருக்கமான அறிமுகம்

[தொகு]

இந்நூலை பரப்பும் வலைத்தளமான breakingindia.com இன் படி:

இந்தியாவின் ஒருமைப்பாடானது 3 சர்வதேச வலைப்பின்னல்களினால் குலைக்கப்பட்டு வருகிறது. அவை: (i) பாகித்தானுடன் தொடர்புடைய இசுலாமியத் தீவிரவாதம், (ii) சீனாவால் ஆதரவளிக்கப்பட்டு நேபாளம் போன்ற நாடுகளின் வழியாக வரும் மாவோயிச, மார்க்சியத் தீவிரவாதம், மற்றும் (iii) மனித உரிமை என்ற பெயரால் மேற்கத்தவர்களால் வளர்த்தெடுக்கப்படும் திராவிடர், மற்றும் தலித் அடையாளப் பிரிவினைவாதம். இந்நூல் இதில் மூன்றாவதின் மீது தன் கவனத்தைக் குவிக்கிறது: அமெரிக்க, ஐரோப்பியத் திருச்ச்சபைகளின் பங்கு, கல்வியாளர்கள், சிந்தனாவாதிகள், தொண்டு நிறுவனங்கள், அரசு மற்றும் மனித உரிமைக் குழுக்கள் ஆகியவை இந்தியாவின் இதர மக்களிடமிருந்து திராவிடர் மற்றும் தலித் சமுதாயத்தினர் ஆகியோரை அடையாளத்தைக் கொண்டு செய்யப்படும் பிரிவினைவாதத்தை வளர்த்துவருகின்றன.[2]

உடையும் இந்தியா வின் அறிமுக அத்தியாயத்தில் ராஜிவ் மல்கோத்ரா இப்படி எழுதுகிறார்:

இந்நூல் திராவிடர் மற்றும் தலித் அடையாளம் ஆகியவற்றின் வரலாற்றுத் தொடக்கத்தைக் கவனிப்பதோடு மட்டுமல்லாமல் நிகழ்காலத்தில் இப்பிரிவினைவாதங்களைக் கொண்டு இயங்குபவர்களையும் கவனிக்கிறது. இவ்வாறு செயல்படும் தனி நபர்கள் மற்றும் நிறுவங்கள் அவர்களின் குறிக்கோள்கள், செயல்பாடுகள் மற்றும் இறுதியாக அவர்கள் அடைய நினைக்கும் விளைவுகள் ஆகியவற்றை அலசுகிறது. அவற்றுள் அதிகமானவை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து செயல்படுபவை ஆயினும் இந்தியாவிலிருந்து செயல்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்தியாவிலிருந்து செயல்படுபவர்கள் அமெரிக்க ஐரோப்பிய நிறுவனங்களின் இந்தியக் கிளை போல செயல்படுகின்றனர்.[3]

நூலின் இணை ஆசிரியரான அரவிந்தன் நீலகண்டன் சொல்கிறார்: "நாங்கள் இப்புத்தகத்தை அனைத்து இந்தியர்களுக்காகவும், உங்களுக்காகவும் எனக்காகவும் எழுதினோம். ஏனெனில் நம் குழந்தைகள் எதிர்காலத்தில் அகதி முகாமில் தஞ்சம் அடையவேண்டிய நிலையை நாங்கள் விரும்பவில்லை."[4]

உபேந்திர பக்‌சி இப்புத்தம் "3-S" களின் மீது தன் கவனத்தைக் குவிக்கிறது என்கிறார்:[5]

  1. இந்தியச் சுதந்திரத்தை அடிபணிய வைத்தல்
  2. சுதந்திர இந்தியாவைக் கண்காணித்தல்
  3. சுதந்திர இந்தியாவை பலவீனமாக்குதல்

