உள்ளடக்கத்துக்குச் செல்

இலக்கணகூற்று மரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இலக்கணகூற்று மரம்[1] அல்லது மூலத்தோற்ற மரம் என்பது தறுவாயில்லா இலக்கணத்தைப் பொறுத்தவரை, சரத்தின் வாக்கிய அமைப்பைக் குறித்துக்காட்டும் ஒழுங்குப்படுத்திய, வேரூன்றிவிட்ட மரம் ஆகும். இலக்கணகூற்று மரம் என்ற சொற்கூறு பெரும்பாலாக கணக்கீட்டு மொழியியலில் தான் பயன்படுத்தப்படுகின்றது; பேச்சு வழக்கில் வாக்கிய அமைப்பு மரம் தான் பயன்படுத்தப்படுகிறது.

உள்ளீட்டு மொழியின் வாக்கிய அமைப்பை உறுதியாக சித்தரிப்பதால், கணக்கீட்டு மொழியியலில் பயன்படுத்தப்படும் சுருக்க வாக்கிய அமைப்பு மரங்களுடன் ஒப்பிடும் போது இலக்கணகூற்று மரங்கள் வேறுபடுகின்றன. இலக்கணத்தை கற்றுக்கொடுக்கும் போது பயன்படுத்தும் ரீட்-கெலாக் வாக்கியவரிவடிவங்களைப் போலல்லாமல், இலக்கணகூற்று மரங்கள் வெவ்வேறு மொழிப்பகுதிகளுக்கு தனித்துவமான சின்ன அறிகுறிகளை பயன்படுத்தாதவை.

வழக்கமாக, இலக்கணகூற்று மரங்கள் பகுதி இலக்கணத்தின் உறவுகளின் (சொற்கூற்று அமைப்பு இலக்கணங்கள்) அடிப்படையிலோ சார்பு இலக்கணத்தின் உறவுகளின் அடிப்படையிலோ தான் வடிவமைக்கப்படுகின்றன. இயற்கை மொழிகளின் வாக்கியங்களுக்காகவும் (இயற்கை மொழி முறையாக்கம்) நிரல் மொழிகளைப் போன்ற கணினி சார்ந்த மொழிகளுக்கான செயலாக்கத்திற்காகவும் இலக்கணகூற்று மரங்களை பயன்படுத்தலாம்.

உருமாற்றும் பிறப்புறுப்புக்குரிய இலக்கணத்தில் பயன்படுத்தப்படும் சொல்கூற்று அறிகுறி அல்லது பீ-அறிகுறி என்பது ஒரு சம்பந்தப்பட்ட கருத்தாகும். சொல்கூற்று அறிகுறி என்பது ஒரு கூற்று அமைப்பின் அடிப்படையில் குறித்துக்காட்டும் மொழியியல் சொல்திறமாகும். இது, ஒரு மரத்தின் வடிவத்திலோ அடைப்புக்குறிக்குளான வெளிப்பாட்டின் மூலமாகவோ சித்தரிக்கப்படலாம். கூற்று அமைப்பு கட்டுப்பாடுகளை அமல்படுத்துவதின் மூலம் உருவாக்கப்படும் இச்சொல்கூற்று அறிகுறிகள், மேலும் உருமாற்றக்குரிய கட்டுப்பாடுகளுக்கு உட்படுகின்றன.

சொல்லுறவுகளின் அடிப்படையிலான இலக்கணகூற்று மரங்கள்

[தொகு]

பகுதி இலக்கணங்களுடைய (சொற்கூற்று அமைப்பு இலக்கணங்கள்) சொல்லுறவுகளின் அடிப்படையிலான இலக்கணகூற்று மரங்கள் முனையக் கணுக்களையும் அம்முனையக் கணுக்களையும் வித்தியாசப்படுத்துகின்றன. உள்புற கணுக்கள் அம்முனையமான இலக்கண வகைகளாலும், இலை கணுக்கள், முனைய வகைகளாலும் பெயரிடப்படுகின்றன. கீழ்வரும் வரைபடம் சொல்லுறவின் அடிப்படையிலான இலக்கணகூற்று மரம் ஒன்றையும், ஆங்கில வாக்கியம் John hit the ball ன் வாக்கிய அமைப்பும் சித்தரிக்கிறது:

