இலெப்பர்சோணைட்டு
Appearance
இலெப்பர்சோணைட்டு-(Gd) Lepersonnite-(Gd) | |
---|---|
இலெப்பர்சோணைட்டு-(Gd) (தட்டையான படிகங்கள்) | |
பொதுவானாவை | |
வகை | கார்பனேட்டு கனிமம் |
வேதி வாய்பாடு | Ca(Gd,Dy)2(UO2)24(SiO4)4(CO3)8(OH)24·48H2O |
இனங்காணல் | |
நிறம் | பிரகாசமான மஞ்சள் |
படிக இயல்பு | ஊசி போன்ற படிகங்கள் |
படிக அமைப்பு | நேர்ச்சாய்சதுரம் |
ஒப்படர்த்தி | Fass |
அடர்த்தி | 3.97 (அளவிடப்பட்டது) |
ஒளியியல் பண்புகள் | ஈரச்சு (-) |
ஒளிவிலகல் எண் | nα = 1.638, nβ = 1.666, nγ = 1.682 |
2V கோணம் | 73° (கணக்கிடப்பட்டது.) |
பிற சிறப்பியல்புகள் | கதிரியக்கம் |
மேற்கோள்கள் | [1][2][3] |
இலெப்பர்சோணைட்டு-(Gd) (Lepersonnite-(Gd)) என்பது Ca(Gd,Dy)2(UO2)24(SiO4)4(CO3)8(OH)24·48H2O என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் யுரேனியத்தின் ஓர் அருமண் கனிமமாகும். அரிய யுரேனியம் தாதுக்களுக்குப் புகழ்பெற்ற காங்கோ சனநாயகக் குடியரசில் உள்ள சிங்கோலோப்வே படிவுகளில் பிச்வோய்டைட்டு-(Y) கனிமத்துடன் சேர்ந்து இது காணப்படுகிறது. அத்தியாவசியமான கடோலினியம் கனிமத்தைக் கொண்ட ஒரே உறுதிப்படுத்தப்பட்ட கனிமமாகவும் இது கருதப்படுகிறது.[1][3][4] பெல்ச்சிய நாட்டுப் புவியியலாளர் இயாக்கு இலெபர்சோன் நினைவாக கனிமத்திற்கு இப்பெயரிடப்பட்டது. பன்னாட்டு கனிமவியல் சங்கம் இலெப்பர்சோனைட்டு-(Gd) கனிமத்தை Lps-Gd[5] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Deliens, M., and Piret, P., 1982. Bijvoetite et lepersonnite, carbonates hydrates d'uranyle et des terres rares de Shinkolobwe, Zaïre. Canadian Mineralogist 20, 231–238.
- ↑ "Lepersonnite-(Gd) - Handbook of Mineralogy" (PDF). Handbookofmineralogy.org. பார்க்கப்பட்ட நாள் 2016-03-08.
- ↑ 3.0 3.1 "Lepersonnite-(Gd): Lepersonnite-(Gd) mineral information and data". Mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2016-03-04.
- ↑ Gadolinium: The mineralogy of gadolinium - Mindat. org [1]
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.