பதிப்பாளரும் எழுத்தாளரும் வலைப்பதிவாளருமான பத்ரி சேசாத்ரி எழுதுகிறார்: "என் கருத்தில் இந்தப் புத்தகம் கிறிஸ்தவர்களுக்கு எதிரானதல்ல. வரைமுறையற்ற கிறிஸ்தவ மதமாற்றம், அதனைச் செயல்படுத்த இந்தியாவுக்குள் நுழையும் பணம், அந்தப் பிரசாரத்தின் அடிநோக்கமாக இந்து மதமும் இந்து கலாசாரமும் தாக்கப்படுவது மட்டுமல்ல; இந்தியாவின் ஒருமைப்பாடும் அச்சுறுத்தப்படுதல், அதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் அறிவுலக வலைப்பின்னல், அதன் பின்னணியில் இருப்போர் ஆகியவற்றைத்தான் புத்தகம் வெளிக்கொணர்கிறது. இது கிறிஸ்தவர்களிடையே ஒரு விவாதத்தை ஏற்படுத்தவேண்டும். ஆன்மிகரீதியில் மனமாற்றத்தை உருவாக்கி ஒருவரை கிறிஸ்தவத்துக்கு இழுக்கவேண்டுமா அல்லது கார்பொரேட்ரீதியில் ஜோஷுவா டேடாபேஸை வைத்துக்கொண்டு கிறிஸ்தவ மதமாற்றத் திட்டத்தில் Vision, Mission, Strategy and Plan ஈடுபடவேண்டுமா; நிறுவனப்படுத்தப்பட்ட கிறிஸ்தவத்தால் யாருக்கு சகாயம் போன்றவை கிறிஸ்தவர்கள் வெளிப்படையாகச் செய்யவேண்டிய விவாதம். இந்துக்களுடன் செய்யவேண்டிய விவாதம். மதமற்ற நாத்திகர்களுடன் செய்யவேண்டிய விவாதம்."[6]

மொழிபெயர்ப்புகள்

[தொகு]

Breaking India: Western Interventions in Dravidian and Dalit Faultlines என்ற தலைப்பைக் கொண்ட மூலப் புத்தகமானது டிசம்பர் 2011 இல் தமிழ்-இல் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டது.[7] ஏப்ரல் 2014-இல் இப்புத்தகத்தின் இந்திப் பதிப்பு பாரத் விகாந்தன் என்ற தலைப்பில் வெளியானது.[8]

2015 பிப்ரவரியில் கன்னட மொழிபெயர்ப்பு கன்னட இலக்கிய ஆளுமையான எம். சிதானந்த மூர்த்தியால் பாரத பஞ்சானா என்ற தலைப்பில் பெங்களூரில் வெளியிடப்பட்டது[9] இதைக் கன்னடத்தில் லட்சுமிகாந்த் எக்டே, ஆர். வி. ஜககிர்தர் ஆகியோர் மொழிபெயர்த்தனர். கன்னடப் பதிப்பிற்கான முன்னுரையை எழுத்தாளர் எஸ். எல். பைரப்பா எழுதியுள்ளார்.[10]

வரவேற்பு

[தொகு]
உடையும் இந்தியா வெளியீடு (பெப் 2011)

நேர்மறை விமர்சனங்கள்

[தொகு]

புத்தக வெளியீட்டின் போது பேசிய பலரும் உடையும் இந்தியா-வுக்கு நேர்மறையான விமர்சனங்களை முன்வைத்தனர். உதாரணத்திற்கு:

புகழ் பெற்ற சர்வதேச சட்ட அறிஞரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராம் ஜெத்மலானி பேசுகையில் இந்நூல் "நமக்கு விழிப்புணர்வை ஊட்டுவதாகவும் எச்சரிக்கை தருவதாகவும் உள்ளது" என்றார். மேலும், இந்த விழிப்புணர்வும் எச்சரிக்கையும் நமது உள்நாட்டு எதிரிகள் மட்டுமின்றி அந்நிய எதிரிகள் மற்றும் அவர்கள் கூட்டாக செயல்படும் உள்நாட்டுப் போலிமாதிரிகள் ஆகியோர் எப்படி இந்தியாவை பலவீனமாக்கவும் ஒற்றுமையைக் குலைக்கவும், நமது சுதந்திரம் இறையாண்மை, கலாச்சாரம் ஆகியவற்றை முற்றாக அழியும் சூழலை உருவாக்கவும் முயன்றுகொண்டிருக்கிறார்கள் என்பனவற்றைப் பற்றியும் என்றார்.[11]

