உள்ளடக்கத்துக்குச் செல்

இ. பி. பௌலோசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இ. பி. பௌலோசு
கேரள் அரசின் உணவு மற்றும் வேளாண்துறை அமைச்சர்
பதவியில்
22 பெப்ரவரி 1960 – 10 செப்டம்பர் 1964
முன்னையவர்கே. சி. ஜியார்ஜ்
பின்னவர்எம். என். கோவிந்தன் நாயர்
கேரள சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1957–1965
முன்னையவர்தொகுதி உருவாக்கப்பட்டது
பின்னவர்தொகுதி எடுக்கப்பட்டது
தொகுதிஇராமமங்கலம்
திருவிதாங்கூர் சட்டப்பேரவை உறுப்பினர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1909-10-02)2 அக்டோபர் 1909
இராமமங்கலம், திருவிதாங்கூர்
இறப்பு17 நவம்பர் 1983(1983-11-17) (அகவை 74)
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு

இ. பி. பௌலோசு (E. P. Poulose) (2 அக்டோபர் 1909 - 17 நவம்பர் 1983) ஓர் இந்திய வழக்கறிஞரும் மற்றும் அரசியல்வாதியும் ஆவார். இவர் 1957 முதல் 1965 வரை கேரள சட்டமன்றத்தில் இராமமங்கலம் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினரான பௌலோசு 1960 முதல் 1964 வரை கேரள் அரசின் உணவு மற்றும் வேளாண்துறை அமைச்சராக இருந்தார்.

சுயசரிதை

[தொகு]

இ. பி. பௌலோசு 1909 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி அப்போதைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக இருந்த ராமமங்கலம் கிராமத்தில் பிறந்தார். 1933 இல், சட்டப் பட்டம் பெற்று வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினார். ஒரு சிரிய கிறிஸ்தவரான இவர் 1935 இல் இந்திய தேசிய காங்கிரஸில் சேர்ந்தார். பின்னர், இந்திய சுதந்திர இயக்கத்தில் உறுப்பினரானார். இந்த இணைப்பின் காரணமாக, இவர் 1946 இல் பிரிட்டிஷ் அதிகாரிகளால் சிலகாலம் சிறையில் அடைக்கப்பட்டார். 1948 இல், திருவிதாங்கூர் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். [1] [2]

அரசியல்

[தொகு]

1957 தேர்தலில், புதிதாக நிறுவப்பட்ட கேரள சட்டப்பேரவைக்கு இராமமங்கலம் தொகுதியின் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி வேட்பாளர் பரமேசுவரன் நாயரை எதிர்த்து போட்டியிட்டார். நாயரைவிட 20,086 வாக்குகள் அதிகம் பெற்று பௌலோசு வெற்றி பெற்றார்.[3]பின்னர், 1960இல் நடந்த கேரள சட்டப்பேரவைத் தேர்தலில், 32,448 வாக்குகள் பெற்று இந்தியப் பொதுவுடைமைக் கட்சி வேட்பாளர் பி. வி. ஆபிரகாமை வெற்றி பெற்றார்.[4] 1960 பிப்ரவரி 22 அன்று கேரளாவின் முதலமைச்சரான பட்டம் தாணு பிள்ளையின் தலைமையிலான அரசாங்கத்தில் உணவு மற்றும் வேளாண் அமைச்சராக பௌலோசு நியமிக்கப்பட்டார். 1962இல் பிள்ளை தனது பதவியை ராஜினாமா செய்த பின்னர், பிள்ளையின் வாரிசான ஆர். சங்கரின் அரசாங்கத்திலும் இவர் தக்கவைக்கப்பட்டார். பௌலோசு 1964 செப்டம்பர் 10 வரை அமைச்சராக பணியாற்றினார்.[1][2]

அடுத்த ஆண்டு, 1965 கேரள சட்டப்பேரவைத் தேர்தலில், மூவாற்றுபுழா சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டார். 18,929 வாக்குகளைப் பெற்று கேரள காங்கிரஸ் வேட்பாளர் ஏ. டி. பத்ரோசை தோற்கடித்தார். பத்ரோசுக்கு 14659 வாக்குகள் கிடைத்தது.[5]

கிறுத்துவ ஆதரவு

[தொகு]

சட்டமன்றத்தில் இருந்த காலத்தில், பௌலோசு கிறிஸ்தவ மரபுகளுக்கு ஆதரவாக இருந்தார். 1957 ஆம் ஆண்டில், கேரள கல்விச் சட்டத்திற்கு எதிராக இவரும் மற்றும் பிற கிறிஸ்தவ சட்டமன்ற உறுப்பினர்கள் குரல் எழுப்பினர் தனியார் கிறிஸ்தவ பள்ளிகளில் ஒழுங்குமுறைகளை நிறுவும் இந்த மசோதாவை கேரளாவில் உள்ள கிறிஸ்தவர்கள் கடுமையாக எதிர்த்தனர்.[6] அடுத்த ஆண்டு, 1916 திருவிதாங்கூர் கிறிஸ்தவ வாரிசுச் சட்டத்தை ரத்து செய்யும் மசோதாவை பௌலோசு எதிர்த்தார். இது கிறிஸ்தவ வரதட்சணை முறை குறித்த ஒரு சட்டமாகும். இதில் வரதட்சணை பெற்ற கிறிஸ்தவ பெண்கள் தங்கள் குடும்பத்தின் சொத்துகளுக்கு பரம்பரைக்கான அனைத்து உரிமைகோரல்களையும் இழக்க நேரிடும்.[7][8]

இறப்பு

[தொகு]

பௌலோசு 1983 நவம்பர் 17 அன்று இறந்தார்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "E. P. Paulose".
  2. 2.0 2.1 "E. P. Poulose".
  3. "Elections to the First Kerala Assembly – 1957" (PDF). கேரள அரசு. p. 7. Archived from the original (PDF) on 2014-07-26. Retrieved 2022-11-01.
  4. "Interim Elections to the Kerala Assembly – 1960" (PDF). கேரள அரசு. p. 9. Archived from the original (PDF) on 2014-07-26. Retrieved 2022-11-01.
  5. "Interim Elections to the Kerala Assembly – 1965" (PDF). கேரள அரசு. p. 12. Archived from the original (PDF) on 2013-04-02. Retrieved 2022-11-01.
  6. Thomas 2018, ப. 97.
  7. Thomas 2018, ப. 102.
  8. Thomas 2011, ப. 278.

நூல் ஆதாரங்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இ._பி._பௌலோசு&oldid=4140458" இலிருந்து மீள்விக்கப்பட்டது