ஈழத்தமிழரின் உலகளாவிய உண்ணாநிலைப் போராட்டங்கள், ஏப்ரல் 2009
Appearance
வன்னியில் இலங்கைப் படைத்துறை மேற்கொண்ட படையெடுப்பில் மூவாயிரம் வரையானோர் இறந்து, பல்லாயிரக்கணக்காணோர் காயமடைந்து, ஏறக்குறைய அனைவரும் அகதிகளாகினர். இம் மக்களுக்கு உணவு, மருந்து, உறையுள் மறுக்கப்பட்டு, தொடர்ந்து வன்முறையான தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த நிலையைக் கண்டித்து, உடனடி போர் நிறுத்தம் கோரி உலகின் பல நாட்டு தலைநகரங்களிலும் ஈழத்தமிழர்கள் உண்ணாநிலைப் போராட்டங்களில் ஈடுபட்டனர். இவர்கள் மேற்கொண்ட பல்வேறு எதிர்ப்புப் போராட்டங்களில் உண்ணாநிலைப் போராட்டங்கள் ஒரு முக்கிய பங்கை வகித்தன.