பத்தி எழுத்தாளரும் பொதுவெளியில் செயல்படும் அறிவுஜீவியும் பொருளாதார ஆய்வாளருமான சு. குருமூர்த்தி சொன்னார்:

இது பலகாலமாக செய்யப்பட்டமல் தாமதிக்கப்பட்ட செயல். நமது தேசியம், வரலாறு, மிகப்பெரும் நாயகர்கள், மட்டுமல்லாமல் திருவள்ளுவர் போன்ற நமது ஆன்மிக ஆளுமைகளைக் கூட குதர்க்கமாகப் புரிந்துகொள்ளப்படுவதற்காக இயங்கும் சக்திகளை வெளியே அடையாளம் காட்ட, அபரிமிதமான உழைப்பு செலுத்தப்பட்டுள்ளது.

எதிர்மறை விமர்சனங்கள்

[தொகு]

கிருத்தவ தத்துவவியலாளரும் கிருத்தவ சமூக சீர்திருத்தவாதியுமான விசால் மங்கல்வாதி (இவரும் இப்புத்தகத்தின் ஒரு பேசுபொருள்) எழுதினார்:

உடையும் இந்தியாவின் ஆசிரியர்கள் தகவல்களைத் திரட்டுவதில் மாபெரும் திறனை வெளிப்படுத்தியுள்ளனர். இப்புத்தகத்தில் அவர்கள் குறை கூறியுள்ளவர்களின் கூற்றுகளை பொருள்கொள்வதில் ஒரு நியாயத்தைத் தங்கள் அறிவை ஓர்மையுடன் பயன்படுத்தி இருந்தால் பலரது மனதையும் இதயங்களையும் வென்றிருக்கக் கூடும். யாரொருவரையும் விட்டுவைக்காமல், ஒவ்வொரு மேலை அறிஞர், மொழியிலாளர், அறிவியலாளர், அரசியல்வாதி, கொடையாளர் மற்றும் கிருத்தவ மிஷனர்கள் என யாரெல்லாம் ‘கீழ் சாதி’யினர் மீதான் அடக்குமுறைக்கு எதிராகப் பேசினார்களோ எல்லோரையும் சாடினாலும், ஆசிரியர்களின் நோக்கமான, இந்தியாவை ஒற்றுமைப் படுத்துதல் ஒரு தூய நோக்கமாகும். இந்தியாவில் பிரிவுகளுக்கு காரணமாக இருக்கும் "Faultlines"களை களைந்து இணைப்பை உருவாக்க, ஒற்றுமைக்கான குரலை நேர்மையுடனும் பெருந்தன்மையுடனும் ஈகையுடனும் முன்னெடுத்தால் அது முடியும். முழுப்புத்தகத்தையும் படித்தபின் எனக்கு எஞ்சிய எண்ணம் என்னவென்றால், சாதியும் தீண்டாமையும் தவறு என நினைக்கும் ஒவ்வொரு புத்திசாலி இந்துவின் மீதும் ஆசிரியர்கள் சராமாரியாக வசை பொழிந்துள்ளனர்[12]

கீதா ராமஸ்வாமி இப்படி எழுதுகிறார்:

