உள்ளடக்கத்துக்குச் செல்

இரேனியம் இருசெலீனைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரேனியம் இருசெலீனைடு

d: எலக்ட்ரான் நுண்ணோக்கியால் அலகிட்ட ஒரு குறிப்பிட்ட இணைகர வடிவ ReSe2 சீவலின் நுண்வரைபடம். அளவீடு பட்டி 1 µm.
g: ReSe2 அணுக் கோவையின் மேல் தோற்றம்.
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பிசு(செலானிலிடின்)இரேனியம்
வேறு பெயர்கள்
இரேனியம்(IV) செலீனைடு
இனங்காட்டிகள்
12038-64-1
ChemSpider 74776
EC number 234-879-9
InChI
  • InChI=1S/2Se.Re
    Key: CUYHGAIVHCHFIA-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 82865
  • [Se]=[Re]=[Se]
பண்புகள்
ReSe2
வாய்ப்பாட்டு எடை 344.13 கிராம்/மோல்[1]
மணம் மணமற்றது
அடர்த்தி 9.22 கிராம்/செ.மீ3[2]
கரையாது
Band gap ~1.2 எலக்ட்ரான் வோல்ட்டு (300 கெல்வின்), மறைமுகமாக[3]
கட்டமைப்பு
படிக அமைப்பு முச்சரிவு, aP12, இடக்குழு P1, No 2[2]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் இரேனியம்(IV) ஆக்சைடு
இரேனியம் இருசல்பைடு
இரேனியம் டைதெலூரைடு
ஏனைய நேர் மின்அயனிகள் மாங்கனீசு(II) இருசெலீனைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

இரேனியம் இருசெலீனைடு (Rhenium diselenide) என்பது ReSe2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும். இதை இரேனியம் டைசெலீனைடு என்றும் அழைப்பார்கள். அடுக்குக் கட்டமைப்பை கொண்டுள்ள இச்சேர்த்தின் ஒவ்வொரு அடுக்கிலும் அணுக்கள் வலிமையாகப் பிணைக்கப்பட்டுள்ளன. மேலும் பலவீனமான வாண்டர்வால்சு பிணைப்புகளால் இவ்வடுக்குகள் ஒன்றாகப் பிணைக்கப்பட்டுள்ளன. எனவே ஒட்டுமொத்தப் பிணைப்பிலிருந்து அடுக்குகளை எளிமையாக உரித்துப் பிரிக்கமுடியும்.

தயாரிப்பு

[தொகு]
Se மற்றும் ReO3 இலிருந்து ReSe2 வளரும் திட்ட வரைபடம்

மிகச் சிறிய தடிமனுடைய மூன்று- அணு அடுக்குகள் கொண்ட இரேனியம் இருசெலீனைடு சேர்மத்தை சுற்றுச்சூழல் அழுத்தத்தில் வேதியியல் ஆவிப்படிவு முறையில் தயாரிக்க முடியும். ஆர்கான் மற்றும் ஐதரசன் வாயுக்களின் கலவை ஒரு குழாயின் வழியாக செலுத்தப்படுகிறது. இக்குழாயின் முனைகள் வெவ்வேறு வெப்பநிலையில் வைக்கப்படுகின்றன. தளப்பொருளும் ReO3 தூளும் சூடான முனையில் வைக்கப்பட்டு 750 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தப்படுகிறது. செலீனியம் தூள் குளிர் முனையில் வைக்கப்பட்டு 250 பாகை செல்சியசு வெப்பநிலை பராமரிக்கப்படுகிறது[4]

2 ReO3 + 7 Se → 2 ReSe2 + 3 SeO2.

பண்புகள்

[தொகு]
ReSe2 அணிக்கோவையின் மேல் தோற்றம் (இடது) மற்றும் பக்கவாட்டுத் தோற்றம்

இடைநிலை உலோகங்களின் மற்ற சால்கோகெனைடுகள் போல இரேனியமும் அடுக்குக் கட்டமைப்பை ஏற்றுள்ளது. இருப்பினும் மற்ற அடுக்கு சால்கோகெனைடுகள் உயர் அறுகோணக சீரொழுங்கில் உள்ளன. இரேனியம் இருசெலீனைடு மிகக் தாழ்ந்த முச்சரிவு சீரொழுங்கை ஏற்றுள்ளது. இச்சீரொழுங்கு ஒட்டுமொத்த கட்டமைப்பு நிலையிலிருந்து ஒற்றை அடுக்கிற்கு மாறுவதில்லை [4].

மேற்கோள்கள்

[தொகு]
  1. Haynes, William M., ed. (2011). CRC Handbook of Chemistry and Physics (92nd ed.). Boca Raton, FL: CRC Press. p. 4.84. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1439855110.
  2. 2.0 2.1 Wildervanck, J.C; Jellinek, F (1971). "The dichalcogenides of technetium and rhenium". Journal of the Less Common Metals 24: 73. doi:10.1016/0022-5088(71)90168-8. 
  3. Dumcenco, D; Huang, Y. S; Liang, C. H; Tiong, K. K (2008). "Optical characterization of Au-doped rhenium diselenide single crystals". Journal of Applied Physics 104 (6): 063501. doi:10.1063/1.2977682. 
  4. 4.0 4.1 Jiang, Shaolong; Hong, Min; Wei, Wei; Zhao, Liyun; Zhang, Na; Zhang, Zhepeng; Yang, Pengfei; Gao, Nan et al. (2018). "Direct synthesis and in situ characterization of monolayer parallelogrammic rhenium diselenide on gold foil". Communications Chemistry 1. doi:10.1038/s42004-018-0010-6. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரேனியம்_இருசெலீனைடு&oldid=4013927" இலிருந்து மீள்விக்கப்பட்டது