உள்ளடக்கத்துக்குச் செல்

இவான் வில்லெல்ம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2011 ஆம் ஆண்டில் இவான் வில்லெல்ம்

இவான் வில்லெல்ம் (Ivan Wilhelm) செக் குடியரசைச் சேர்ந்த ஒர் அணு இயற்பியலாளர் மற்றும் பிராகா நகரில் உள்ள சார்லசு பல்கலைக்கழகத்தின் முன்னாள் முதல்வரும் ஆவார்.[1][2] இவர் 1942 ஆம் ஆண்டு மே மாதம் 1 ஆம் தேதியன்று திரணாவா நகரில் பிறந்தார். வில்லெல்ம் பிராகா நகரில் உள்ள செக் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் அணு அறிவியல் மற்றும் இயற்பியல் பொறியியல் புலத்தில் அணு இயற்பியலில் பட்டம் பெற்றார். 1967 ஆம் ஆண்டு வரை வில்லெல்ம் அங்கு விரிவுரையாளராகப் பணிபுரிந்தார். பின்னர் 1967 ஆம் ஆண்டில், வில்லெல்ம் அமெரிக்காவிற்கு படிக்க அனுப்பப்பட்டார். 1971 ஆம் ஆண்டு முதல், இவர் பிராகா நகரில் உள்ள சார்லசு பல்கலைக்கழகத்தின் கணிதம் மற்றும் இயற்பியல் துறைகளின் ஒரு பகுதியாக இருந்து வருகிறார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Bývalý rektor UK chce do europarlamentu" (in Czech). Lidové noviny. 2009-03-04. Retrieved 20 April 2010.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. Moravec, Václav (2005-07-07). "Ivan Wilhelm (interview)" (in Czech). BBC Czech. Retrieved 20 April 2010.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=இவான்_வில்லெல்ம்&oldid=3861776" இலிருந்து மீள்விக்கப்பட்டது