Parse tree PSG

இந்த இலக்கணகூற்று மரம் S முதல் தொடங்கி, ஒவ்வொரு இலை கணுவிலும் (John, hit, the, ball) முடியும் முழு அமைப்பாகும். கீழ்வரும் சொற்சுருக்கங்கள் மரத்தில் பயன்படுத்துகின்றன:

  • S என்பது வாக்கியம் ஆகும். இந்த உதாரணத்தில் மேற்தள அமைப்பில் உள்ளது.
  • VP என்பது வினை சொற்றொடர் ஆகும். இது வாக்கியத்தின் பயனிலையாக அமைகிறது.
  • D என்பது துணிகாரணி. இந்த உதாரணத்தில் இது the எனும் நிச்சய பெயர்ச்சொற்குறி ஆகும்.
  • N என்பது பெயர்ச்சொல் ஆகும்.

மரத்தின் ஒவ்வொரு கணுவும் வேர் கணுவாகவோ, கிளை கணுவாகவோ, இலை கணுவாகவோ ஆகும்.[2] வேர் கணு என்பது மேல்புறத்தில் கிளைகளற்ற கணுவாகும். ஒரு வாக்கியத்திற்குள் எப்போதும் வெறும் ஒரே வேர் கணு தான் இருக்கும். கிளை கணு என்பது இரண்டோ அல்லது அதற்கு மேற்பட்ட மகள் கணுக்களை இணைக்கும் தாய் கணுவாகும். ஆனால், இலை கணு என்பது மரத்தின் மற்ற கணுக்களிடம் ஆதிக்கம் செலுத்தாத முனையக் கணுவாகும். S என்பது வேர் கணுவாகும், NP மற்றும் VP என்றவை கிளை கணுக்களாகும், மற்றும் John (N), hit (V), the (D), மற்றும் ball (N) என்றவை எல்லாம் இலை கணுக்களாகும். இலைகள் வாக்கியத்தின் சொல்லமைப்புக் குறிகளாகும்.[3] தாய் கணு என்பது கீழுள்ள கிளையால் இணைக்கப்பட்ட, குறைந்தபட்சம் மற்ற ஒரு கணு கொண்ட கணுவாகும். மேலுள்ள உதாரணத்தில், S என்பது N மற்றும் VP ன் தாயாகும். மகள் கணு என்பது மேலுள்ள கிளையால் இணைக்கப்பட்ட, குறைந்தபட்சம் மற்ற ஒரு கணு கொண்ட கணுவாகும். மேலுள்ள உதாரணத்தில், hit என்பது V ன் மகள் கணுவாகும். இந்த சொல்லுறவுக்கு parent மற்றும் child என்ற சொற்களும் சில வேளைகளில் பயன்படுத்துகின்றன.

சார்பு அடிப்படையிலான இலக்கணகூற்று மரங்கள்

[தொகு]

சார்பு இலக்கணங்களின் சார்பு அடிப்படையிலான இலக்கணகூற்று மரங்கள்[4] அனைத்து கணுக்களையும் முனையக் கணுக்களாய் காண்கின்றனதால், முனைய வகையினங்களுக்கும் அம்முனைய வகையினங்களுக்கும் இடையிலான வித்தியாசத்தை ஒப்புக்கொள்ளா விடுகின்றன. இவை குறைவான கணுக்கள் கொண்டவை என்பதால், பொதுவாக சொல்லுறவுகளின் அடிப்படையிலான இலக்கணகூற்று மரங்களை விட எளியவை.  மேலுள்ள உதாரண வாக்கியத்திற்கான சார்பு அடிப்படையிலான இலக்கணக்குற்று மரம் பின்வருமாறு:

