இலாந்தனைடு குளோரைடுகள்
இலாந்தனைடு குளோரைடுகள் (Lanthanide chlorides) என்பவை இலாந்தனைடு தனிமங்களான இலந்தனத்திலிருந்து இலூட்டீசியம் வரையிலான தனிமங்கள் குளோரினுடன் வினைபுரிந்து உருவாகக்கூடிய இரசாயன சேர்மங்களின் குழுவைக் குறிக்கும். இந்த சேர்மங்களில் இலாந்தனைடு தனிமங்கள் பொதுவாக +2 மற்றும் +3 என்ற ஆக்சிசனேற்ற நிலைகளில் இருக்கும். குறைந்த ஆக்சிசனேற்ற நிலைகளில் உள்ள இலாந்தனைடுகள் கொண்ட சில சேர்மங்களும் உள்ளன.
இலாந்தனைடு இருகுளோரைடுகள்
[தொகு]நியோடிமியம், சமாரியம், யூரோப்பியம், டிசிப்ரோசியம், தூலியம் மற்றும் இட்டெர்பியம் ஆகிய இலாந்தனைடுகள் ஈரிணைதிற குளோரைடுகளை உருவாக்குகின்றன. நாப்தலீனில் உள்ள டெட்ரா ஐதரோபியூரான் அல்லது இலித்தியம் உலோகத்தைப் பயன்படுத்தி மூவிணைதிற குளோரைடுகளை ஒடுக்குதல் வினைக்கு உட்படுத்தி குறைப்பதன் மூலம் ஈரிணைதிற குளோரைடுகளைத் தயாரிக்கலாம்:[1]
- LnCl3 + Li → LnCl2 + LiCl (Ln=Nd,Sm,Eu)
மூவிணைதிற குளோரைடை உலோகம் அல்லது ஐதரசனைப் பயன்படுத்தி ஒடுக்குதல் வினைக்கு உட்படுத்தி குறைப்பதன் மூலம் ஈரிணைதிற குளோரைடுகளைத் தயாரிக்கலாம்:[2][3]
- 2 LnCl3 + Ln → 3 LnCl2 (Ln=Nd,Sm,Eu?,Dy,Tm,Yb)
- 2 LnCl3 + H2 → 2 LnCl2 + 2 HCl (Ln=Nd,Sm,Eu,Dy,Tm,Yb)
இலாந்தனைடு முக்குளோரைடு
[தொகு]ஆக்சைடு அல்லது கார்பனேட்டை ஐதரோகுளோரிக் அமிலத்தில் கரைப்பதன் மூலம் இலாந்தனைடு முக்குளோரைடுகளை பொதுவாகத் தயாரிக்கலாம். இவை ஆக்சைடுகளை உயர்வெப்பக்கார்பன் வினைக்கு உட்படுத்துவதன் மூலம் வணிக ரீதியாக உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த முக்குளோரைடுகளின் நீரற்ற வடிவங்களை உருவாக்க, அம்மோனியம் குளோரைடு வழி எடுக்கப்படுகிறது. நீரிலி நிலை இலாந்தனைடு முக்குளோரைடுகள் அதிக உருகு நிலை கொண்டவையாக பொதுவாக வெளிர் நிறத்தில் இருக்கும்.
MCl3 | நிறம் | கட்டமைப்பு வகை | f-கூடு கட்டமைப்பு |
---|---|---|---|
LaCl3 | நிறமற்றது | UCl3-வகை | f0 |
CeCl3 | நிறமற்றது | UCl3-வகை | f1, இருமை |
PrCl3 | பச்சை | UCl3-வகை | f2, மும்மை |
NdCl3 | இளஞ்சிவப்பு | UCl3-வகை | f3, நாற்கூட்டு |
PmCl3 | பச்சை | UCl3-வகை | f4, ஐம்மை |
SmCl3 | மஞ்சள் | UCl3-வகை | f5, அறுவன் |
EuCl3 | மஞ்சள் | UCl3-வகை | f6, ஏழன் |
GdCl3 | நிறமற்றது | UCl3-வகை | f7, எண்மி |
TbCl3 | வெண்மை | PuBr3-வகை | f8, ஏழன் |
DyCl3 | வெண்மை | AlCl3-வகை | f9, அறுவன் |
HoCl3 | மஞ்சள் | AlCl3-வகை | f10, ஐம்மை |
ErCl3 | ஊதா | AlCl3-வகை | f11, நாற்கூட்டு |
TmCl3 | மஞ்சள் | AlCl3-வகை | f12, மும்மை |
YbCl3 | நிறமற்றது | YCl3-வகை | f13, இருமை |
LuCl3 | நிறமற்றது | AlCl3-வகை | f14 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Rossmainth, Kurt (1979-01-01). "Herstellung der klassischen Seltenerd(II)-chloride in Lösung". Anorganische, Struktur- und Physikalische Chemie 110 (4): 109–114. doi:10.1007/BF00903752.
- ↑ Gerd Meyer, Lester R. Morss (1991). Synthesis of lanthanide and actinide compounds. Springer. p. 161. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7923-1018-7.
- ↑ Brauer, Georg; Baudler, Marianne (1975). Handbuch der Präparativen Anorganischen Chemie, Band I. (3rd ed.). Stuttgart: Ferdinand Enke. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-432-02328-6.
- ↑ Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth–Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.