உள்ளடக்கத்துக்குச் செல்

ஈய சிடீயரேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஈய சிடீயரேட்டு
பெயர்கள்
வேறு பெயர்கள்
ஈயம்(2+) ஆக்டாதெக்கானோயேட்டு, ஈய(II) சிடீயரேட்டு, ஈயம் இருசிடீயரேட்டு
இனங்காட்டிகள்
1072-35-1 Y
ChemSpider 55198
EC number 214-005-2
InChI
  • InChI=1S/2C18H36O2.Pb/c2*1-2-3-4-5-6-7-8-9-10-11-12-13-14-15-16-17-18(19)20;/h2*2-17H2,1H3,(H,19,20);/q;;+2/p-2
    Key: UQLDLKMNUJERMK-UHFFFAOYSA-L
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 61258
  • CCCCCCCCCCCCCCCCCC(=O)[O-].CCCCCCCCCCCCCCCCCC(=O)[O-].[Pb+2]
UNII HQ5TZ3NAEI
பண்புகள்
C
36
H
70
PbO
4
வாய்ப்பாட்டு எடை 774.14
தோற்றம் வெண்மையான தூள்
அடர்த்தி 1.4 கி/செ.மீ3
உருகுநிலை 115.7 °C (240.3 °F; 388.8 K)
கொதிநிலை 359.4 °C (678.9 °F; 632.5 K)
சிறிதளவு கரையும்
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The health hazard pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The environment pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H302, H332, H360, H373
P260, P261, P281, P304, P340, P405, P501
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

ஈய சிடீயரேட்டு (Lead stearate) என்பது C36H70PbO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஓர் உலோகக் கரிமச் சேர்மமாகும்.[1] ஈயமும் சிடீயரிக் அமிலமும் சேர்ந்து இந்த உப்பு உருவாகிறது. இது ஓர் உலோக சவர்க்காரம் என்று வகைப்படுத்தப்படுகிறது. அதாவது இவ்வுப்பு ஒரு கொழுப்பு அமிலத்தின் உலோக வழிப்பெறுதியாக கருதப்படுகிறது. ஈய சிடீயரேட்டு நச்சுத்தன்மை கொண்டதாகும்.[2] The compound is toxic.

தயாரிப்பு

[தொகு]

சிடீயரிக் அமிலத்துடன் ஈய(II) ஆக்சைடைச் சேர்த்து வினையூக்கியாக அசிட்டிக் அமிலத்தையும் சேர்த்து வினைபுரியச் செய்தால் ஈய சிடீயரேட்டை தயாரிக்க முடியும்.[3]

ஈய(II) அசிட்டேட்டுடன் சோடியம் சிடீயரேட்டைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் பரிமாற்ற வினை நிகழ்ந்தும் ஈய சிடீயரேட்டு உருவாகிறது:

பண்புகள்

[தொகு]

இலேசான கொழுப்பு வாசனையுடன் இருக்கும். வெள்ளை தூளாக காணப்படும் இது நீரில் மூழ்கும்.[4] காற்றில் ஈரமுறிஞ்சும்.

தண்ணீரில் சிறிது கரையும். சூடான எத்தனாலில் கரையும்.

பயன்கள்

[தொகு]

பலபடியாக்கல் மற்றும் ஆக்சிசனேற்ற வினைச் செயல்முறைகளை விரைவுபடுத்தவும், எண்ணெய் வண்ணப்பூச்சுகள் மற்றும் மெருகூட்டிகளில் உலர்த்தியாகவும் ஈய சிடீயரேட்டு பயன்படுத்தப்படுகிறது. வினைல் பலபடிகளில் நிலைப்படுத்தியாகவும், ஓர் உயவு எண்ணெயாகவும், பெட்ரோலியப் பொருட்களில் அரிப்புத் தடுப்பானாகவும் ஈய சிடீயரேட்டு பயன்படுத்தப்படுகிறது.[5][6][7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Lead Stearate". American Elements. பார்க்கப்பட்ட நாள் 7 March 2023.
  2. "T3DB: Lead stearate". t3db.ca. பார்க்கப்பட்ட நாள் 7 March 2023.
  3. "Preparation process of lead stearate based on melting method". 18 December 2013. பார்க்கப்பட்ட நாள் 7 March 2023.
  4. "LEAD STEARATE | CAMEO Chemicals | NOAA". cameochemicals.noaa.gov. பார்க்கப்பட்ட நாள் 7 March 2023.
  5. "Lead Stearate » Waldies Co. Ltd". Waldies Co. Ltd. பார்க்கப்பட்ட நாள் 7 March 2023.
  6. Encyclopedia of Chemical Technology: Fuel resources to heat stabilizers (in ஆங்கிலம்). Wiley. 1991. p. 1074. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-471-52669-8. பார்க்கப்பட்ட நாள் 7 March 2023.
  7. Titow, M. V. (6 December 2012). PVC Technology (in ஆங்கிலம்). Springer Science & Business Media. p. 269. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-94-009-5614-8. பார்க்கப்பட்ட நாள் 7 March 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈய_சிடீயரேட்டு&oldid=3810453" இலிருந்து மீள்விக்கப்பட்டது