Parse tree DG

இந்த இலக்கணகூற்று மரம், மேற்கண்ட சொல்லுறவுகளின் அடிப்படையிலான இலக்கணகூற்று எதிரிணையில் காணப்பட்ட வாக்கிய வகைகள் (S, VP, மற்றும் NP) இல்லாதது ஆகும். சொல்லுறவுகளின் அடிப்படையிலான இளக்கணகூற்று மரத்தைப் போலவே, வாக்கியப் பகுதி கட்டமைப்பு இதில் ஒப்புக்கொண்டது. இம்மரத்தின் அனைத்து முழுமையான துணைமரமும் ஒரு பகுதியாகும். ஆகவே, இந்த சார்பு அடிப்படையிலான இலக்கணகூற்று மரம், John என்கின்ற எழுவாயையும், the ball என்கின்ற பொருள் பெயர்ச்சொல் கூற்றையும், சொல்லுறவுகளின் அடிப்படையிலான இலக்கணகூற்று மரத்தைப் போலவே, பகுதிகளாய் ஒப்புக்கொள்கிறது.

சொல்லுறவு-சார்பு வேறுபாடு பெரிதாகும். சொல்லுறவுகளின் அடிப்படையிலான இலக்கணகூற்று மரங்கள் பயன்படுத்தும் கூடுதலான வாக்கிய அமைப்பு தேவையானதா அல்லது வெறும் உதவியானதா என்பது தர்க்கத்திற்குரியது.

சொல்கூற்று அறிகுறிகள்

[தொகு]

சொல்கூற்று அறிகுறிகள், அல்லது பீ-அறிகுறிகள், நோம் சோம்சுக்கியாலும் மற்றவர்களாலும் அமைக்கப்பட்ட முற்காலத்திய உருமாற்றும் பிறப்புறுப்புக்குரிய இலக்கணத்தில் அறிமுகப்படுத்தியவை. கூற்றமைப்பு கட்டுப்பாட்டுகளை அமல்படுத்தும் பொழுது, ஒரு வாக்கியத்தின் ஆழ்கட்டமைப்பை குறித்துக் காட்டும் சொல்கூற்று அறிகுறி உருவாகிறது; இதன் பிறகு கூடுதலான உருமாற்றங்களை இது மேற்கொள்ளலாம். சொல்கூற்று அறிகுறிகள் மரங்களின் வடிவத்தில் வழங்கலாம் (சொல்லுறவுகளின் அடிப்படையிலான இலக்கணகூற்று மரங்களைப் பற்றிய மேல் பத்தியில் குறிப்பிட்டதைப் போலவே), ஆனால் குறைவான இடமெடுக்கும் அடைப்புக்குறிக்குளான வெளிப்பட்டின் மூலம் அடிக்கடி வழங்கப்படுகின்றன. உதாரணத்திற்கு, மேலுள்ள சொல்லுறவின் அடிப்படையிலான இலக்கணகூற்று மரத்திற்கு ஒத்திருக்கும் அடைப்புக்குறிக்குளான வெளிப்பாடு, இதைப் போல் வழங்கலாம்:

மரங்களைப் போலவே, அமைப்பின் துல்லியமும் வருணிக்கப்பட்ட விவரங்களும் பயன்படுத்தப்படும் கோட்பாட்டையும் எழுதுபவரின் விருப்பங்களையும் பொறுத்தவை.

மேலும் காணவும்

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. See Chiswell and Hodges 2007: 34.
  2. See Carnie (2013:118ff.) for an introduction to the basic concepts of syntax trees (e.g. root node, terminal node, non-terminal node, etc.).
  3. See Alfred et al. 2007.
  4. See for example Ágel et al. 2003/2006.

மேற்கோள்கள்

[தொகு]

இதர இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலக்கணகூற்று_மரம்&oldid=2517611" இலிருந்து மீள்விக்கப்பட்டது