இரிம்பிளியம்
இரிம்பிளியம்
வலியக்குன்னு | |
---|---|
கணக்கெடுப்பு ஊர் | |
ஆள்கூறுகள்: 10°52′0″N 76°5′0″E / 10.86667°N 76.08333°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | மலப்புறம் |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 27,075 |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 679572 |
வாகனப் பதிவு | KL- |
அருகில் உள்ள நகரம் | மலப்புறம் |
இரிம்பிளியம் (Irimbiliyam) என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள மலப்புரம் மாவட்டத்தில் உள்ள வளஞ்சேரிக்கு அருகிலுள்ள ஒரு மக்கள் தொகை கணக்கெடுப்பு ஊராகும். [1] இந்த ஊரை ஒட்டி மங்கேரி, அங்காடி, மாஸ்கோ, சாப்பும்பாடி மற்றும் பள்ளிப்பாடி, திருநிலம் போன்ற சிறிய கிராமங்கள் நிறைய உள்ளன.
மக்கள்தொகையியல்
[தொகு]2001[update] இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி, இரிம்பிளியத்தின் மக்கள் தொகை 27075 ஆகும். இதில் ஆண்களின் எண்ணிக்கை 12898 என்றும், பெண்களின் எண்ணிக்கை 14177 என்றும் உள்ளது.[1]
போக்குவரத்து
[தொகு]இரிம்பிலியம் கிராமம் குட்டிப்புரம் நகரத்தின் வழியாக இந்தியாவின் பிற பகுதிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை எண்.66 எடப்பல் வழியாக செல்கிறது. அச்சாலையானது வடக்கு பகுதி கோவா மற்றும் மும்பையுடன் இணைகிறது. தெற்கு பகுதி கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தை இணைக்கிறது. தேசிய நெடுஞ்சாலை எண்.966 பாலக்காடு மற்றும் கோயம்புத்தூரை இணைக்கிறது. அருகிலுள்ள வானூர்தி நிலையம் கோழிக்கோடு பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். அருகிலுள்ள பெரிய தொடருந்து நிலையம் குட்டிப்புரம் மற்றும் பள்ளிபுரம் தொடருந்து நிலையங்கள் ஆகும்.