உள்ளடக்கத்துக்குச் செல்

இரோதாவின் ரௌலா வேலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரௌலா வேலா கல்வெட்டு
12ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அல்லது 13ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கவிஞர் ரோதா எழுதிய பிராகிருதக் கவிதை நூலான ரௌலா வேலாவின் தார் கல்வெட்டு

ரௌலா வேலா ( Rāüla vela ) என்பது பன்னிரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த ரோதோ என்ற கவிஞரால் இயற்றப்பட்ட ஒரு கவிதைப் படைப்பு ஆகும். இது இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் உள்ள தார் என்ற இடத்தில் இருந்து ஒரு தனித்துவமான கல்வெட்டில் பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த கல்வெட்டு மும்பை ஆசியச் சங்கத்திலிருந்து தற்போது மும்பையிலுள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் வாஸ்து சங்கராலயத்திற்கு மாற்றப்பட்டது.

மொழி

[தொகு]

கவிதையின் மொழி பல்வேறு சமகால பேச்சுவழக்குகளின் சிறப்பியல்புகளைப் பின்பற்றுகிறது. ஆனால் அடிப்படையான பேச்சுவழக்கான அபபிராம்சாவிற்கும் இந்தியின் ஆரம்ப வடிவங்களுக்கும் இடையில் ஒரு இடைநிலைக் கட்டத்தைக் குறிக்கிறது. [1] எனவே, வட இந்தியாவின் மொழியியல் வரலாற்றில் கல்வெட்டு முதன்மையானது. மொழியிலாளர் அரிவல்லப் பயானி என்பவர் கவிதையை ஆழமாகப் படித்து மொழிபெயர்த்தார். [2] மாடபிரசாத குப்தா என்பவராலும் [3] பின்னர், கைலாஷ் சந்திர பாட்டியா என்பவராலும் மொழியின் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.[4] 1999 ஆம் ஆண்டு திமோதி லென்சு என்பவரால் கல்வெட்டின் மேலதிக ஆய்வு வெளியிடப்பட்டது.[5]

தொல்லியல்

[தொகு]

இந்தப் பதிவின் தொல்லியல் அர்ச்சுனவர்மனின் புகழ்பெற்ற தார் கல்வெட்டுடன் சில ஒற்றுமைகளைக் காட்டுகிறது (சுமார் 1210) இது விஜயஸ்ரீனடிகா என்று அழைக்கப்படும் நாடக வடிவத்தை எடுக்கிறது. [6]

உள்ளடக்கம் மற்றும் வகை

[தொகு]

ரௌலா வேலா, சமசுகிருதம், பிராகிருதம் மற்றும் பிற்கால இலக்கிய பாரம்பரியத்திலிருந்து நன்கு அறியப்பட்ட நகாசிகா எனப்படும் ஒரு கவிதை வகையைச் சேர்ந்தது. இந்த படைப்புகளின் நோக்கம் நாயகன் அல்லது நாயகியின் பெருமை, வசீகரம் மற்றும் அழகு பற்றிய கவிதை விளக்கத்தை வழங்குவதே. அதோடு அவர்களின் ஆடைகள் மற்றும் ஆபரணங்கள் பற்றிய விவரங்களையும் வழங்குகிறது. இந்த வகையின் நீண்ட வரலாறு குமாரசம்பவத்தில் உமா பற்றிய விளக்கத்துடன் தொடங்குகிறது. மேலும் பிற்கால மொழிகளில், குறிப்பாக வைணவ பாரம்பரியத்தில் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது. ஆரம்பகால புதிய இந்தோ-ஆரிய இலக்கியத்தில் ஆரம்பகால நகாசிகாவாக ரௌலா வேலா தனித்துவமானது.[7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Richard Salomon, Indian Epigraphy: A Guide to the Study of Inscriptions in Sanskrit, Prakrit, and the Other Indo-Aryan Languages (New York: Oxford University Press, 1998), p. 103.
  2. Harivallabh Chunilal Bhayani, Rāula-vela of Roḍa: a rare poem of c. twelfth century in early Indo-Aryan (Ahmedabad: Parshva Prakashan, 1994).
  3. Mātāprasāda Gupta, Rāula Vela aura usakī bhāṣā (Ilāhābāda: Mitra Prakāśana, 1965).
  4. Kailāśa Candra Bhāṭiyā, Rāulavela: prārambhika Hindī kā pahalā śilāṅkita kāvya (Naī Dillī: Takshaśilā Prakāśana, 1983).
  5. Timothy Lenz, "A New Interpretation of the Rāula-Vela Inscription," in Studies in Early Modern Indo-Aryan Languages, Literature, and Culture : Research Papers, 1992-1994, Presented at the Sixth Conference on Devotional Literature in New Indo-Aryan Languages, Held at Seattle, University of Washington, 7–9 July 1994, edited by A. W. Entwistle (New Delhi: Manohar Publishers & Distributors, 1999), pp. 199-207.
  6. Harivallabh Chunilal Bhayani, Rāula-vela of Roḍa: a rare poem of c. twelfth century in early Indo-Aryan (Ahmedabad: Parshva Prakashan, 1994), p. v.
  7. Harivallabh Chunilal Bhayani, Rāula-vela of Roḍa: a rare poem of c. twelfth century in early Indo-Aryan (Ahmedabad: Parshva Prakashan, 1994): xxxiv
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரோதாவின்_ரௌலா_வேலா&oldid=3919081" இலிருந்து மீள்விக்கப்பட்டது