உள்ளடக்கத்துக்குச் செல்

இஸ்ப்-உத் தகிரிர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இஸ்ப்-உத் தகிரிர்
حِزبُ التّحرير
தலைவர்அத்தா அபி ரஷ்தா
நிறுவனர்தகி அல்-தீன் அல்-நபானி
தொடக்கம்1953, கிழக்கு எருசலேம், யோர்தான்
தலைமையகம்பெய்ரூத், லெபனான்
உறுப்பினர்10,000 – 1 மில்லியன்
கொள்கைஇசுலாமியவாதம், முஸ்லீம் மேலாதிக்கம், இசுலாமிய அரசு, சலாபி இயக்கம், எதிர் பொதுவுடமை, எதிர் மேற்குலகம், எதிர் நாத்திகவாதம்
சமயம்இசுலாம்
கட்சிக்கொடி
Flag of Hizb ut-Tahrir.svg
இணையதளம்
hizb-ut-tahrir.org

இஸ்ப்-உத் தகிரிர் (Hizb ut-Tahrir) இது ஒரு சர்வதேச இஸ்லாமியவாத மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாத அரசியல் அமைப்பாகும். இதன் நோக்கம் முஸ்லிம் சமூகத்தை (உம்மா என்று அழைக்கப்படும்) ஒன்றிணைப்பதற்கும், உலகளவில் இசுலாமியச் சட்ட முறைமையை நடைமுறைப்படுத்துவதற்கும், இஸ்லாமிய கலீபாவை மீண்டும் நிறுவுவதாகும்.[1]

ஹிஸ்ப் உத்-தஹ்ரீர் 1953-ஆம் ஆண்டில் ஜோர்தானின் கட்டுப்பாட்டில் இருந்த கிழக்கு எருசலேம் நகரத்தில் ஒரு அரசியல் அமைப்பாக நிறுவப்பட்டது, ஹைபாவைச் சேர்ந்த பாலஸ்தீனிய இஸ்லாமிய அறிஞரான தாகி அல்-தின் அல்-நபானி என்பவரால் இந்த அமைப்பு நிறுவப்பட்டது. இவர் பாலஸ்தீன.கலிபாவை நிறுவுவதற்கான ஒரு திட்டத்தையும், "வரைவு அரசியலமைப்பையும்" உருவாக்கினார். இது ஜிகாத்தை இன்றியமையாத அம்சமாகக் கருதுகிறது மற்றும் ஜிகாத் மூலம் நிறுவப்படும் இஸ்லாமிய அரசு நிறுவப்படும் வரை போராடுவதை நோக்கமாகக் கொண்டது.

ஹிஸ்ப் உத்-தஹ்ரீர் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இதன் உறுப்பினர் எண்ணிக்கை சுமார் ஒரு மில்லியன் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஹிஸ்ப் உத்-தஹ்ரீர் அமைப்பை ஐக்கிய இராச்சியம் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளிலும், சில அரசுகளால் தடை செய்யப்பட்ட போதிலும், பல அரபு மற்றும் மத்திய ஆசிய நாடுகளிலும் செயலில் உள்ளது. அமைப்பின் தலைமையானது ஜோர்டானில் மையமாகக் கொண்டுள்ளது. இலண்டனில் இதன் கூடுதல் தலைமையகம் கொண்டுள்ளது.

வங்கதேசம், சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், இந்தியா[2], ஜெர்மனி, துருக்கி, ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளில் ஹிஸ்ப் உத்-தஹ்ரீர் அமைப்பு தடைசெய்யப்பட்டுள்ளது. கஜகஸ்தான் மற்றும் "மத்திய ஆசியா, இந்தோனேசியா, லெபனான், யேமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் தவிர அனைத்து அரபு நாடுகளும் ஹிஸ்ப் உத்-தஹ்ரீரின் சட்ட அந்தஸ்தை நீக்கியுள்ளது.

தமிழ்நாட்டில்

[தொகு]

தமிழ்நாட்டில் இஸ்ப்-உத் தகிரிர் அமைப்பில் தொடர்புடைய 7 பேரை தேசியப் புலானய்வு முகமை அக்டோபர் 2024ல் கைது செய்து பயங்கரவாத குற்றங்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு பதிந்துள்ளது.[3]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இஸ்ப்-உத்_தகிரிர்&oldid=4113794" இலிருந்து மீள்விக்கப்பட்டது