உள்ளடக்கத்துக்குச் செல்

ஈராணைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஈராணைட்டு
Iranite
பொதுவானாவை
வகைசிலிக்கேட்டு கனிமம்
வேதி வாய்பாடுPb10Cu(CrO4)6(SiO4)2(F,OH)2
இனங்காணல்
நிறம்பழுப்பு முதல் ஆரஞ்சு வ்ரை
படிக இயல்புதட்டையான நிறைவடிவ படிகங்களுக்குச் சமம்
படிக அமைப்புமுச்சரிவச்சு
மோவின் அளவுகோல் வலிமை3
மிளிர்வுபளபளப்பு
கீற்றுவண்ணம்மஞ்சள்
ஒப்படர்த்தி5.8
ஒளியியல் பண்புகள்ஈரச்சு
ஒளிவிலகல் எண்nα = 2.250 – 2.300 nγ = 2.400 – 2.500
இரட்டை ஒளிவிலகல்δ = 0.150 – 0.200
மேற்கோள்கள்[1][2][3]

ஈராணைட்டு (Iranite) என்பது Pb10Cu(CrO4)6(SiO4)2(F,OH)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். முச்சரிவச்சு படிக அமைப்பில் உள்ள ஈய செப்பு குரோமேட் சிலிகேட்டு கனிமம் என்று இக்கனிமம் வகைப்படுத்தப்படுகிறது. முதன்முதலில் ஈரான் நாட்டில் ஈராணைட்டு கனிமம் கண்டுபிடிக்கப்பட்டது. இது எமியீட்ரைட்டு என்ற அரிய கனிமத்தின் (Pb10Zn(CrO4)6(SiO4)2(F,OH)2).[2] செப்பு ஒப்புமையாக கருதப்படுகிறது.

நீர்வெப்ப ஈயம் தாங்கும் விளிம்புகளில் ஆக்சிசனேற்ற விளைபொருளாகத் தோன்றுகிறது. டையோப்டேசு , போர்னாசைட்டு, உல்ஃபெணைட்டு, மிமெடைட்டு, செருசைட்டு மற்றும் டயாபோலைட்டு ஆகியவை இதனுடன் தொடர்புடைய சேர்மங்களில் அடங்கும்.[1] முதன்முதலில் 1970 ஆம் ஆண்டு ஈரானின் அனராக்கு நகரத்திற்கு வடகிழக்கில் உள்ள செபார்சு சுரங்கத்தில் ஈராணைட்டு கிடைத்ததாக விவரிக்கப்படுகிறது.[2][1]

பன்னாட்டு கனிமவியல் சங்கம் ஈராணைட்டு கனிமத்தை Irn[4] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈராணைட்டு&oldid=4210924" இலிருந்து மீள்விக்கப்பட்டது