இலங்கையின் இடப்பெயர்கள்
இலங்கையின் இடப்பெயர்கள் மொழி, இன அடிப்படையில் பெயரிடப்பட்டவை. இலங்கை அமைந்துள்ள ஊர்களின் பெயர்கள் சிங்களத்திலும் தமிழிலும் மிகையாய் இருந்தாலும், டச்சு, ஆங்கிலம், போர்த்துகேயம், அரபு மொழிகளில் அமைந்த ஊர்களும் உள்ளன. சிங்கள வேர்ச்சொற்களும் தமிழ் வேர்ச்சொற்களும் கலந்த ஊர்ப் பெயர்கள் இரு குமுகாயத்தினரும் ஒற்றுமையுடன் வாழ்ந்ததைக் காட்டுகின்றன. இருப்பினும், தற்போதைய அரசியல் சூழ்நிலையில் இப்பெயர்கள் சூடான விவாதத்தைக் கிளப்பியுள்ளன.[1][2][3]
சிங்களப் பெயர்கள்
[தொகு]சிங்கள ஊர்ப் பெயர்கள் பெரும்பாலும் நிலம், நீர் தொடர்பானவையாகவும், விலங்குகள் தொடர்பானவையாகவும் உள்ளன.
- சிங்க+பிட்டியா (சிங்க் ஊர்}
- வெலி + கம (மண் கிராமம்)
- மொனொரா + கலா (மயில் பாறை)
நிலம் தொடர்பான சொற்கள்:
- கும்புரா (நெல் வயல்)
- தெனியா, வட்டே (தோட்டம்)
- ஹெனா (விளை நிலம்)
- டலவா (புல்வெளி)
- கொல்லை (கொல்லா)
- வெற்றுத் தரை (போத்தா)
சாதிப் பெயர்களைக் கொண்ட ஊர்களும் உள்ளன.
தமிழ்ப் பெயர்கள்
[தொகு]பெரும்பாலான தமிழ்ப் பெயர்கள் சாதி, தொழில், நில வகை, தெய்வங்கள் போன்றவற்றின் பெயர்களைக் கொண்டிருக்கின்றன. ஊர்ப் பெயர்களில் உள்ள சில சொற்கள்: நிலப் பெயர்கள்: மூலை, மலை, ஆறு, குடா, மணல், குழி, ஊர், தோட்டம், கூடல், கரை, முனை, துறை, கிணறு, காணி, வயல், வாய்க்கால், ஏரி
அரபு பெயர்கள்
[தொகு]இலங்கைச் சோனகர் வசிக்கும் பகுதிகளில் அரபு மொழிப் பெயர்களைக் காணலாம். அப்துல் ஹமீத் மாவத்த, ஒராபி பாஷா லேன், பலய சோகன வீதி, புதிய சோனட வீதி, குராஷானி மௌலானா ஒழுங்கை, அவ்வல் zசாவியா, ரிபாஹி தங்கள் ஒழுங்கை, சதாம் உசைன் தெரு
போர்த்துகீச சொற்கள்
[தொகு]போர்த்துகீச ஊர்ப் பெயர்கள் புனிதர்களின் பெயர்களைக் கொண்டவை
ஓல்கொட் மாவத்த, சென் என்தனி ஒழுங்கை, சேர் எட்ரிக் ஒழுங்கை ,
டச்சு ஊர்ப் பெயர்கள்
[தொகு]டச்சு சொற்கள் குறைவான எண்ணிக்கையில் உள்ளவை. இப்பெயர்கள் தமிழ், சிங்கள ஒலிப்புக்கு ஏற்றவாறு மாற்றமடைந்துள்ளன
ஆங்கில ஊர்ப் பெயர்கள்
[தொகு]ஆங்கிலப் பெயர்கள் கொழும்பிலேயே அதிகம் காணப்படுகின்றன. ஸ்டேஸ் புர, கிலிப்டன் லேன், மெசென்ஜர் ஸ்டீட், ஓல்கொட் மாவத்த,