இலங்கையில் கோல்புறூக் விதந்துரைப்புகள்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கோல்புறூக் ஆணைக்குழுவினர் இலங்கையில் பிரித்தானிய ஆட்சிமுறையின் கீழ் சீர்த்திருத்தங்களை மேற்கொள்ள பிரித்தானிய முடியினால் 1829 இல் இலங்கைக்கு அனுப்பப்பட்டனர்.
காரணங்கள்
[தொகு]- பிரித்தானியர் ஆட்சி ஆரம்பத்திலிருந்து நிர்வாகச் செலவினங்கள் அதிகரித்திருந்தமை
- கண்டி இராச்சியத்தில் தற்காலிக ஆட்சிமுறை காணப்பட்டமை
- நிர்வாகத்திற்கும், நீதித்துறைக்கும் இடையில் அதிருப்தியான தொடர்புகள் நிலவியமை
விதந்துரைப்புகள்
[தொகு]அரசியல்
[தொகு]- கண்டி கரையோர இராச்சியங்கள் இணைக்கப்பெற்று ஒற்றையாட்சி அமைப்புக்குள் இலங்கையைக் கொண்டுவரல்
- இலங்கையில் சட்டநிரூபண சபையொன்றை அமைத்தல்
- இலங்கையை 5 மாகாணங்களாகப் பிரித்தல்
- ஆங்கில மொழியை உத்தியோகபூர்வ மொழியாக்குதல்
பொருளியல்
[தொகு]- இலங்கையில் நிலவிய இராஜகாரிய முறையை ஒழிக்கப்பட்டமை
- வர்த்தக ஏகபோக உரிமை முறையை ஒழிக்கப்பட்டமை
- இலங்கையில் பெருந்தோட்டத்துறை அறிமுகப்படுத்தபட்டமை
- நேர்வரிகளை நீக்குதல்
- சுதந்திர பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டமை.
- அரசாங்க ஊழியர்களின் ஓய்வூதியம் நீக்கப்பட்டு சம்பளம் குறைக்கப்பட்டு, அவர்கள் பெருந்தோட்டத் துறையில் ஈடுபட ஊக்குவிக்கப்பட்டமை.
- வெளிநாட்டார் குடியேறவும் காணிகளைக் கொள்வனவு செய்யவும் இருந்த வரையறை அகற்றப்பட்டமை.
நீதி
[தொகு]- நாட்டில் நிலவிய பல்வேறு நீதிமுறைகள் ஒழிக்கப்பட்டு, ஒரே நீதி அமைப்பு உருவாக்கப்பட்டமை.
உசாத்துணை
[தொகு]- மெண்டிஸ், ஜீ. ஸி - நம்முன்னோரளித்த அருஞ்செல்வம், முதலாம் பாகம், கொழும்பு அப்போதிக்கரீஸ் கம்பனி, 1969
- புன்னியாமீன் பீ. எம்., - வரலாறு ஆண்டு 11 கண்டி சிந்தனை வட்டம், 1998