ஒரு புத்தகத்தைப் படிக்கும் போது ஏற்படும் இடையூறுகளில் முக்கியமானது சர்ச்சைக்குரிய நீளமான பிரச்சார நெடி. ஆசிரியர்களின் நோக்கமானது தமிழ் நாட்டில் விவிலியத்தை உயர்த்திப் பிடிப்பவர்களின் எழுதப்பட்ட வரலாற்றை நேருக்கு நேர் எதிர்ப்பது. ஆனால் வரலாற்றுத் தகவல்களைக் கையாள்வதில் நிபுணத்துவமும் தொழில்முறை வழிமுறையும் ஆசிரியர்களிடம் இல்லை [...] திராவிட மற்றும் தலித் பிரிவுகளை அலசுவதில் இந்தப் பிரச்சனை வெளிப்படுகிறது. எல்லாவற்றையும் மறுப்பது என்பதில் இருந்து அவர்கள் வெளியேறவே இல்லை. இந்தப் பிரிவுகளை ஆராய்ந்து, அதில் சொல்லப்பட்டுள்ள உரையாடல்கள், அடையாள அரசியல் ஆகியவற்றுக்கு குறைந்தபட்ச செல்லுபடியே உள்ளது என்பதை ஒப்புகை செய்து, பின்னர் அவற்றின் எல்லைகளுக்குள் நின்று விவாதிக்க வேண்டும் என ஆசிரியர்களிடம் எவரும் எதிர்பார்ப்பர். மாறாக, புத்தகம் முழுவதும் மறுப்பு சொல்வதோடு அதன் தொடர்ச்சியாக மூர்க்கமான நிலையில் விழுகின்றனர்.[13]

மேலும் கீதா இப்படி தவறாக எழுதினார்:

திராவிடக் கருத்தாக்கத்தினர் ஆரியப் படையெடுப்பை வலியுறுத்தும் (ரொமிலா தாபர் போன்ற அறிஞர்களால் ஆதரிக்கப்படுகிற) நிலையில், ராஜிவ் மல்ஹோத்ரா அது நிகழவில்லை என நிரூபிக்கிறார்- எனினும் அது சோர்வளிக்கக் கூடிய வறட்டு வாதமாக உள்ளதே தவிர நிபுணத்துவத்துடன் இல்லை.

(ஆரியப் படையெடுப்பு என்னும் கருத்தாக்கம் தற்போது ரொமிலா தாபர் உட்பட புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர்கள் அனைவராலும் கைவிடப்பட்டுவிட்டது).[14]

மேலும் பார்க்க

[தொகு]

உசாத்துணை

[தொகு]
  1. "Amazon India Bestsellers". April 2014.
  2. "Home". Breaking India.
  3. Rajiv Malhotra (2011), Breaking India: Introduction
  4. "Breaking India. The book launch The ploy against India exposed". 27 Feb 2011. Archived from the original on 16 June 2013. பார்க்கப்பட்ட நாள் 4 June 2013.
  5. "Book Release: 'Breaking India'". 14 Feb 2011. Archived from the original on 16 ஜூன் 2020. பார்க்கப்பட்ட நாள் 16 ஜூன் 2020. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  6. Seshadri, Badri. "உடையும் இந்தியா".
  7. "Udaiyum India? on Flipkart".
  8. "Rajiv Malothra on Twitter". April 2014.
  9. "Rajiv Malhotra on Twitter". 15 Feb 2015.
  10. "Kannada Version of Shri Rajiv Malhotra's Breaking India; Book Release in Bangalore". Archived from the original on 2 April 2015. பார்க்கப்பட்ட நாள் 9 March 2015.
  11. "Ram Jethmalani releases the book Breaking India". 9 Feb 2011.
  12. Review by Vishal Mangalwadi பரணிடப்பட்டது அக்டோபர் 18, 2011 at the வந்தவழி இயந்திரம்
  13. Ramaswamy, Gita (23 May 2011). "Yankee Hindutva Strikes". Outlook. பார்க்கப்பட்ட நாள் 18 January 2020.
  14. {{cite web | url=http://varnam.nationalinterest.in/2004/03/romila_thapar_no_aryan_invasio பரணிடப்பட்டது 2020-06-16 at the வந்தவழி இயந்திரம்

வெளி இணைப்புகள்

[தொகு]

உடையும் இந்தியா

ராஜிவ் மல்கோத்ரா

காணொலிகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=உடையும்_இந்தியா&oldid=3791428" இலிருந்து மீள்விக்கப்பட்டது