உள்ளடக்கத்துக்குச் செல்

இலண்டன் மகாலட்சுமி கோயில்

ஆள்கூறுகள்: 51°32′25″N 0°03′01″E / 51.5404°N 0.0504°E / 51.5404; 0.0504
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலண்டன் மகாலட்சுமி கோயில்
அமைவிடம்
நாடு: ஐக்கிய இராச்சியம்
அமைவு:ஹை ஸ்ட்ரீட் நார்த், இலண்டன் பெருநகர்ப் பகுதி, ஐக்கிய இராச்சியம்
ஏற்றம்:6.85 m (22 அடி)
ஆள்கூறுகள்:51°32′25″N 0°03′01″E / 51.5404°N 0.0504°E / 51.5404; 0.0504
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டடக்கலை
இணையதளம்:[2]

இலண்டன் மகாலட்சுமி கோயில் என்பது ஐக்கிய இராச்சியத்தின், இலண்டன் பெருநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஓர் இலட்சுமி கோயில் ஆகும்.[1][2][3][4]

விபரங்கள்

[தொகு]

இக்கோயில் மகாலட்சுமிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கோயில் ஆகும்.[5] 1989 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இக்கோயிலின் கும்பாபிசேகம் 1990ஆம் வருடம் நடைபெற்றது. இலண்டனில் உள்ள இலட்சுமி நாராயண டிரஸ்ட் மூலம் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. பத்மஸ்ரீ சிற்பக்கலாமணி முத்தையா ஸ்தபதி மேற்பார்வையில் இக்கோயிலின் இராச கோபுரம் மற்றும் இதர அமைப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.[6]

அமைவிடம்

[தொகு]

கடல் மட்டத்திலிருந்து சுமார் 6.85 மீ. உயரத்தில், (51°32′25″N 0°03′01″E / 51.5404°N 0.0504°E / 51.5404; 0.0504) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, மகாலட்சுமி கோயில் அமைந்துள்ளது.

இலண்டன் மகாலட்சுமி கோயில் is located in Greater London
இலண்டன் மகாலட்சுமி கோயில்
இலண்டன் மகாலட்சுமி கோயில்
இலண்டன் மகாலட்சுமி கோயில் (Greater London)

இதர தெய்வங்கள்

[தொகு]

ஸ்ரீதேவி மற்றும் பூதேவி சமேத சீனிவாசர், சகஸ்ரமகாலிங்கேசுவரர், காயத்ரி, சனீசுவரர், இராச மகா கணபதி, வள்ளி மற்றும் தெய்வானை சமேத அறுபடை முருகன், சுதர்சனர், யோகநரசிம்மர் மற்றும் அனுமன் ஆகியோர் இக்கோயிலில் அருள்பாலிக்கின்றனர்.[7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Thanjai Ezhilan (2021-11-14). Ulagathin Uchiyiley. Pustaka Digital Media.
  2. Joanne Punzo Waghorne (2004-09-16). Diaspora of the Gods: Modern Hindu Temples in an Urban Middle-Class World (in ஆங்கிலம்). Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-803557-2.
  3. London Swaminathan (2022-11-21). Om in Rome; Manu Smriti in London Church (in ஆங்கிலம்). Pustaka Digital Media.
  4. Malcolm Batten (2023-08-15). Newham in 50 Buildings (in ஆங்கிலம்). Amberley Publishing Limited. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-3981-1324-4.
  5. "London Sri Mahalakshmi Temple - Mimoji". mimoji.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-11-07.
  6. [1]
  7. "Home - London Sri Mahalakshmi Temple". www.srimahalakshmitemple.net. பார்க்கப்பட்ட நாள் 2024-11-07.

வெளி இணைப்புகள்

[தொகு]

[3]