உள்ளடக்கத்துக்குச் செல்

இளங்கண்டீரக்கோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இளங்கண்டீரக்கோ என்பவன் கண்டீரக் கோப்பெரு நள்ளியின் தம்பி. கண்டீரக்கோப்பெருநள்ளி கடையெழு வள்ளல்களில் ஒருவன். நள்ளி எனச் சுருக்கமாகக் குறிப்பிடப்படுபவன். இளங்கண்டீரக்கோ தன் நண்பனான இளவிச்சிக்கோவுடன் விச்சிமலைநாட்டு அரண்மனையில் இருந்தான். அப்போது புலவர் வன்பரணர் அங்குச் சென்றார். இந்த இளங்கண்டீரக்கோவைத் தழுவினார். இளவிச்சிக்கோவைத் தழுவவில்லை. இவனை தழுவியதற்குக் காரணம் வள்ளலின் தம்பி என்பதாலாம். அவனைத் தழுவாமைக்குக் காரணம் அவன் வள்ளல் தன்மையே சிறிதுமில்லாத நன்னன் ஒருவனின் மகளை மணந்துகொண்டு அந்த நன்னன் மருமகனாய் இருந்ததுதானாம்.[1] இந்நிகழ்வு வன்பரணர் எழுதிய புறநானூறு 151வது பாடலில் வருகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. K.Shakthivel,. "புறநானூறு - 151. அடைத்த கதவினை! - இலக்கியங்கள், அடைத்த, புலவர், நீயும், அவன், நாட்டின், தம்பி, கதவினை, புறநானூறு, பொலந்தேர், அரசன், பரிசில், பெண்டிரும், இளவிச்சிக்கோவும், சங்க, எட்டுத்தொகை, பெருந்தலைச், சாத்தனார், இயன்மொழி, பண்டும்". www.tamilsurangam.in. Retrieved 2025-01-20.{{cite web}}: CS1 maint: extra punctuation (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=இளங்கண்டீரக்கோ&oldid=4194395" இலிருந்து மீள்விக்கப்பட்டது