இரேனியம் மூவாக்சிநைட்ரேட்டு
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
| |
இனங்காட்டிகள் | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
ReO3NO3 | |
வாய்ப்பாட்டு எடை | 296.21 கி/மோல் |
தோற்றம் | வெளிர் மஞ்சள் திண்மம்[1] |
உருகுநிலை | 75 °C (167 °F; 348 K)[1] (சிதையும்) |
வினைபுரியும் | |
கரைதிறன் | கார்பன் டெட்ராகுளோரைடு மற்றும் இருகுளோரோமெத்தேன் ஆகிய கரைப்பான்களில் கரையாது. soluble in டைநைட்ரசன் பெண்டாக்சைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இரேனியம் மூவாக்சிநைட்ரேட்டு (Rhenium trioxynitrate) என்பது ReO3NO3 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இரேனியம்(VII) மூவாக்சைடு நைட்ரேட்டு, இரேனியம் டிரையாக்சைடு நைட்ரேட்டு என்ற பெயர்களாலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. வெண்மையான திடப்பொருளாகக் காணப்படும் இச்சேர்மமம் ஈரமான காற்றில் உடனடியாக நீராற்பகுப்புக்கு உட்படுகிறது.[1]
தயாரிப்பு
[தொகு]இரேனியம் மூவாக்சைடு குளோரைடுடன் (ReO3Cl) இருநைட்ரசன்பெண்டாக்சைடைச் சேர்த்து வினைபுரியச் செய்து இரேனியம் மூவாக்சிநைட்ரேட்டு தயாரிக்கப்படுகிறது. இரேனியம் மூவாக்சைடுடன் குளோரினைச் சேர்த்து வினைக்குத் தேவையான இரேனியம் மூவாக்சைடு குளோரைடு தயாரித்துக் கொள்ளப்படுகிறது.:[1]
- ReO3Cl + N2O5 → ReO3NO3 + NO2Cl
வினைகள்
[தொகு]இரேனியம் மூவாக்சைடு குளோரைடுக்கு மாற்றாக இரேனியம்(VII) ஆக்சைடு சேர்மத்தையும் பயன்படுத்தலாம். இவ்வாறு தயாரிக்கையில் மாசுநிறந்த இரேனியம் மூவாக்சிநைட்ரேட்டு உருவாகும். இச்சேர்மம் நீருடன் வினைபுரிந்து பெர் இரேனிக் அமிலம் மற்றும் நைட்ரிக் அமிலத்தைக் கொடுக்கிறது.
இரேனியம் மூவாக்சிநைட்ரேட்டை 75 °செல்சியசு வெப்பநிலைக்கு மேல் சூடாக்கும்போது இரேனியம்(VII) ஆக்சைடு, நைட்ரசன் டை ஆக்சைடு மற்றும் ஆக்சிசனாகச் சிதைகிறது:[1]
- 4 ReO3NO3 → 2 Re2O7 + 2 NO2 + O2
இரேனியம் மூவாக்சிநைட்ரேட்டுடன் இருநைட்ரசன் பெண்டாக்சைடு சேர்மங்களின் கலவையை கிராபைட்டுடன் சேர்த்து வினைபுரியச் செய்தால் கிராபைட்டு இடைத்திணிப்பு சேர்மங்களை உருவாக்கலாம்.[2]
கட்டமைப்பு
[தொகு]எக்சுகதிர் விளிம்பு விளைவு மற்றும் அகச்சிவப்பு நிறமாலையியல் சான்றுகள் NO2+ReO4– அல்லது Re2O7·N2O5 வாய்பாடுகளை நிராகரிக்கின்றன. மாறாக ஒற்றைப்பல்விளிம்பு நைட்ரேட்டு ஈந்தணைவி கொண்ட பலபடிசார் கட்டமைப்பை பரிந்துரைக்கின்றன.[1][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 C. C. Addison; R. Davis; N. Logan (1967). "Rhenium trioxide nitrate" (in en). Journal of the Chemical Society A: Inorganic, Physical, Theoretical: 1449–1451. doi:10.1039/J19670001449.
- ↑ P. Scharff; E. Stumpp; M. Höhne; Y. X. Wang (1991). "Upon the intercalation of rhenium heptoxide and rhenium trioxide nitrate into graphite" (in en). Carbon 29 (4–5): 595–597. doi:10.1016/0008-6223(91)90125-3.
- ↑ Romão, Carlos C.; Kühn, Fritz E.; Herrmann, Wolfgang A. (1997). "Rhenium(VII) Oxo and Imido Complexes: Synthesis, Structures, and Applications". Chemical Reviews 97 (8): 3197–3246. doi:10.1021/cr9703212. பப்மெட்:11851489.