இருவர் (தொடர்)
இருவர் | |
---|---|
வகை | நாடகத் தொடர் மர்மப் புனைவு |
எழுத்து | பிரேமா பொன்ராஜூ ராஜா தமிழ்மாறன் நளன் அப்பண்ணா |
திரைக்கதை | குமரன் சுந்தரம் நளன் அப்பண்ணா வசனம் ராஜா தமிழ்மாறன் |
இயக்கம் | குமரன் சுந்தரம் பாலா சுப்பிரமணியம் |
நடிப்பு | இந்திரா சந்திரன் காயத்திரி சேகரன் விஷ்ணு ஆனந்த் வர்மன் ஜபு டீன் ஃபாரூக் |
முகப்பு இசை | விக்னேஷ் சரவணன் |
நாடு | சிங்கப்பூர் |
மொழி | தமிழ் |
அத்தியாயங்கள் | 63 |
தயாரிப்பு | |
தயாரிப்பாளர்கள் | ராஜா தமிழ்மாறன் |
தொகுப்பு | ஸ்டீவன் பிரகாஷ் |
ஓட்டம் | 22-63 நிமிடங்கள் |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | வசந்தம் (சிங்கப்பூர் தொலைக்காட்சி) |
ஒளிபரப்பான காலம் | 11 திசம்பர் 2016 29 மார்ச்சு 2017 | –
இருவர் (ஆங்கிலத் தலைப்பு: தி இன்செப்பரபல்ஸ்) என்பது 2016 ஆம் ஆண்டு ஒளிபரப்பான சிங்கப்பூர் நாட்டு தமிழ்மொழி நாடக மற்றும் மர்ம தொலைக்காட்சி தொடர் ஆகும். குமரன் சுந்தரம் இயக்கிய இத்தொடரை ராஜா தமிழ்மாறன் தயாரித்திருந்தார். இந்த தொடர் 11 திசம்பர் 2016 ஆம் ஆண்டு முதல் 29 மார்ச்சு 2017 ஆம் ஆண்டு வரை மீடியாக்கார்ப் வசந்தம் அலைவரிசையில் ஒளிபரப்பாகி, 63 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.[1]
கதை
[தொகு]பிரபலமான ஆங்கில எழுத்தாளர் சகானா, புதியதாக தனக்கு தோன்றும் தமிழ்க்கதை ஒன்றை எழுதத் தொடங்குகிறார். அந்தக் கதையில் நடப்பது எல்லாம், தன் வாழ்விலும் நடப்பதைக் கண்டு, கதைக்கும் தனக்குமான தொடர்பு வெறும் காகிதத்தோடு முடிவதில்லை என்பதை உணர்கிறார்.
நடிப்பு
[தொகு]முக்கிய கதாப்பாத்திரங்கள்
[தொகு]- சகானாவாக இந்திரா சந்திரன்.
- பைரவியாக காயத்திரி சேகரன்
- நந்தாவாக விஷ்ணு ஆனந்த்
- அமரனாக வர்மன் சந்திரமோகன்
- அகிலனாக ஜபு டீன் ஃபாரூக்
இதர கதாப்பாத்திரங்கள்
[தொகு]- நரேஷாக பாலகுமரன்
- நிவேதாவாக திவ்யா ரவீன்
- பிரதாப்பாக லிங்கம் முத்துசாமி
- பார்வதியாக ஜமுனா ராணி
- சோமுவாக குணசீலன்
- லக்ஷ்மியாக கலையரசி
- நிர்மலாவாக விமலா வேலு
- ராதாவாக விக்னேஸ்வரி சே
- மற்றும் பலர்
ஒளிபரப்பு
[தொகு]11 திசம்பர் 2016 அன்று இத்தொடரின் முதற்பகுதி ஒரு மணிநேர சிறப்புப்பகுதியாக ஒளிபரப்பானது. மற்ற அனைத்து பகுதிகளும் தோராயமாக இருபது நிமிடங்கள் ஓடக்கூடியவை. மிகுந்த வரவேற்பை அடுத்து இத்தொடரின் இறுதிப்பகுதியும் 29 மார்ச்சு 2017 அன்று ஒரு மணிநேர சிறப்புப் பகுதியாக வெளியானது.
இசை
[தொகு]இத்தொடரின் பின்னணி இசை விக்னேஷ் சரவணனனால் அமைக்கப்பட்டது. இத்தொடரில் இரு பாடல்கள் இடம்பெற்றன. அவை ஒலித்தடப் பட்டியலாக கீழே வரிசைப் படுத்தப் பட்டுள்ளன.
ஒலித்தடப்பட்டியல் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்கள் | நீளம் | |||||||
1. | "நானே இருவர் (முகப்புப் பாடல்)" | கஸ்தூரி | 1:23 | |||||||
2. | "ராசாத்தி" | அஜீஷ் | 3:02 |
மேற்கோள்கள்
[தொகு]- வசந்தம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தமிழ்த் தொலைக்காட்சி நாடகங்கள்
- சிங்கப்பூர் தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தமிழ் காதல் தொலைக்காட்சி நாடகங்கள்
- தமிழ் கனவுருப்புனைவு தொலைக்காட்சி தொடர்கள்
- தமிழ் மர்ம தொலைக்காட்சி தொடர்கள்
- 2020களில் தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- 2016 இல் தொடங்கிய தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- 2017 இல் நிறைவடைந்த தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்