உள்ளடக்கத்துக்குச் செல்

இலந்தனம்(III) அயோடைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலந்தனம்(III) அயோடைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
இலந்தனம் மூவயோடைடு
இனங்காட்டிகள்
13813-22-4 Y
EC number 237-465-6
InChI
  • InChI=1S/3HI.La/h3*1H;/q;;;+3/p-3
    Key: KYKBXWMMXCGRBA-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 24870325
  • I[La](I)I
பண்புகள்
LaI
3
வாய்ப்பாட்டு எடை 519.62
அடர்த்தி 25 °செல்சியசில் 5.63 கி/மில்லி
உருகுநிலை 772 °C (1,422 °F; 1,045 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.


இலந்தனம்(III) அயோடைடு (Lanthanum(III) iodide) LaI என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இலந்தனமும் அயோடினும் சேர்ந்து இந்த சேர்மம் உருவாகிறது.[1]

தயாரிப்பு

[தொகு]

இலந்தனம் உலோகத்துடன் பாதரச(II) அயோடைடைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் இலந்தனம்(III) அயோடைடு உருவாகும்.:[2][3]

2 La + 3 HgI2 → 2 LaI3 + 3 Hg

உலோக இலந்தனமும் அயோடினும் சேர்ந்து வினை புரிந்தாலும் இலந்தனம்(III) அயோடைடு உருவாகும்.:[2]

2 La + 3 I2 → 2 LaI3

இலந்தனம்(III) அயோடைடு கரைசல்களை இலந்தனம் ஆக்சைடை ஐதரயோடிகு அமிலத்தில் கரைப்பதன் மூலம் உருவாக்க முடியும். விளைபொருள் நீராற்பகுப்பு அடைந்து பல்லுருவ ஐதராக்சி இனங்களை உருவாக்கும்.:[4]

La2O3 + 6 HI → 2 LaI3 + 3 H2O → இதர வினைகள் தொடரும்

இயற்பியல் பண்புகள்

[தொகு]

இலந்தனம்(III) அயோடைடு புளூட்டோனியம்(III) புரோமைடு சேர்மம் போன்ற 8-ஒருங்கிணைந்த உலோக மையங்கள் அடுக்குகளில் அமைக்கப்பட்ட அதே படிக அமைப்பை ஏற்றுக்கொள்கிறது.[4][5] இந்த செஞ்சாய்சதுர அமைப்பு இலகுவான இலந்தனைடுகளின் (La-Nd) மூவயோடைடுகளுக்குப் பொதுவானதாகும். அதேசமயம் கனமான இலந்தனைடுகள் அறுகோண பிசுமத்(III) அயோடைடு கட்டமைப்பைப் பின்பற்ற முனைகின்றன.[3]

வினைத்திறன்

[தொகு]

இலந்தனம்(III) அயோடைடு நீரில் மிகவும் கரையக்கூடியதாகும். நீர்த்துப்போகும் தன்மையும் கொண்டுள்ளது.[4] நீரற்ற இலந்தனம்(III) அயோடைடு டெட்ரா ஐதரோ பியூரானுடன் வினைபுரிந்து ஓர் ஒளிமின்னழுத்த அணைவுச் சேர்மத்தை உருவாக்குகிறது, LaI3(THF)4 இதில் சராசரி La-I பிணைப்பு நீளம் 3.16 Å ஆகும்.[6][7] இந்த அணைவுச் சேர்மம் இலந்தனத்தின் அமைடு மற்றும் வளையபெண்டாடையீனைல் அணைவுச் சேர்மங்கள் தயாரிப்பதற்கான தொடக்கப் பொருளாகும்.[6][8]

தொடர்புடைய சேர்மங்கள்

[தொகு]

இலந்தனம்(III) அயோடைடு ஓர் ஈரயோடைடையும் (LaI2) உருவாக்குகிறது. இதுவோர் அயனிச் சேர்மமுமாகும். கடத்தல் பட்டையில் எலக்ட்ரான் உள்ளடங்காப் பிணைப்பாக்கப்பட்டு {LaIII,2I,e-} என சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. CeI2, PrI2 மற்றும் GdI2 உட்பட பல இலந்தனைடுகள் இதே போன்ற சேர்மங்களை உருவாக்குகின்றன.[9] இலந்தனம் ஈரயோடைடு PrI2 போன்ற அதே நாற்கோணப் படிக அமைப்பை ஏற்றுக்கொள்கிறது.[10]

