இலின்னேயைட்டு
Appearance
இலின்னேயைட்டு Linnaeite | |
---|---|
இலின்னேயைட்டு மாதிரிகள் | |
பொதுவானாவை | |
வகை | சல்ப்பைடு கனிமம் தயோசிபைனல் குழு சிபைனல் கட்டமைப்பு குழு |
வேதி வாய்பாடு | Co+2Co+32S4 |
இனங்காணல் | |
நிறம் | எஃகு சாம்பல் முதல் உதா சாம்பல் வரை |
படிக இயல்பு | எண்முகப் படிகங்களாக; பொதி, மணிகள் |
படிக அமைப்பு | கனசதுரம் |
இரட்டைப் படிகமுறல் | {111} இல் |
பிளப்பு | {001} இல் தெளிவற்று |
முறிவு | துணை சங்குருவம் |
மோவின் அளவுகோல் வலிமை | 4.5-5.5 |
மிளிர்வு | உலோகத்தன்மை |
கீற்றுவண்ணம் | சாம்பல் கருப்பு |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகாது |
ஒப்படர்த்தி | 4.8-5.8 |
Alters to | காற்றில் நிறமிழக்கும் |
மேற்கோள்கள் | [1][2][3] |
இலின்னேயைட்டு (Linnaeite) என்பது Co+2Co+32S4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கோபால்ட்டு சல்பைடு கனிமமாகும். 1845 ஆம் ஆண்டு சுவீடனின் வாசுட்மேன்லாந்தில் இது கண்டுபிடிக்கப்பட்டது. சுவீடன் நாட்டைச் சேர்ந்த தாவரவியலாளர் கார்ல் லின்னேயசை (1707–1778) சிறப்பிக்கும் விதமாக கனிமத்திற்கு இப்பெயர் சூட்டப்பட்டது. [1] நிக்கல் சல்பைடு கனிமமான பாலிடைமைட்டுடன் (Ni+2Ni+32S4) சேர்ந்து இலின்னேயைட்டு ஒரு தொடர்வரிசை கனிமங்களை உருவாக்குகிறது. [4] உலகெங்கிலும் கோபால்ட்டு மற்றும் நிக்கல் சல்பைடு கனிமங்களுடன் சேர்ந்து நீர்வெப்ப பகுதிகளில் இலின்னேயைட்டு காணப்படுகிறது. [3]
மேற்கோள்கள்[தொகு]
- Schumann, Walter (1991). Mineralien aus aller Welt. BLV Bestimmungsbuch (2 ed.). p. 223. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-405-14003-X.