உள்ளடக்கத்துக்குச் செல்

இலை வண்ண அட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Leaf chlour colour chart
இலை வண்ண அட்டை

இலை வண்ண அட்டை (Leaf colour chart-LCC) பயிரின் தேவையறிந்து உரமிட பயன்படுத்தப்படுகிறது. இதில் 1 முதல் 5 பசுமை நிற பட்டைகள் உள்ளன. நெல்லில் தழைச்சத்து மேலாண்மை இலை வண்ண அட்டையின் மூலம் முடிவு செய்யப்பட்டு அளவிடப்பட்ட எண்ணை வைத்து முடிவுசெய்யப்படுகிறது.

தழைச்சத்து மேலாண்மை

[தொகு]

வேளாண்மையில் பயிர் வளர்ச்சிக்கு இன்றியமையாத பேரூட்டச்சத்துக்களாக தழை (nitrogen), மணி (phosphorous) மற்றும் சாம்பல் (potassium) சத்துக்கள் கருதப்படுகின்றன. அவற்றுள் தலையாயது தழைச்சத்து ஆகும். தழைச்சத்து வழிமண்டலத்தில் அதிக அளவில் (78%) இருந்தாலும் செயலற்றதாக உள்ளதால் பயிர் அவற்றை நேரடியாக பயன்படுத்த முடிவதில்லை. இயற்கையில் இடி மற்றும் மின்னல்களின்போது வழிமண்டலத்தில் உள்ள தழைச்சத்தின் பிணைப்பு பிரிக்கப்பட்டு பயிருக்கு கிடைக்கும் வகையில் மாற்றப்பட்டு மழைமூலம் பயிரை அடைகின்றன. ரைசோபியம் போன்ற நுண்ணுயிர்கள் பயறுவகைப்பயிர்களில் கூட்டுவாழ்க்கை நடத்தி வேர் முடிச்சுகளிலும், அசோஸ்பைருள்ளம் போன்ற நுண்ணுயிரிகள் நெல் போன்ற புல் வகைப்பயர்களைச் சார்ந்தும், அசட்டோபாக்டர் போன்றவை மண்ணில் தனியாகவும், நீலப்பச்சைப்பாசி போன்றவை நீர் நிறைந்த இடங்களிலும் தழைச்சத்தை பயிருக்கு கிடைக்கச் செய்கின்றன மேலும் விவசாயிகள் கழிவுகளை மக்க வைப்பதன் மூலம் பயிர்களுக்கு இயற்கையில் தழைச்சத்துக் கிடைக்கச் செய்கின்றனர். தழைச்சத்து உரங்களை தொழிற்சாலையில் உற்பத்தி செய்தும் வணிக ரீதியாக பயன்படுதுகின்றனர். தழைச்சத்தளிக்கும் இரசாயண உரங்களை அளவுக்கு அதிகமாக உபயோகிப்பதால் சத்து விரையமாவதுடன், அதிக உற்பத்திச்செலவு, சுற்றுச்சூழல் பாதிப்புகள் போண்ற பாதகங்களை ஏற்படுதுகின்றன. நெற்பயிரில் தழைச்சத்து மேலாண்மை "நிலையான நேரத்தில் உரமிடல்" மற்றும் "பயிரின் தேவையறிந்து உரமிடல்" என இரு வகைப்படும். நிலையான நேரத்தில் உரமிடல் என்பது உரங்களை குறித்த இடைவெளியில் குறிப்பிட்ட அளவு உரமிடலாகும். பயிரின் தேவையறிந்து உரமிட இலை வண்ண அட்டை உதவுகிறது. இலை வண்ண அட்டையின் மூலம் முடிவு செய்யப்பட்டு அளவிடப்பட்ட எண்ணை வைத்து தழைச்சத்து மேலாண்மை முடிவுசெய்யப்படுகிறது.

அளவிடும் முறை

[தொகு]

வண்ண அட்டையைக் கொண்டு இலையின் வண்ணத்தை ஒப்பிடும்போது சூரியவெளிச்சம் இலையில் நேரடியாகப்படாதவாறு அளவிடுபவர் நிற்கவேண்டும். இலையின் பச்சைய அளவை மதிப்பிடுவது நடவு நட்ட 14ஆம் நாளிலிருந்து அல்லது விதைத்த 21 ஆம் நாளிலிருந்து ஒவ்வொரு வாரமும் செய்யப்படவேண்டும். மதிப்பீடு செய்ய ஏற்ற இலை முழுதாய் வெளிவந்துள்ள இலைகளில் மேலிருந்து மூன்றாவது ஆகும். மதிப்பீடு செய்ய குறைந்த பட்சம் 10 இலைகள் இங்கும் அங்குமாக தேர்வு செய்யப்படவேண்டும். அளவிடும் காலம் பொதுவாக ஒரு பயிருக்கு ஒரு குறிப்பிட்ட நேரமாக இருத்தல் வேண்டும் (காலை 8-10 மணிக்குள்). அளவீடு எண் ரகத்திற்கு ஏற்றவாறு வேறுபடுகின்றது. அதிக தழைச்சத்தைத் தாங்க முடியாத இரகங்கள் (பொன்னி) எனில் 3.0 என்றும் மற்ற ரகங்களுக்கு 4.0 ஆகும்.

தழைச்சத்து இடுதல்

[தொகு]

முடிவு செய்யப்பட்ட அளவீடு பத்திற்கு ஆறு அல்லது அதற்கு மேல் குறிப்பிட்ட அளவைவிட கீழ் இருக்குமெனில் உடனே தழைச்சத்து இடப்பட வேண்டும். நட்ட ஏழு நாட்களில் 25 கிலோ / எக்டர் தழைச்சத்து அளிக்க வேண்டும். இதனை தொடர்ந்து ஒவ்வொரு முறையும் 40 கிலோ / எக்டர் தழைச்சத்தை குருவை அல்லது குறுகிய கால இரகங்களுக்கு அளிக்க வேண்டும் அல்லது ஒவ்வொரு முறையும் 30 கிலோ / எக்டர் தழைச்சத்தினை மத்திய மற்றும் நீண்ட கால இரகங்களுக்கு அளிக்க வேண்டும். 35 முதல் 45 நாள் வயதுள்ள நாற்றுகளை நடவிற்குப் பயன்படுத்தினால் அதன் மகசூலை அதிகரிக்க 35 கிலோ / எக்டர் என்ற அளவில் தழைச்சத்தினை அடியுரமாக அளிக்க வேண்டும்[1].

நன்மைகள்

[தொகு]

இம்முறையில் தழைச்சத்து வீனாவது தவிர்க்கப்படுகிறது. சுற்றுச்சூழல் காக்கப்படுகிறது[2]. சாகுபடிச்செலவு குறைகிறது

மேற்சான்றுகள்

[தொகு]
  1. http://www.researchgate.net/publication/225441137_Need_based_nitrogen_management_using_the_chlorophyll_meter_and_leaf_colour_chart_in_rice_and_wheat_in_South_Asia_a_review
  2. www.researchgate.net%2Fprofile%2FBijay_Singh5%2Fpublication%2F235970031_Chlorophyll_meter_and_leaf_color_chart-based_nitrogen_management_for_rice_and_wheat_in_Northwestern_India%2Flinks%2F0deec5326f8dd9a76f000000.pdf&ei=IaLUVPLCJpSwuQTqxIHoDw&usg=AFQjCNGkAW8uH9IwKMfJqzmF1tstduWaZQ&sig2=98j7fM72FIvmiMiiSuc0-g

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலை_வண்ண_அட்டை&oldid=3234960" இலிருந்து மீள்விக்கப்பட்டது