இலந்தனம்(III) அயோடைடு ஆர்கான் வளிமண்டலத்தின் கீழ் இலந்தனம் உலோகத்துடன் 1225 கெல்வின் வெப்பநிலையில் தாண்டலம் குழாயில் வினைபுரிந்து La2I5 என்ற கலப்பு இணைதிற சேர்மத்தை உருவாக்குகிறது.[11]

550 °செல்சியசு வெப்பநிலையில் ஆர்கான் வளிமண்டல சூழலில் உலோக சோடியத்துடன் LaI2 அல்லது LaI3 சேர்மத்தை குறைப்பதால் அறுகோண படிக அமைப்பைக் கொண்ட இலந்தனம் மோனோ அயோடைடு ( LaI) உருவாகிறது.[12]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Taylor, Moddie D. (1962). "Preparation of Anhydrous Lanthanon Halides". Chem. Rev. 62 (6): 503–511. doi:10.1021/cr60220a001. 
  2. 2.0 2.1 Corbett, John D. & Simon, Arndt (1984). "Chapter 6: Lanthanum Triiodide (and Other Rare Earth Metal Triiodides)". In Holt Jr., Smith L. (ed.). Inorg. Synth. Vol. 22. pp. 11–16. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/9780470132531.ch6.
  3. 3.0 3.1 Asprey, L. B.; Keenan, T. K.; Kruse, F. H. (1964). "Preparation and Crystal Data for Lanthanide and Actinide Triiodides". Inorg. Chem. 3 (8): 1137–1141. doi:10.1021/ic50018a015. https://digital.library.unt.edu/ark:/67531/metadc867868/. 
  4. 4.0 4.1 4.2 Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth–Heinemann. pp. 949–950. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
  5. Wells, A. F. (1984). Structural Inorganic Chemistry (5th ed.). Oxford University Press. p. 420. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-965763-6.
  6. 6.0 6.1 Ortu, Fabrizio (2022). "Rare Earth Starting Materials and Methodologies for Synthetic Chemistry". Chem. Rev. 122 (6): 6040–6116. doi:10.1021/acs.chemrev.1c00842. பப்மெட்:35099940. 
  7. Li, Yangjuan; Chen, Xiuting; Gong, Yu (2021). "Photoluminescence of LaI3 switched on and off by association and dissociation of non-luminescent tetrahydrofuran". Dalton Trans. 50 (11): 3797–3800. doi:10.1039/D1DT00162K. பப்மெட்:33720234. 
  8. Windorff, Cory J.; Dumas, Megan T.; Ziller, Joseph W.; Gaunt, Andrew J.; Kozimor, Stosh A.; Evans, William J. (2017). "Small-Scale Metal-Based Syntheses of Lanthanide Iodide, Amide, and Cyclopentadienyl Complexes as Analogues for Transuranic Reactions". Inorg. Chem. 56 (19): 11981–11989. doi:10.1021/acs.inorgchem.7b01968. பப்மெட்:28915015. 
  9. Wells, A. F. (1984). Structural Inorganic Chemistry (5th ed.). Oxford University Press. p. 1250. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-965763-6.
  10. Burrow, J. H.; Maule, C. H.; Strange, P.; Tothill, J. N.; Wilson, J. A. (1987). "The electronic conditions in the 5d1 layer-metal LaI2 making comparison with the iso-electronic tantalum dichalcogenides, with the other RE di-iodides, and with the RE monochalcogenides". J. Phys. C: Solid State Phys. 20 (26): 4115–4133. doi:10.1088/0022-3719/20/26/014. Bibcode: 1987JPhC...20.4115B. 
  11. Mattausch, Hj.; Oeckler, O.; Simon, A. (2003). "Crystal structure of dilanthanum pentaiodide, La2I5". Z. Kristallogr. NCS 218 (3): 281. doi:10.1524/ncrs.2003.218.3.281. 
  12. Ryazanov, Mikhail; Kienle, Lorenz; Simon, Arndt; Mattausch, Hansjürgen (2006). "New Synthesis Route to and Physical Properties of Lanthanum Monoiodide". Inorg. Chem. 45 (5): 2068–2074. doi:10.1021/ic051834r. பப்மெட்:16499368. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலந்தனம்(III)_அயோடைடு&oldid=4092613" இலிருந்து மீள்விக்கப்பட்டது