இரா. மோகன்
Appearance
இரா. மோகன் | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1980 - 1984 | |
முன்னையவர் | பார்வதி கிருஷ்ணன் |
பின்னவர் | சி. கே. குப்புசுவாமி |
தொகுதி | கோயம்புத்தூர் |
சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1989 - 1991 | |
முன்னையவர் | இரா. செங்காளியப்பன் |
பின்னவர் | பி. கோவிந்தராசு |
தொகுதி | சிங்காநல்லூர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | கோயம்புத்தூர், தமிழ்நாடு | சூலை 3, 1943
இறப்பு | 10 திசம்பர் 2024 கோயம்புத்தூர், தமிழ்நாடு | (அகவை 81)
அரசியல் கட்சி | திராவிட முன்னேற்றக் கழகம் |
துணைவர் | சுகுணா |
பெற்றோர் | ந. ரெங்கசாமி |
வாழிடம் | கோயம்புத்தூர், தமிழ்நாடு |
இரா. மோகன் (Era. Mohan, பிறப்பு: 3 ஜூலை, 1943 - 10 திசம்பர் 2024) ஓர் இந்திய அரசியல்வாதியும், 7 ஆவது மக்களவையின் உறுப்பினர் ஆவார். இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தை சார்ந்தவர். தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியிலிருந்து போட்டியிட்டு மக்களவைக்குச் சென்றவர்.[1] பின்னர் 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று தமிழ்நாடு சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] இவர் கவரா நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர்.[3]
மறைவு
[தொகு]இவர் டிசம்பர் 10, 2024 அன்று காலமானார்.[4][5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Indian Parliamentary Companion: Who's who of Members of Lok Sabha. Lok Sabha Secretariat. 2003. p. 323.
- ↑ "Tamil Nadu Assembly Election Results in 1989".
- ↑ "தி.மு.க.,வுக்கு எதிராக நாயுடு சங்கம் தீர்மானம்". தினமலர் நாளிதழ் (21 மார்ச் 2011).
- ↑ "திமுக முன்னாள் எம்.பி இரா.மோகன் காலமானார்!". தி இந்து (டிசம்பர் 10, 2024)
- ↑ திமுக முன்னாள் எம்.பி இரா.மோகன் காலமானார். தினத்தந்தி நாளிதழ் (டிசம்பர் 10, 2024).