இருபீனைல் சல்போன்
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
1,1′-சல்போனைல்யிருபென்சீன் | |
வேறு பெயர்கள்
இருபீனைல் சல்போன், டைபீனைல் சல்போன்
| |
இனங்காட்டிகள் | |
127-63-9 | |
ChEBI | CHEBI:78360 |
ChemSpider | 29117 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 31386 |
| |
UNII | V25W2CFS3M |
பண்புகள் | |
C12H10O2S | |
வாய்ப்பாட்டு எடை | 218.27 g·mol−1 |
உருகுநிலை | 123 °C (253 °F; 396 K) |
கொதிநிலை | 379 °C (714 °F; 652 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இருபீனைல் சல்போன் (Diphenyl sulfone) என்பது C12H10O2S என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். (C6H5)2SO2 என்ற அமைப்பு வாய்பாட்டாலும் இச்சேர்மத்தை அடையாளப்படுத்தலாம். டைபீனைல் சல்போன் என்ற பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. இது கரிம கரைப்பான்களில் கரையக்கூடிய ஒரு வெள்ளை நிற திடப்பொருளாகும். உயர் வெப்பநிலை கரைப்பானாக இது பயன்படுகிறது. இத்தகைய உயர் வெப்பநிலை கரைப்பான்கள் மிகவும் கடினமான பலபடிகளை செயலாக்க பயனுள்ளதாக இருக்கும். எ.கா:பாலியீத்தர் ஈதர் கீட்டோன். இது மிகவும் சூடான கரைப்பான்களில் மட்டுமே கரைகிறது.
கந்தக அமிலம் மற்றும் ஒலியம் சேர்த்து பென்சீனை சல்போனேற்றம் செய்வதன் மூலம் இருபீனைல் சல்போன் உற்பத்தி செய்யப்படுகிறது. வழக்கமான செயல்முறைகளில் பென்சீன்சல்போனிக் அமிலம் ஓர் இடைநிலை ஆகும்.[1] பென்சீன்சல்போனைல் குளோரைடு மற்றும் பென்சீனில் இருந்தும் இருபீனைல் சல்போன் தயாரிக்கப்படுகிறது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Otto Lindner, Lars Rodefeld "Benzenesulfonic Acids and Their Derivatives" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry 2005, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a03_507
- ↑ Roger Adams, C. S. Marvel, H. T. Clarke, G. S. Babcock, and T. F. Murray (1921). "Benzenesulfonyl chloride". Organic Syntheses 1: 21. http://www.orgsyn.org/demo.aspx?prep=CV1P0084.; Collective Volume, vol. 1, p. 84