உள்ளடக்கத்துக்குச் செல்

இலத்திகா பிரதான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலத்திகா பிரதான்
ஒடிசா சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2019
முன்னையவர்வி. சுகுஞான குமாரி தியோ
தொகுதிகபிசூரிய நகர் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிபிஜு ஜனதா தளம்

இலத்திகா பிரதான் (Latika Pradhan) ஒர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பிஜு ஜனதா தளத்தின் உறுப்பினராக கபிசூரியாநகரில் இருந்து ஒடிசா சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

பிறப்பு மற்றும் வாழ்க்கை

[தொகு]

இலத்திகா பிரதான் 1975 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் நாள் பிறந்தார். இவரது தந்தையின் பெயர் நித்யானந்த பிரதான் ஆகும். இவரது கணவர் பெயர் சக்திபிரசாத் பிரதான். இலத்திகா முதலில் இளங்கலை அறிவியல் பட்டமும் பின்னர் சட்டத்துறையில் பட்டப்படிப்பும் பயின்றார்.[4]

அரசியல் வாழ்க்கை

[தொகு]

இலத்திகா பிரதான் பிஜு ஜனதா கட்சியின் உறுப்பினராக ஒடிசா அரசியலில் தீவிரமாக உள்ளார். 2019 ஆம் ஆண்டு ஒடிசா சட்டப் பேரவைத் தேர்தலில், கவிசூரியா நகர சட்டப் பேரவைத் தொகுதியில் பிஜு ஜனதா கட்சியின் வேட்பாளராக இலத்திகா போட்டியிட்டார். இவர் இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று 16வது ஒடிசா சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2019-ஆம் ஆண்டு முதல் இந்த சட்டப் பேரவையில் பணியாற்றி வருகிறார்.

குறிப்புகள்

[தொகு]
  1. Hrusikesh Mohanty (6 April 2019). "In Ganjam and Gajapati, family is where loyalty lies". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Retrieved 12 October 2021.
  2. "Kabisuryangar". Anastacia Sibanda. News18. Retrieved 12 October 2021.
  3. "Odisha CM Naveen Patnaik rejigs women wing of BJD". The New Indian Express. 28 June 2021. Retrieved 12 October 2021.
  4. "page error". odishaassembly.nic.in. Retrieved 2023-09-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலத்திகா_பிரதான்&oldid=3797589" இலிருந்து மீள்விக்கப்பட்டது