உள்ளடக்கத்துக்குச் செல்

இ. இரவிக்குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இ. இரவிக்குமார் (E. Ravikumar, இறப்பு:26, பெப்ரவரி, 2014) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1991 ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலில், திருவள்ளுவர் தொகுதியிலிருந்து, அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

இரவிக்குமார் சென்னை மணலி புதுநகர் அருகே நாப்பாளையம் பகுதியை பூர்வீகமாக கொண்டவர். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள திருவேங்கடாபுரம் பகுதியில் வசித்து வந்தார். 1991 ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில், திருவள்ளுவர் தொகுதியிலிருந்து, அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே காலகட்டத்தில் திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்த நிர்மலாவை திருமணம் செய்து கொண்டார். கட்சியில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளராக இருந்தார்.[2]

2014 பெப்ரவரி 26 அன்று இவர் ஒட்டிச் சென்ற மகிழுந்தில் ஏற்பட்ட விபத்தில் இறந்தார். உடன் பயணித்த அவரது மனைவி நிர்மலா படுகாயம் அடைந்தார்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Former AIADMK MLA dies in road accident near Chennai". The Times of India. 2024-02-26. பன்னாட்டுத் தர தொடர் எண் 0971-8257.
  2. "முன்னாள் அதிமுக எம்எல்ஏ சாலை விபத்தில் மரணம்". 2024-02-27. {{cite magazine}}: Cite magazine requires |magazine= (help)
  3. Bureau, The Hindu (2024-02-26). "Former AIADMK MLA E. Ravikumar dies in road accident near Chennai". The Hindu (in Indian English). பன்னாட்டுத் தர தொடர் எண் 0971-751X.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இ._இரவிக்குமார்&oldid=4050160" இலிருந்து மீள்விக்கப்பட்டது