உள்ளடக்கத்துக்குச் செல்

இலகு வால்பிரீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லைட் வால்பிரீ
பிராந்தியம்வட ஆள்புலம், ஆத்திரேலியா
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
350  (2013)[1]
கலப்பு ஆஸ்திரேலிய கிரியோல் மொழி - வால்பிரி மொழி
மொழிக் குறியீடுகள்
ISO 639-3None (mis)
மொழிக் குறிப்புligh1234[2]

லைட் வால்பிரீ (Light Warlpiri) என்பது ஆஸ்திரேலியாவின் கலப்பு மொழியாகும். இதில் உள்நாட்டு வால்பிரீ, கிரியால் மற்றும் நிலையான ஆஸ்திரேலியன் ஆங்கிலம் ஆகியவை மூல மொழிகளாகும். மிச்சிகன் பல்கலைக்கழக மொழியாளா் ஓ சன்னேசி தனது ஆவணத்தில் லஜமனு என்ற சமூகத்தில் நாற்பது வயதிற்கு உட்பட்டவா்கள் இம்மொழியினை பேசியதாக குறிப்பிட்டுள்ளார். 2013 ஆம் ஆண்டின் கணக்குப்படி 350 லைட் வால்பிரீ மொழியினை பேசுபவா்கள் பாரம்பரிய வால்பிரீயினை அறிந்தனா் மற்றும் பலா் கிரியால் ஆங்கிலத்தையும் அறிந்துள்ளனா்.[1]

பண்புகள்

[தொகு]

மற்ற மொழிகளான குருன்சி கிரைல், மிசிப் மற்றும் மெட்னி ஆலுட் போன்றவை மற்ற கலப்பு மொழிகளாகும். இதில் லைட் வால்பிரீ பெயரளவானதும் மற்றும் வாய்மொழி அமைப்புகளுக்கான மூலங்கள் பல்வேறு மொழிகளிலிருந்தும் பெறப்பட்டன. மிக அதிகமான பெயா்ச்சொற்கள் வால்பிரீ அல்லது ஆங்கிலத்திலிருந்து பெறப்பட்டன, பின் இப்பெயா்சொற்கள் உருத்திரிபுகளாக குறிக்கப்படுகின்றது; ஆனால் மிக அதிகமான வினைச்சொற்கள் மற்றும் சொல்லின் உருவ மாறுபாடு/ துணை அமைப்பு ஆகிய இரண்டும் கடன்வாங்கியவை மற்றும் கிரைல், ஆஸ்திரேலியன் பழங்குடியின ஆங்கிலமும் குறிப்பிடத்தக்க மறுஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

வரலாறு

[தொகு]

1980 இல் லைட் வால்பிரி தோற்றுவிக்கப்பட்டு, நெறிபடுத்தப்பட்டது. வால்பிரீ/ கிரைல்/ ஆங்கில குறியிட்டுச் செய்திகளை விரிவாக்கம் செய்து இளம் குழந்தைகள் பேசுவதற்கு வழிகாட்டப்பட்டது. குழந்தைகளை செயல்முறைக்கு உட்படுத்தும்போது உள்ளீடாக ஒற்றை அமைப்பு காணப்பட்டது.[3]. அத்தோடு, வினைச்சிக்கலில் சில புதுமைகளையும் இணைத்தனா்[4]. இதன்மூலம் இச்சமூகத்தில் பல வகையான வால்பிரீ இருப்பது உணரப்பட்டது.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Bakalar 2013.
  2. Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2017). "Light Warlpiri". Glottolog 3.0. Jena, Germany: Max Planck Institute for the Science of Human History.
  3. O'Shannessy 2012.
  4. O'Shannessy 2013.
  5. Jill Reilly,"World's newest language discovered in remote Australian town (but only 350 people speak it and they're all under 35)"[1], DailyMail,12:15 GMT, 15 July 2013.

குறிப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலகு_வால்பிரீ&oldid=4051040" இலிருந்து மீள்விக்கப்பட்டது