உள்ளடக்கத்துக்குச் செல்

இருகுளோரோ அசிட்டால்டிகைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இருகுளோரோ அசிட்டால்டிகைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
2,2-இருகுளோரோயெத்தனால்
வேறு பெயர்கள்
இருகுளோரோயெத்தனால், டைகுளோரோயெத்தனால்
இனங்காட்டிகள்
79-02-7 Y
ChEBI CHEBI:34214
EC number 201-169-5
InChI
  • InChI=1S/C2H2Cl2O/c3-2(4)1-5/h1-2H
    Key: NWQWQKUXRJYXFH-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C14858
பப்கெம் 6576
  • C(=O)C(Cl)Cl
UNII 9GT3DHH725
UN number 1993
பண்புகள்
C2H2Cl2O
வாய்ப்பாட்டு எடை 112.94 g·mol−1
அடர்த்தி 1.4 கி/மிலி
உருகுநிலை −50 °C (−58 °F; 223 K)
கொதிநிலை 88 °C (190 °F; 361 K)
நீரேற்றாக உருவாகும்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

இருகுளோரோ அசிட்டால்டிகைடு (Dichloroacetaldehyde) என்பது C2H2Cl2O என்ற மூலக்கூற்று வாய்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். HCCl2CHO என்ற வேதியியல் அமைப்பு வாய்ப்பாடாகவும் இதை குறிப்பிடலாம். ஒற்றைக்குளோரோ அசிட்டால்டிகைடு, முக்குளோரோ அசிட்டால்டிகைடு என மேலும் இரண்டு குளோரினேற்றம் பெற்ற அசிட்டால்டிகைடுகளுடன் சேர்ந்து மூன்று குளோரோ அசிட்டால்டிகைடுகள் உள்ளன.

பண்புகள் மற்றும் வினைகள்[தொகு]

இருகுளோரோ அசிட்டால்டிகைடு அதிக அளவில் ஆவியாகும் ஒரு திரவமாகும். தண்ணீரில் எளிதில் கரைந்து நீரேற்றுகளை உருவாக்கும். தண்ணீருடன் வினைபுரியும் போது ஓரிடத்து டையால் என்றும் ஒற்றை நீரேற்று என்றும் அழைக்கப்படும் 2,2-இருகுளோரோ-1,1-எத்தேன் டையால் உருவாகிறது.[1]

ஆல்டிகைடின் நீரேற்றம்

இருகுளோரோ அசிட்டால்டிகைடை சூடுபடுத்தும்போது சிதைவடையும். ஆண்டிமனி முக்குளோரைடு, இரும்பு(III) குளோரைடு, அலுமினியம் குளோரைடு, வெள்ளீயம்(IV) குளோரைடு அல்லது போரான் முப்புளோரைடு போன்ற லூயிசு அமிலங்களுடன் வினைபுரியும் போது முப்படிச் சேர்மமான அறுகுளோரோபாரால்டிகைடு (2,4,6-திரிசு(இருகுளோரோமெத்தில்)-1,3,5-மூவாக்சேன்) உருவாகிறது. [1] இந்த முப்படிச் சேர்மம் நிறமற்ற படிகங்களாக காணப்படுகிறது. 131–132 °செல்சியசு வெப்பநிலையில் இது உருகும். கொதிநிலையான 210-220 ° செல்சியசு வெப்பநிலையில் இருகுளோரோ அசிட்டால்டிகைடு சிதைவடைகிறது.[1]

அறுகுளோரோபாரால்டிகைடு உருவாக்கம்

இலித்தியம் அலுமினியம் ஐதரைடு சேர்மத்துடன் சேர்த்து வினைபுரியச் செய்தால் ஒடுக்க வினை நிகழ்ந்து இருகுளோரோயெத்தனால் உருவாகிறது.[2]

பயன்கள்[தொகு]

புற்றுநோய் சிகிச்சையில் பயன்படும் மைட்டோடேன் போன்ற பிற இரசாயன சேர்மங்களை உற்பத்தி செய்ய இருகுளோரோ அசிட்டால்டிகைடு பயன்படுத்தப்படுகிறது.[3] குளோரோபென்சீனுடன் சேர்த்து ஆவிசுருக்க வினைக்கு உட்படுத்தினால் இருகுளோரோயிருபீனைல்யிருகுளோரோயீத்தேன் என்ற பூச்சிக்கொல்லி உருவாகிறது:[1]

தயாரிப்பு[தொகு]

அசிட்டால்டிகைடு அல்லது பாரால்டிகைடை குளோரினேற்றம் செய்வதன் மூலம் இருகுளோரோ அசிட்டால்டிகைடைத் தயாரிக்கலாம். குளோரின் மற்றும் நீரைப் பயன்படுத்தி 1,2-இருகுளோரோயெத்திலீனை ஐப்போகுளொரினேற்றம் செய்தால் தூய இருகுளோரோ அசிட்டால்டிகைடு உருவாகும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Jira, R.; Kopp, E.; McKusick, B.C.; Röderer, G.; Bosch, A.; Fleischmann, G.: Chloroacetaldehydes in Ullmann’s Encyclopedia of Industrial Chemistry, 2012 Wiley-VCH Verlag GmbH & Co. KGaA, Weinheim, எஆசு:10.1002/14356007.a06_527.pub2.
  2. Sroog, C. E.; Woodburn, H. M. (1952). "2,2-Dichloroethanol". Organic Syntheses 32: 46. doi:10.15227/orgsyn.032.0046. 
  3. Ullmann, Fritz (2000). Ullmann's Encyclopedia of Industrial Chemistry. Vol. 1 (6th ed.). Germany: Wiley. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783527306732.