இலியாசு காசுமீரி
இலியாசு காசுமீரி(Ilyas Kashmiri), சில நேரங்களில்மௌலானா இலியாசு காசுமீரி[1] மற்றும் மொகமது இலியாசு காசுமீரி[2] என்றும் அறியப்படுபவர் (10 பெப்ரவரி, 1964[3] – 3 சூன் 2011[4][5]) சோவியத்-ஆப்கன் போர், காசுமீர் சண்டை மற்றும் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அமெரிக்காவில் நடைபெற்ற தாக்குதல்களில்[6] தொடர்புடைய மூத்த அல் குவைதா உறுப்பினராவார். ஆகத்து 2010இல் ஐக்கிய அமெரிக்காவும் ஐக்கிய நாடுகள் நிறுவனமும் இவரை தீவிரவாதி என அறிவித்தன.[7][8] அல் குவைதாவின் தலைவராக உசாமா பின் லாதனிற்குப் பிறகு பொறுப்பேற்கக்கூடியவராக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்ததாக என்பிசி செய்தி நிறுவனம் கூறியுள்ளது.[9]
மரணம்
[தொகு]சூன் 3,2011 அன்று தாலிபான் செல்வாக்குமிக்க தெற்கு வசிரிஸ்தானில் குவாக்குவா பகுதியில் நடத்திய ஐக்கிய அமெரிக்க ஆளில்லாத வானூர்தி தாக்குதலில் காசுமீரி உட்பட ஒன்பது தீவிரவாதிகள் ஏவுகணையால் கொல்லப்பட்டனர்.[4][5][10] இந்தத் தாக்குதலில் மேலும் மூன்று தீவிரவாதிகள் பலத்தக் காயமடைந்தனர்.[5] தாக்குண்ட வீட்டில் இருந்தவர்கள் அனைவருமே பஞ்சாபி தாலிபான்கள் என உள்ளூர் அதிகாரிகள் கூறினர்.[5] பத்து நாட்கள் முன்னர்தான் காசுமீரி கைபர் பக்தூன்க்வாவிலிருந்து வானாவிற்கு இடம் பெயர்ந்தார்.[5] டெக்ரிக்-இ-தாலிபான் அமைப்பின் பேச்சாளர் காசுமீரி நலமுடன் இருப்பதாகவும் எறிகணைத் தாக்குதலின்போது அங்கு இல்லை என்றும் கூறினார்.[4] எனினும் காசுமீரியின் இறப்பை உறுதி செய்து அர்கத் உல் ஜிகாத் இசுலாமி மின்னஞ்சல் அனுப்பியதாக பெயரில்லா பாகிஸ்தானிய அலுவலர் கூறினார்.[11] மேலும் தாக்கப்பட்ட வீட்டின் சொந்தக்காரருடன் தொடர்புள்ள போராளித் தலைவர் முல்லா நசீரின் தொடர்பு அதிகாரி லாலா வசீர் இச்செய்தியை உறுதி செய்துள்ளார்.[12]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Shahzad, Syed Saleem (October 2008). "Afghanistan: the neo-Taliban campaign". Le Monde Diplomatique. பார்க்கப்பட்ட நாள் 2009-09-21.
{{cite web}}
: Italic or bold markup not allowed in:|publisher=
(help) - ↑ "Pak frees terrorist leaders". பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா. The Telegraph. 2004-02-22. http://www.telegraphindia.com/1040223/asp/foreign/story_2926635.asp. பார்த்த நாள்: 2009-09-21.
- ↑ Shahzad, Syed Saleem (2009-10-15). "Al-Qaeda's guerrilla chief lays out strategy". Asia Times Online இம் மூலத்தில் இருந்து 2018-08-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180823173117/https://www.atimes.com/atimes/South_Asia/KJ15Df03.html. பார்த்த நாள்: 2010-01-07.
- ↑ 4.0 4.1 4.2 "Deadly US drone targeted Ilyas Kashmiri". Dawn. 4 June 2011. http://www.dawn.com/2011/06/04/ilyas-kashmiri-killed-in-us-drone-strike.html. பார்த்த நாள்: 4 June 2011.
- ↑ 5.0 5.1 5.2 5.3 5.4 "Ilyas Kashmiri killed in US drone strike, confirms HuJI". The Times of India. 4 June 2011. http://timesofindia.indiatimes.com/world/pakistan/26/11-mastermind-Ilyas-Kashmiri-killed-in-US-drone-strike-in-Pak-Report/articleshow/8723456.cms. பார்த்த நாள்: 5 June 2011.
- ↑ Mir, Hamid (2009-09-20). "How an ex-Army commando became a terrorist". The News International இம் மூலத்தில் இருந்து 2011-02-08 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110208121101/http://www.thenews.com.pk/TodaysPrintDetail.aspx?ID=24626&Cat=13&dt=9%2F20%2F2009. பார்த்த நாள்: 2009-09-21.
- ↑ "US, UN declare Harakat-ul Jihad al-Islami a terrorist group". Google News. AFP. 2010-08-07 இம் மூலத்தில் இருந்து 2013-01-03 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130103042841/http://www.google.com/hostednews/afp/article/ALeqM5jxMUvbXPQTz6nO4sm5K_Qs7GEAMg. பார்த்த நாள்: 2010-08-12.
- ↑ US Department of State(2010-08-06). "Designations of Harakat-ul Jihad Islami (HUJI) and its Leader Mohammad Ilyas Kashmiri". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 2010-08-12.
- ↑ "Illyas Kashmiri may succeed Osama: US officials". Dawn. 4 June 2011 இம் மூலத்தில் இருந்து 14 மே 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110514165119/http://ibnlive.in.com/news/ilyas-kashmiri-may-succeed-osama-us-officials/151946-2.html. பார்த்த நாள்: 4 June 2011.
- ↑ US strike 'kills' key Pakistan militant Ilyas Kashmiri, BBC News, 4 June 2011
- ↑ "Ilyas Kashmiri killed in drone attack". Sydney Morning Herald. 5 June 2011. பார்க்கப்பட்ட நாள் 5 June 2011.
- ↑ "Drone strike kills Ilyas Kashmiri". Dawn. 5 June 2011. http://www.dawn.com/2011/06/05/ilyas-kashmiri-killed-in-us-drone-strike.html. பார்த்த நாள்: 5 June 2011.